ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரருட்திரு
ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை
Jerome Emilianuspillai
யாழ்ப்பாண ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்18 சூலை 1950
ஆட்சி முடிவு17 சூலை 1972
முன்னிருந்தவர்அல்பிரட்-ஜீன் குயோமார்டு
பின்வந்தவர்பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை
பிற தகவல்கள்
பிறப்பு(1901-07-20)20 சூலை 1901
வென்னப்புவை, இலங்கை
இறப்பு17 சூலை 1972(1972-07-17) (அகவை 70)
படித்த இடம்யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி

பேரருட்திரு ஜெரோம் எமிலியானிஸ்பிள்ளை (Rt Rev. Jerome Emilianuspillai, 20 சூலை 1901 – 17 சூலை 1972) இலங்கைத் தமிழ் குருக்களும், ரோமன்-கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

எமிலியானுஸ்பிள்ளை இலங்கையின் மேற்கே வென்னப்புவை என்ற ஊரில் பிறந்தார்.[1] இவரது தந்தை வென்னப்புவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.[2] எமிலியானுஸ்பிள்ளை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார்.[3]

பணி[தொகு]

எமிலியானுஸ்பிள்ளை 1929 சூலையில் கத்தோலிக்கக் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] 1950 சூலையில் யாழ்ப்பாண ஆயராக நியமிக்கப்பட்டு 1972 சூலை 17 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.[1][4] இலங்கையின் முடஹ்லாவது தமிழ் கத்தோலிக்க ஆயர் இவராவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Bishop Jerome Emilianus Pillai, O.M.I." Catholic Hierarchy.
  2. 2.0 2.1 "Jaffna Catholics Recall First Native Tamil Bishop". Union of Catholic Asian News. 17 சூலை 1999. http://www.ucanews.com/story-archive/?post_name=/1999/08/17/jaffna-catholics-recall-first-native-tamil-bishop&post_id=14229. 
  3. "Past Bishops". St Patrick's College, Jaffna Old Boys' Association, Colombo Branch. Archived from the original on 2014-03-23. Retrieved 2015-10-18.
  4. "History". யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம். Archived from the original on 2013-09-11. Retrieved 2015-10-18.