ஜெய்சல்மர் நாட்டுப்புற அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெய்சல்மர் நாட்டுப்புற அருங்காட்சியகம் (Jaisalmer Folklore Museum) என்பது இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள ஜெய்சல்மேரில் உள்ள மெஹர் பாக் தோட்டத்தில் உள்ள கார்சிசர் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகும்.

விளக்கம்[தொகு]

ஜெய்சல்மர் நாட்டுப்புற அருங்காட்சியகம் என். கே. சர்மாவால் நிறுவப்பட்டது. நாணயங்கள், பழைய ஓவியங்கள், கலைப்பொருட்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் போன்ற பொருட்களில் என். கே. சர்மாவுக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, நாட்டுப்புற அருங்காட்சியகத்திற்கு வரலாற்றுப் பொருட்களைப் பெரிய அளவில் சேகரிப்பது இவருக்கு எளிதாக இருந்தது. இராசத்தான் பாலைவனப் பகுதியின் வரலாறு தொடர்பான பல்வேறு இடங்களிலிருந்து பல பொருட்கள் சேகரிக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, ஜெய்சால்மரின் செழுமையான பாரம்பரியத்தையும் அதன் வரலாற்றையும் காட்சிப்படுத்த, இந்த அருங்காட்சியகம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் புகைப்படப் பிரிவு, உடைகள், புதைபடிவங்கள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் ஆபரணங்கள், நகைகள், ஓவியங்கள் எனப் பல்வேறு பிரிவுகள் உள்ளன.[1][2] இசைக்கருவிகள் மற்றும் பாரம்பரிய நடனங்களின் காணொலிகளை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.[2]

அருங்காட்சியகத்தினை பார்வையாளர்கள் காலை 08.00 மணியிலிருந்து மாலை 06.00 மணி வரைக் காணலாம். அருங்காட்சியகத்தைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் உண்டு.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Folklore Museum Jaisalmer".
  2. 2.0 2.1 2.2 "Top things to do in and around Jaisalmer". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2019-01-03.

வெளி இணைப்புகள்[தொகு]