ஜெர்டான் புதர் வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்டான் புதர் வானம்பாடி
இலங்கையில்
இந்தியாவில் உள்ள பந்திப்பூரில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஜெர்டான் புதர் வானம்பாடி ஓசை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
அலுடிடே
பேரினம்:
மிர்ராப்ரா
இனம்:
மி. அபினிசு
இருசொற் பெயரீடு
மிர்ராப்ரா அபினிசு
பிளைத், 1845
பரம்பல் அடர் பசுமை நிறத்தில்
வேறு பெயர்கள்
  • மிர்ராப்பா அசாமிகா அபினிசு

ஜெர்டான் புதர் வானம்பாடி (Jerdon's bush lark) என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் அலுடிடே குடும்ப பறவைச் சிற்றினம் ஆகும்.

விளக்கம்[தொகு]

சிட்டுக்குருவி அளவுள்ள ஜெர்டான் புதர் வானம்பாடி சுமார் 5 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கொம்பு நிறமான பழுப்பு நிறத்திலும், விழிப்படலம் பழுப்புத் தோய்ந்த வைக்கோல் நிறத்திலும், கால்கள் பழுப்புத் தோய்ந்த ஊன் நிற்றத்தில் இருக்கும். தோற்றத்தில் பெண் சிட்டுக் குருவியை ஒத்த இதன் உடலின் மேற்பகுதி சாம்பற்பழுப்பாகக் கருப்புக் கீற்றுக்களுடன் காணப்படும். மோவாயும் தொண்டையும் வெண்மை நிறத்தில் இருக்கும். கண்ணுக்கு மேல் சிவப்புத் தோய்ந்த மஞ்சள் நிறப் புருவம் இருக்கும். பறக்கும்போது இறக்கைகளின் செம்பழுப்பு பளிச்செனத் தெரியும். வெளிர் பழுப்பு நிற மார்பிலுலம் வயிற்றிலும் சிறு முக்கோண வடிவிலான பழுப்புத் திட்டுகள் இருக்கும்.

பெரிய புதர் வானம்பாடி

பரவல்[தொகு]

ஜெர்டன் புதர் வானம்பாடி தென்கிழக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பெரிய வரம்பைக் கொண்டுள்ளது. உலக அளவில் 100,000-1,000,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் இவை காணப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] இது அதிகபட்சமாக 1500 m உயரம் வரை பல்வேறு திறந்தவெளி வாழ்விடங்களில் காணப்படுகிறது.[2] தமிழகம் எங்கும் புஞ்சை, நஞ்சை விளைநிலங்களிலும் புல்லும் புதருமான தரிசு நிலங்களிலும் ஜெர்டான் புதர் வானம்பாடியினைக் காணலாம். தனது உடல் நிறத்தோடு ஒட்டி அமைகின்ற செஞ்சரள் கற்களோடு கூடிய செம்மண் நிலத்திலேயே அதிகம் காணக்கூடியது.

உணவு[தொகு]

தரையில் ஓடியபடி புல்விதைகள், வண்டு, புழு பூச்சிகளை இரையாகத் தேடும். புதர்களின் உச்சி, பாறை, தந்திக் கம்பி ஆகியவற்றில் அமர்ந்திருக்கும். ஆண் பறவை திடீரென இறக்கை விரித்து எழுந்து செங்குத்தாக 10மீ உயரம் வரை சுவீர்.. சுவீர்.. சுவீர்.. என மென்குரலில் பாடியபடி சென்று பின் சுற்றிச் சுழன்றபடி கீழே வந்து முன்னிருந்த இடத்தில் அமரும். இனப்பெருக்க காலத்தில் நாள் முழுதும் சில மணித்துளிக்கொரு முறை இப்படிப் பாடிப் பறந்தபடி இருக்கும்.[3]

நடத்தை[தொகு]

இதனுடைய ஓசை, பறக்கும் முறை இந்திய புதர் காடைப் போன்றது. இருப்பினும், மேற்கூறிய இனங்கள் போலல்லாமல், ஜெர்டன் புதர் காடை பெரும்பாலும் மரங்கள் மற்றும் கம்பிகளில் அமர்ந்திருக்கிறது.[4]

இனப்பெருக்கம்[தொகு]

திசம்பர் முதல் மே முடிய தரையில் கால்நடைகளின் குளம்பு ஏற்படுத்திய குழிவில் கோப்பை வடிவில் கூடமைத்து 3 முதல் 4 முட்டைகள் இடும்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mirafra affinis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. BirdLife International (2016). "Mirafra affinis". IUCN Red List of Threatened Species 2016: e.T22732442A95047275. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22732442A95047275.en. https://www.iucnredlist.org/species/22732442/95047275. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Compiler: Helen Temple (2008). "Jerdon's Bushlark - BirdLife Species Factsheet". Evaluators: Jeremy Bird, Stuart Butchart, Helen Temple. பன்னாட்டு பறவை வாழ்க்கை. பார்க்கப்பட்ட நாள் May 9, 2009.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:101
  4. P.C. Rasmussen; J.C. Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Lynx Edicions.