ஜெ. லோகாம்பாள்
தோற்றம்
ஜெ. லோகாம்பாள் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | எஸ். நூர் முகமது |
| பின்னவர் | சி. வேலாயுதம் |
| தொகுதி | பத்மனாபபுரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 மே 1953 குமுளூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயம் |
ஜெ. லோகாம்பாள் (J Logambal) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி அருகே உள்ள குமுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த இவர், கடந்த 1991 சட்டப்பேரவைத் தேர்தலில்,[1] திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி தொகுதியிலிருந்து போட்டியிட்டு திமுக வேட்பாளரான கே. என். நேருவைத் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்றார்.[2] இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் கே. என். நேருவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜெ. லோகாம்பாள் உடல்நலக் குறைவினால் 2021 அக்டோபர் 28 அன்று இறந்தார். இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 479-480.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "🗳️ J Logambal, Lalgudi Assembly Elections 1991 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". LatestLY (in ஆங்கிலம்). Retrieved 2025-05-08.
- ↑ "திருச்சி காங்கிரஸ் முன்னாள் பெண் எம்எல்ஏ காலமானார்". Hindu Tamil Thisai. 2021-10-29. Retrieved 2025-05-08.