ஜேக்கப் சகாயகுமார் அருணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேக்கப்
Jacobworldrecord3.jpg
பிறப்புஜேக்கப் சகாயகுமார் அருணி
சூன் 4, 1974(1974-06-04)
உத்தமபாளையம், தமிழ்நாடு
இறப்புநவம்பர் 4, 2012(2012-11-04) (அகவை 38)
சென்னை
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுசமையல் கலை நிபுணர்

ஜேக்கப் என்ற 'ஜேக்கப் சகாயகுமார் அருணி[1] (சூன் 4, 1974 - நவம்பர் 4, 2012), சென்னையைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர். ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்[2] உள்ளிட்ட பலருக்கும் உணவு சமைத்து கொடுத்துள்ளார். பல்வேறு பெரிய உணவங்களுக்கும் தலைமை சமையற்காரராக[2] பணி புரிந்துள்ள இவர், சங்கரா வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங்க் துறையின் இயக்குனராக இருந்தார்.[2]

இளமைக் காலம்[தொகு]

இவர் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர்.[3] இவர் நான்கு வயதில்[4] தாய், மருத்துவர் விமலா அருணியிடமிருந்து[1] சமையல் கலை கற்றுக்கொண்டதாகவும், 14-வயதில்[5] இருந்து சமையல் பயிற்சி பெற்றதாகவும் பல்வேறு கருத்து நிகழ்கிறது. இவர் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர்.[4][1]

கின்னஸ் விருது[தொகு]

கடந்த 2010–ம் ஆண்டு மார்ச் மாதம் 24 மணி நேரத்தில் 485 வகையான உணவுகளை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்.[4][5][6][7]

நூல்கள்[தொகு]

 • மணக்கும் தமிழகம் [8]
 • கிச்சன் கிளினிக்[9]
 • ஆஹா என்ன ருசி - அசைவ சமையல்[9]
 • ஆஹா என்ன ருசி - சைவ சமையல்[9]

நிகழ்ச்சிகள்[தொகு]

சன் தொலைக்காட்சியில், ஆஹா என்ன ருசி என்ற சமையல் தொடரில் தன்னுடைய சமையல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்களித்து வந்தார்.[10]

இறப்பு[தொகு]

மாரடைப்புக் காரணமாக தனியார் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 05,நவம்பர்,2012 அன்று காலமானார்.[10]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Chef Jacob Sahaya Kumar Aruni dies of heart attack in Chennai". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
 2. 2.0 2.1 2.2 "Jacob’s kitchen no more". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
 3. ""ஆஹா என்ன ருசி" புகழ் ஜேக்கப் திடீர் மரணம்!". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
 4. 4.0 4.1 4.2 "சமையல் நிபுணர் மாரடைப்பால் ஜேக்கப் மரணம்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
 5. 5.0 5.1 "சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்த செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
 6. "சன் டிவி சமையல் கலை நிபுணர் செஃப் ஜேக்கப் மரணம்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
 7. "‘கின்னஸ்’ சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
 8. மணக்கும் தமிழகம் ( பகுதி 1- வெஜிடேரியன்)
 9. 9.0 9.1 9.2 "எழுத்தாளர் (Author) - செஃப் ஜேக்கப்() » பக்கம் - 1". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
 10. 10.0 10.1 "சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்த செஃப் ஜேக்கப் காலமானார்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.