உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெய் ஜெகதீஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய் ஜெகதீஷ்
பிறப்பு29 சூன் 1954 (1954-06-29) (அகவை 70)
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர்
இயக்குனர்
தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ரூபா (விவாகரத்து), விசயலட்சுமி
பிள்ளைகள்4

ஜெய் ஜகதீஷ் (Jai Jagadish) (பிறப்பு 29 சூன் 1954 [1] ) கன்னட திரையுலகில் ஒரு இந்திய திரைப்பட நடிகராகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமாவார் ஆவார். பலிதாம்ஷா (1976) என்றத் திரைப்படத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ஒரு நடிகராக 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.[2] 1998 ஆம் ஆண்டில், பூமி தாயா சோச்சலா மாகா படத்திற்கு தயாரிப்பாளராக மாறினார். மதானா என்றப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[3] ஜெய் ஜெகதீஷின் குறிப்பிடத்தக்க சில படங்களில் காளி மாத்து (1981), பெங்கியல்லி அரலிடா ஹூவு (1983), பந்தனா (1984), மதுவே மாடு தமாஷே நோடு (1986) மற்றும் கர்ஜேன் (1981) ஆகியவை அடங்கும். இவரது கோதிகலு சார் கோதிகலு திரைப்படம் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றது. அவர் வகயாமா கராத்தே-டோ இந்தியாவின் தலைவராவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் தனது முதல் மனைவி ரூபாவை விவாகரத்து செய்துவிட்டு [4] பின்னர் இயக்குனர் ராஜேந்திர சிங் பாபுவின் சகோதரியான நடிகை விஜயலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு வைபவி, வைநிதி வைசிரி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Happy Birthday Jai Jagadish!!". bharatstudent.com. 29 June 2011. Archived from the original on 26 February 2014. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
  2. "Jai Jagdish advice to Sudeep". supergoodmovies.cpm. 26 April 2011. Archived from the original on 29 April 2011. பார்க்கப்பட்ட நாள் 3 May 2011.
  3. "Actor Jai Jagadish Filmography". Archived from the original on 19 February 2013. பார்க்கப்பட்ட நாள் 3 May 2011.
  4. "Archived copy". Archived from the original on 29 March 2020. பார்க்கப்பட்ட நாள் 8 August 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_ஜெகதீஷ்&oldid=3792581" இலிருந்து மீள்விக்கப்பட்டது