ஜெய் பால் சிங்
Dr ஜெய் பால் சிங் | |
|---|---|
1987-இல் சிங் | |
| இயக்குநர்,ரோஹ்தக் | |
| பதவியில் 1989–1992 | |
| மருத்துவக் கண்காணிப்பாளர்,டாக்டர் ஆர்.எம்.எல். மருத்துவமனை, புது தில்லி]] | |
| பதவியில் 1986–1989 | |
| துறைத் தலைவர்,யு.சி.எம்.எஸ் புது தில்லி | |
| பதவியில் 1980–1986 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 13 மே 1930 மௌ, இந்தூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
| இறப்பு | 24 செப்டம்பர் 1997 (அகவை 67) தில்லி], இந்தியா |
| துணைவர் | வேத்வதி |
| கல்வி |
|
| முன்னாள் மாணவர் | சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி, ஆக்ரா |
| தொழில் | அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் |
ஜெய் பால் சிங் (Jai Pal Singh) (13 மே 1930 – 24 செப்டம்பர் 1997) ஓர் இந்திய மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், கல்வியாளர் இவர். இந்தியாவில் மருத்துவ அறிவியல், கல்வித் துறைகளில், குறிப்பாக அறுவை சிகிச்சை, மருத்துவ நிர்வாகம் ஆகியவற்றில் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தார். 1986-ல் ஹரி ஓம் ஆசிரமம் பிரேரித் விருது, 1991-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]சிங், 1930-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மௌ என்னுமிடத்தில் பிறந்தார். இவர் 1952-ல் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பின்னர், அதே கல்லூரியில் 1955-ல் அறுவை சிகிச்சைக்கான முதுகலைப் படிப்பை நிறைவு செய்தார். இவரது தந்தையான மருத்துவர் யோகேந்திர சிங், பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றிய ஓர் மருத்துவர் இவர்.
தொழில் வாழ்க்கை
[தொகு]சிங்கின் தொழில் வாழ்க்கை நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்தது. இக்காலகட்டத்தில் இவர் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்தார். ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பயிற்சியாளராக தனது பணியைத் தொடங்கிய இவர், பின்னர் புது தில்லியில் உள்ள சீமாட்டி இர்வின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத் துறையில் பதிவாளராகப் பணியாற்றினார். புது தில்லியில் உள்ள சீமாட்டி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, வில்லிங்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத் துறையின் கௌரவ உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட இவர், அங்கு முதுகலை அறுவை சிகிச்சை மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டார்.
1980 முதல் 1986 வரை, டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் நிறுவனத்தில் அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் பணியாற்றினார். மேலும், 1986 முதல் 1989 வரை புது தில்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். ஹரியானாவில் உள்ள ரோஹ்தக் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் (தற்போது பண்டிட் பி. டி. சர்மா பி.ஜி.ஐ.எம்.எஸ். ரோஹ்தக் என்று அழைக்கப்படுகிறது) இயக்குநராக 1989 முதல் 1992 வரை பணியாற்றியதே இவரது கடைசி அதிகாரப்பூர்வப் பணியாகும்.[2]
அறுவை சிகிச்சைத் துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட சிங், இந்தியாவின் இரண்டு குடியரசுத் தலைவர்களுக்கு கௌரவ அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை அறிவியலில், குறிப்பாகக் குழந்தைகளுக்கான தீக்காயங்கள், குடலிறக்கம் , அறுவை சிகிச்சைக்கான ஊட்டச்சத்த, சிறுநீரகக் கற்கள் ஆகிய துறைகளில் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தார். அமீபிக் கல்லீரல் சீழ் கட்டி குறித்த இவரது ஆராய்ச்சி முடிவுகள் தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சர்ஜரி இதழில் வெளியிடப்பட்டன.
ஆராய்ச்சி
[தொகு]சிங் ஓர் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஆராய்ச்சியாளர் இவர். இவர் 25 ஆண்டுகளில் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். இவர் பொது அறுவை சிகிச்சை, குழந்தை அறுவை சிகிச்சை, புற்றுநோயியல், சிறுநீரகவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்து வெளியிட்டார்.[3] குழந்தைப் பருவ தீக்காய குடலிறக்கங்கள், அறுவை சிகிச்சை ஊட்டச்சத்து, ஓர் புதுமையான மலக்குடல் சரிவு செயல்முறை, சிறுநீரகக் கல் ஆராய்ச்சி, பெருங்குடல் இயக்க ஆய்வுகள் ஆகியவற்றில் இவர் ஆற்றிய பணிகளுக்காக இந்திய அறுவை சிகிச்சையில் அங்கீகாரம் பெற்றார். 1990[4] ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சர்ஜரியில் வெளியான ஓர் தலையங்கம், தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சர்ஜரியில் வெளியிடப்பட்ட அமீபிக் கல்லீரல் சீழ் பற்றிய இவரது ஆராய்ச்சியை மேற்கோள் காட்டியது.[5][6]
விருதுகள்
[தொகு]1986 ஆம் ஆண்டில், சிறுநீர்க் கற்கள் பற்றிய இவரது ஆராய்ச்சிக்காக ஹரி ஓம் ஆசிரம பிரேரித் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் இவருக்கு வழங்கிக் கௌரவித்தார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சிங், இந்தியாவின் 5வது பிரதமரான சௌத்ரி சரண் சிங்கின் மகளான வேத்வதியை மணந்தார். சிங் 24 செப்டம்பர் 1997 அன்று இந்தியாவின் தில்லியில் காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 2013-05-10.
- ↑ "Padma Shri Dr. Jai Pal Singh – The Association of Surgeons of India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-12-14.
- ↑ Singh, J. P.; Mehra, S.; Nagabhushanam, V. (1973-03-01). "Complete Duplication of Bladder and Urethra: A Case Report with Review of the Literature". The Journal of Urology 109 (3): 512–514. doi:10.1016/S0022-5347(17)60466-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5347. பப்மெட்:4692390. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S002253471760466X.
- ↑ Singh, J. P.; Nagabhushanam, V.; Mehra, S.; Rao, P. L.; Sahai, I. (1972). "Herniography and inguinal hernia in childhood--a study of 100 cases". Indian Pediatrics 9 (11): 710–714. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-6061. பப்மெட்:4658690.
- ↑ Amesur, N. R.; Singh, J. P. (1963). "Crossed Renal Ectopia" (in en). British Journal of Urology 35 (1): 11–16. doi:10.1111/j.1464-410X.1963.tb02587.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1464-410X. பப்மெட்:14012576. https://bjui-journals.onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1464-410X.1963.tb02587.x.
- ↑ Singh, J. P.; Maini, V. K.; Bhatnagar, A. (1984). "Large-bowel malignancy. Epidemiology and gut motility studies in South Asia". Diseases of the Colon and Rectum 27 (1): 10–15. doi:10.1007/BF02554063. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-3706. பப்மெட்:6690260. https://archive.org/details/sim_diseases-of-the-colon-rectum_1984-01_27_1/page/10.
- இந்தியக் கல்வி நிர்வாகவியலாளர்கள்
- இந்தியாவில் மருத்துவக் கல்வி
- இந்தியாவில் பல்கலைக்கழகம் வாரியாக முன்னாள் மாணவர்கள்
- இந்தியாவில் உயர்கல்வி
- இந்தியப் பயிற்றுநர்கள்
- இந்திய மருத்துவர்கள்
- இந்திய அறிஞர்கள்
- இந்திய மருத்துவக் கல்லூரிகள்
- மருத்துவக் கல்வி
- உத்தரப் பிரதேசப் பல்கலைக்கழகங்கள்
- இந்தோர் மாவட்டம்
- மாவட்ட வாரியாக மத்தியப் பிரதேச மக்கள்