ஜெய் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெய் சா
தலைவர் ஆசியத் துடுப்பாட்ட அவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜனவரி 30, 2021
முன்னவர் விக்ரம் ஷா

[1]

செயலாளர், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர் 23, 2019
குடியரசுத் தலைவர் சவுரவ் கங்குலி
தனிநபர் தகவல்
பிறப்பு ஜெய்
தேசியம் இந்தியன்
பெற்றோர் அமித் சா
படித்த கல்வி நிறுவனங்கள் நிர்மலா பல்கலைழக்கழகம்
பணி தொழில் முனைவோர்

ஜெய் அமித்பாய் சா (Jay Amitbhai Shah) [2][3] ஓர் இந்தியத் தொழிலதிபர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக ஆனார். [4]மேலும் இவர், ஆசியத் துடுப்பாட்ட அவையின் தலைவராகவும் உள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் இந்திய அரசியல்வாதி அமித் சாவின் மகன் ஆவார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப் படிப்பினைப் பயின்றார். நிர்மா பல்கலைக்கழகத்தில் பி.டெக் உடன் பொறியியல் பட்டம் பெற்றார். [3] ஜெயேந்திர செகலின் கீழ் அகமதாபாத்தில் துடுப்பாட்டப் பயிற்சி பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பெப்ரவரி 2015 இல் இவர் ரிசாபடேல் எனும் தனது கல்லூரி தோழியினை மணந்தார்.[5][6]

தி வயருக்கு எதிரான அவதூறு வழக்கு[தொகு]

நரேந்திர மோடி இந்தியப் பிரதமரான ஒரு வருடத்திற்குப் பிறகு ஷாவின் நிறுவனத்தின் வருவாய் 16,000 மடங்கு அதிகரித்துள்ளது என்று கட்டுரை வெளியிட்ட தி வயரின் ஆசிரியர்களுக்கு எதிராக ஒரு குற்றவியல் அவதூறு வழக்கு மற்றும் 100 இழப்பீடு கேட்டு வழக்கு தொடந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_சா&oldid=3130591" இருந்து மீள்விக்கப்பட்டது