ஜெய்ப்பூர் இல்லம்
ஜெய்ப்பூர் இல்லம் | |
---|---|
![]() ஜெய்ப்பூர் இல்லம் மத்தியப் பகுதி | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
இடம் | புது தில்லி, இந்தியா |
ஆள்கூற்று | 28°36′36″N 77°14′04″E / 28.610083°N 77.234399°E |
தற்போதைய குடியிருப்பாளர் | தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | ஆர்தர் புளூம்பீல்டு |

ஜெய்ப்பூர் இல்லம் (Jaipur House) என்பது இந்தியாவின் புது தில்லி நகரத்தில் உள்ள ஜெய்ப்பூர் மகாராஜாவின் முன்னாள் இல்லமாகும். இது ராஜ்பத்தின் முடிவில், இந்தியாவின் வாயிலின் எதிரில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]ஜெய்ப்பூர் இல்லமானது 1936-இல் லுட்யென்சு தில்லியைக் கட்டிய பிறகு, சார்லஸ் ப்லோம்ஃபீல்டால் வடிவமைக்கப்பட்டது.[1]
இன்று இது தேசிய நவீனக் கலைக்கூடத்தினைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் முதன்மையான கலைக்கூடமாக 1954-இல் கலாச்சார அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.[1]
கட்டிடக்கலை
[தொகு]இந்த அமைப்பு வண்ணத்துப்பூச்சி அமைப்பையும் மையக் குவிமாடத்தையும் கொண்டுள்ளது. இது சிவப்பு, மஞ்சள் மணற்கற்களால் மூடப்பட்டிருக்கும். அரண்மனையின் பின்புறம் ஒரு பெரிய தோட்டம் உள்ளது. தரை தளத்தில் உள்ள முக்கிய நடன மாடம் வழியாக இங்குச் செல்ல முடியும். நடன மாடத்தில் மரத்தினால் செய்யப்பட்டப் பதாகைகள் போடப்பட்டுள்ளது.
இல்லத்தின் உள்ளே மத்தியக் குவிமாடத்தின் கீழ் பிரதான மண்டபம் உள்ளது. மேல் தளத்திற்குச் செல்லப் பெரிய சுழல் படிக்கட்டு உள்ளது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]மேலும் வாசிக்க
[தொகு]- Bhowmick, Sumanta K (2016). Princely Palaces in New Delhi. Delhi: Niyogi Books. p. 264. ISBN 978-9383098910.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் ஜெய்ப்பூர் இல்லம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.