ஜெ. பிரான்சிஸ் கிருபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜெ. பிரான்சிஸ் கிருபா (1974 - 16, செப்டம்பர், 2021) ஒரு தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.

எழுத்துப் பணிகள்[தொகு]

இவர் கவிதை, புதினம் எழுதியுள்ளார். மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் எனும் வகைப்பாட்டில் விருது பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.

படைப்புகள்[தொகு]

புதினம்[தொகு]

 • கன்னி

கவிதை தொகுப்புகள்[தொகு]

 • மல்லிகைக் கிழமைகள்
 • சம்மனசுக் காடு
 • ஏழுவால் நட்சத்திரம்
 • நிழலன்றி ஏதுமற்றவன்
 • மெசியாவின் காயங்கள்
 • வலியோடு முறியும் மின்னல்கள்.
 • பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

விருதுகள்[தொகு]

 • சுந்தரராமசாமி விருது - கவிதைக்கான விருது (2008)
 • சுஜாதா விருது - சம்மனசுக்காடு (2017)[1]
 • மீரா விருது
 • ஆனந்த விகடன் விருது

மறைவு[தொகு]

இவர் 16 செப்டம்பர் 2021 அன்று காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._பிரான்சிஸ்_கிருபா&oldid=3293992" இருந்து மீள்விக்கப்பட்டது