ஜெ. அ. கா. தரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜலீசு அகமது கான் தரீன்
Prof. J A K Tareen.jpg
பிறப்பு {{{birth_date}}}
மைசூர், கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்பதான்
துறைபுவியியலர், தாது சோதனை & திட நிலை வேதியியல்
நிறுவனம்பி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், காசுமீர் பல்கலைக்கழகம்
பரிசுகள்பத்மஸ்ரீ (2009)
மதம்சன்னி இசுலாம்

ஜலீசு அகமது கான் தரீன், (J. A. K. Tareen) ஜ. அ. க. தரீன் என்று அழைக்கப்படும் தரீன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் 1947இல் பிறந்தார். இவர் 2013 முதல் 2015 மார்ச் 31 வரை இந்தியாவின் சென்னையில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.[1] இந்திய அரசு இவருக்கு 2009ஆம் ஆண்டு இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்மஸ்ரீ விருதை வழங்கியது.[2] தெற்காசியா அறக்கட்டளையின் (SAF) தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[3]

கல்வி[தொகு]

தரீன் தனது முதுநிலை அறிவியல் பட்டத்தில் புவியியலும் (1967), மற்றும் தாது சோதனையில் முனைவர் பட்டத்தினை (1977) மைசூர் பல்கலைக்கழகத்தில் பெற்றார். மேலும் பிரான்சின் உள்ள போர்டியாக்ஸ் பல்கலைக்கழகத்தில் திடநிலை வேதியியல் 1987 ஆம் ஆண்டு இரண்டாவது முனைவர் பட்டம் பெற்றார். ஜப்பானின் டோக்கியோ தொழில்நுட்ப நிலையம், பிரான்சின் போர்டியாக்ஸ் பல்கலைக்கழகம், எடின்பர்க் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்து மற்றும் மீகலே பல்கலைக்கழகம்-எத்தியோப்பியா ஆகியவற்றில் வருகை அறிவியலாளராகவும் இருந்தார்.

தொழில்[தொகு]

தரீன் மைசூர் பல்கலைக்கழகத்தில் 33 ஆண்டுகள் (1967–2000) புவியியல் துறையில் விரிவுரையாளர், பேராசிரியர், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகவும் பணியாற்றி பின்னர் கனிமவியல் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். இவர் பல்வேறு தலைசிறந்த ஆய்வுக் கட்டுரைகளையும் [4] படிகவியலின் அடிப்படைகள் குறித்த இரண்டு புத்தகங்கள்; "படிகவியல் ஒரு அடிப்படை பாடநெறி" மற்றும் "படிக வேதியியலின் அடிப்படைகள்" வெளியிட்டுள்ளார். [5] [6]

2001இல் இவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (2001-2004) பொறுப்பு வகித்தார்.

பின்னர், அவர் தெற்காசியா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், இந்தியாவின் பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) செயல் உறுப்பினராகவும் இருந்துள்ளார். தரம் மற்றும் வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான உயர் கல்வி குறித்த XII திட்ட ஆவணத்தைத் தயாரிப்பதிலும் இவர் ஈடுபட்டுள்ளார். [7] [8] [9]

இதன் பின்னர் இவர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (2007-2013) பணியாற்றினார்.[10] [11] [12] [13] [14] [15] [16]

இந்தியாவின் சென்னையில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2013 முதல் 2015 வரை பணியாற்றினார். [1]

விருதுகளும் கவுரவங்களும்[தொகு]

தரீன் மாநில மற்றும் தேசிய விருதுகள் பல பெற்றுள்ளார்.[2] விஞ்ஞானியாகவும் கல்வியாளராகவும் இவர் ஆற்றிய பங்களிப்பைப் கருத்தில்கொண்டு, இந்திய அரசு இவருக்கு 2009ல் பத்மஸ்ரீ வழங்கியுள்ளது.[17] தேசிய கனிம விருது, மைசூர் பல்கலைக்கழகத்தின் தங்க விழா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது மற்றும் கனிமவியல் சங்க தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதர செயல்கள்[தொகு]

தரீன் தனது காஷ்மீரின் நினைவுக் குறிப்புகளை "பனித்தட்டின் கீழ் தீ: காசுமீர் பல்கலைகழகத்திற்குத் திரும்ப" என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார்.[18] [19] 'உயர் கல்வி', 'அனைவருக்கும் கல்வி', 'இந்தியப் பல்கலைக்கழகங்களை உலகளவில் போட்டிக்கு உட்படுத்துதல்' போன்றவற்றை உள்ளடக்கிய அவரது பேச்சுக்கள் மற்றும் நேர்காணல்களால் கல்வி குறித்த அவரது கருத்துக்கள் வெளிப்படுகின்றன.

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 http://bsauniv.ac.in/info.aspx?id=7&mid=27
 2. 2.0 2.1 UOM alumnus honoured with Padmashree - Times Of India
 3. South Asia Foundation - SAF Advisory Board Members - India
 4. J A k tareen - Google Scholar Citations
 5. A Basic Course in Crystallography - J. A. K. Tareen, T. R. N. Kutty - Google Books
 6. Fundamentals Of Crystal Chemistry - T. R. Kutty, J.A. Tareen - Google Books
 7. Untitled Page
 8. NCHER – Alone can bring success in Higher Education during XII Plan: But there are issues | India Education Review
 9. UGC to consider new norms for Teacher Student Ratio | India Education Review
 10. Prof. J.A.K.Tareen, Vice-Chancellor | Pondicherry University
 11. The Hindu : Education Plus : On the path to becoming a world class university
 12. Example How To Use Flash[தொடர்பிழந்த இணைப்பு]
 13. The Hindu : NATIONAL / TAMIL NADU : Two more facilities at university
 14. The Hindu : NATIONAL / TAMIL NADU : Pondicherry University plans hospital, hostels and new courses
 15. Pondicherry University will be adding 15 new departments - India Career Guide - IndCareer.com
 16. http://2011cscapplicants.wikispaces.com/file/view/Applicant+63_Supporting+documents.pdf
 17. J A K Tareen awarded Padma Shri - Times Of India
 18. Fire Under Snowflakes: The Return of Kashmir University - Jalees Ahmed Khan Tareen - Google Books
 19. "Theindianbooks.com". மூல முகவரியிலிருந்து 12 May 2014 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._அ._கா._தரீன்&oldid=3091533" இருந்து மீள்விக்கப்பட்டது