ஜெய்ஸ்ரீ டி.
ஜெய்ஸ்ரீ டி. | |
---|---|
2013இல் ஜெய்ஸ்ரீ டி. | |
பிறப்பு | ஜெய்ஸ்ரீ தள்பதே 1953 (அகவை 70–71) |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1966–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஜெயபிரகாஷ் கர்நாடகி (தி. 1989) |
உறவினர்கள் | சிரேயசு தள்பதே மீனா டி. |
ஜெய்ஸ்ரீ தள்பதே (Jayshree Talpade) (பிறப்பு 1953கள்) ஓர் இந்திய நடிகையும், நடனக் கலைஞரும் ஆவார். இவர் பெரும்பாலும் பாலிவுட் படங்களில் நடிக்கிறார்.
தொழில்
[தொகு]ஜெய்ஸ்ரீ, தனது தொழில் வாழ்க்கையை 5 வயதில் 1958 இல் கூஞ் உதி ஷெஹ்னா என்ற படத்துடன் தொடங்கினார்.[1] கதக் நடனக் கலைஞரான இவர் படங்களில் குத்துப் பாடல்களுக்கு நடனங்களை நிகழ்த்தத் தொடங்கியபோது புகழ் பெற்றார். இருப்பினும், இவர் ஏற்கனவே சங்கீத் சாம்ராட் தான்சேன், ஜமீன் கே தாரே (1960), பியார் கி பியாஸ் (1961) ஆகியவற்றில் குழந்தைக் கலைஞராக தொழிலில் காலூன்றியிருந்தார். இயக்குநர் கோபி கிஷன் ஒரு படத்தில் நடனமாட வாய்ப்பளித்தார்.[2] ஆரம்பத்தில் தான் மருத்துவராக வேண்டும் என நினைத்தார். ஆனால் திரைப்பட இயக்குனர் அமித் போஸ் 1968 இல் "அபிலாஷா" என்ற படத்தில் நடனமாட வாய்ப்பு அளித்தார்.[1] அதன் பிறகு, இவர் 1970 மற்றும் 1980களில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடினார். இவர் காட்டேரி-நகைச்சுவை, அனுதாபமான பாத்திரங்களை செய்துள்ளார். ஜெய்ஸ்ரீ பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மார்வாடி, ராஜஸ்தானி, ஆங்கிலம், சிந்தி, அசாமி, போஜ்புரி, ஒரியா, அரியானி, கரியாலி, நேபாளி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் முகமது ரபி, மன்னா தே, முகேஷ், ஆஷா போஸ்லே போன்ற நட்சத்திரங்களுடன் உலகம் முழுவதும் மேடையில் நடித்துள்ளார். மராத்தி படத்துக்காக இரு முறை மகாட்டிரா மாநில அரசு விருதுகள், 3 குசராத்து மாநில அரசு விருதுகள், ஐதராபாத்து விருது, தில்லி, மும்பையிலிருந்து 6 அரிமா சங்க விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார். போஜ்புரி திரைப்படங்களுக்காகவும், குசராத்தி திரைப்படங்களுக்காகவும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]1989 ல் திரைப்பட இயக்குனர் ஜெயப்பிரகாஷ் கர்நாடகியை (முன்னாள் நடிகரும் இயக்குனருமான மாஸ்டர் விநாயக்கின் மகன்) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுவஸ்திக் ஜே கர்நாடகி ஒரு மகன் உள்ளார்.[1] இவரது சகோதரி மீனா டி. ஒரு நடிகையும் நடனக் கலைஞரும் ஆவார். சிரேயசு தள்பதே இவரது மருமகனாவார்.