ஜெய்ப்பூர் விலங்குக் காட்சிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெய்ப்பூர் விலங்குக் காட்சிச்சாலை
திறக்கப்பட்ட தேதி1877[1]
இடம்ஜெய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா
பரப்பளவு35 ஏக்கர்
அமைவு26°54′44″N 75°49′17″E / 26.9122356°N 75.8214355°E / 26.9122356; 75.8214355ஆள்கூறுகள்: 26°54′44″N 75°49′17″E / 26.9122356°N 75.8214355°E / 26.9122356; 75.8214355
விலங்குகளின் எண்ணிக்கைசுமார் 550
உயிரினங்களின் எண்ணிக்கை50
உறுப்பினர் திட்டம்மத்திய விலங்கு காட்சியக ஆணையம்[2]

ஜெய்ப்பூர் விலங்குக் காட்சிச்சாலை (Jaipur Zoo) என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவாகும்.

பின்னணி[தொகு]

ஜெய்ப்பூர் விலங்குக் காட்சிச்சாலை 1877-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் திறக்கப்பட்டது. இது ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் மற்றும் ராம் நிவாஸ் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ஒரு பகுதியில் பாலூட்டிகளும் மற்றொன்றில் பறவைகள் மற்றும் ஊர்வனவும் உள்ளன. உலகம் முழுவதிலுமிருந்தும் கொண்டுவரப்பட்ட சுமார் 50 வகையான பறவைகள் மற்றும் விலங்குகளை இங்குக் காணலாம். 1999ஆம் ஆண்டில், சொம்புமூக்கு முதலை வளர்ப்பு பண்ணை நிறுவப்பட்டது. இது இந்தியாவின் நான்காவது பெரிய வளர்ப்பு பண்ணையாகும். ராஜஸ்தானின் வனவிலங்குகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமும் மிருகக்காட்சிசாலைக்குள் அமைக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் தேசிய முயற்சியை நிறைவு செய்வதே இந்த மிருகக்காட்சிசாலை அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். 2018ஆம் ஆண்டில், உயிரியல் பூங்கா அதிக எண்ணிக்கை கொண்ட பறவை பூங்காவாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து பெரிய மாமிச உண்ணிகள் ஏற்கனவே வெளியேறிவிட்டன.

காட்சி விலங்குகள்[தொகு]

ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 550 விலங்குகள் உள்ளன. இவற்றில் சில:

பாலூட்டிகள்[தொகு]

ஊனுண்ணி[தொகு]

அனைத்துண்ணி[தொகு]

தாவர உண்ணி[தொகு]

பறவைகள்[தொகு]

ஊர்வன[தொகு]

பாதுகாப்பு இனப்பெருக்கம் திட்டங்கள்[தொகு]

இந்த மிருகக்காட்சிசாலையானது, மத்திய விலங்கு காட்சியக ஆணையம் மற்றும் ராஜஸ்தான் அரசாங்கத்தின் காரியால், சீட்டல் மற்றும் முதலைகளின் பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

சம்பவங்கள்[தொகு]

  • 2010ஆம் ஆண்டில், கடுமையான குளிர் காரணமாக பதினொன்று புள்ளி மான்கள் இறந்தன. சந்தேகத்திற்கிடமான நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மான் சனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் உயிரிழந்தது.
  • 2013 அக்டோபரில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அரியவகை வெள்ளைப் புலி உயிரியல் பூங்காவில் இறந்தது. ஏழு வயது மாதவ் உணவை மறுத்த 13 நாட்களுக்குப் பிறகு இது நடந்தது.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ராஜஸ்தானின் வனவிலங்குகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Zoos in India, from 1800 until now". kuchbhi.com. Kuchbhi. 21 October 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Search Establishment". cza.nic.in. CZA. 4 July 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]