ஜெ. பட்டி கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெ.பட்டி கிராமம், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டு வட்டம், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள மிகவும் அழகிய ஒரு கிராமம். இங்கு எழுநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமத்தை சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. குறிப்பாகக் கோட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள பரதேசி ஆறுமுக சுவாமிகளின் ஜீவ சமாதி, ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை அன்று சிறப்பானது. இத்தினத்தில் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் மண்சோறு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. இக்கிராமத்தில் விவசாயம் அடிப்படை தொழிலாகும். இக்கிராமத்தின் தோற்றம் சிறிய ஊட்டி போன்று காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._பட்டி_கிராமம்&oldid=3588917" இலிருந்து மீள்விக்கப்பட்டது