உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயா ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயா ரே என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சாக்லேட் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். 2002 இல் வசந்த் இயக்கத்தில் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே திரைப்படத்தில் நடித்தார். அவர் 2012 இல் சரண்வேல் என்ற தொழிலதிபரை மணந்தார். பின்னர் சரண்வேல் கவிதாவை (இந்தியாவின் இளவரசி) 2022 இல் திருமணம் செய்து கொண்டார்..

திரை வாழ்க்கை

[தொகு]

ஜெயா ரே ஒரு மாடலாவார். இவர் பல அழகு போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் மிஸ் கோவா பேஜண்ட் அழகி பட்டத்தை வென்றார். இவர் 2001 ஆம் ஆண்டு ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சாக்லேட் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார்.இப்படத்தில் இவருடன் மும்தாஜ், சுஹாசினி மணி ரத்னம் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் நடித்தனர்.

2002 இல் வசந்த் இயக்கத்தில் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே திரைப்படத்தில் நடித்தார். [1] இந்த படத்தில் ஸ்வப்னா என்ற பேஷன் மாடலின் பாத்திரத்தில் நடித்தார். வசந்த் இயக்கியுள்ள இப்படத்தை ஷாம், சினேகா, விவேக் போன்ற பல பிரபல தமிழ் கலைஞர்கள் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. https://www.nettv4u.com/amp/celebrity/tamil/movie-actress/jaya-re

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_ரே&oldid=3632068" இலிருந்து மீள்விக்கப்பட்டது