ஜெயா பார்த்திபன்
ஜெயா பார்த்திபன் Jaya Parthiban | |
|---|---|
| பதவியில் 1999–2002 | |
| பதவியில் 2002–2005 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஜெயா குழந்தைவேலு (பிறப்பு: 1946) |
| இறப்பு | 21 சூலை 2023 (76 வயது)[1] பந்தாய் மருத்துவ மையம், கோலாலம்பூர் |
| இளைப்பாறுமிடம் | இடுகாடு மையம் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| துணைவர் | பார்த்திபன் |
| பிள்ளைகள் | 2 மகன்கள்; 1 மகள் |
| பணி | மலேசிய வானொலி செய்தி வாசிப்பாளர்; அரசியல்வாதி |
ஜெயா பார்த்திபன் (ஆங்கிலம்; மலாய்: Jaya Parthiban) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 1999 முதல் 2005 வரை இருமுறை மலேசிய மேலவை உறுப்பினர்; பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியான மஇகாவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர்; மஇகா கட்சியின் மகளிர் பிரிவின் முன்னாள் தேசியத் தலைவி; மஇகாவின் இரும்பு பெண்மணி என அனைவராலும் அழைக்கப்பட்டவர் ஆவார்.[2][3]
2000-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை மஇகாவின் மகளிர் பிரிவுத் தலைவியாகப் பொறுப்பு வகித்தபோது, அந்தப் பிரிவிற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தினார். அத்துடன் அக்கட்சியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
மலேசிய வானொலி செய்திப் பிரிவில் பணியாற்றிவரான ஜெயா பார்த்திபனின் இயற்பெயர் ஜெயா குழந்தைவேலு. இவருக்கு சிலாங்கூர் சுல்தான் சராபுதீன் அவர்களால் டத்தின் படுக்கா (Datin Paduka) எனும் மலேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது.[3]
வாழ்க்கை
[தொகு]ஜெயா பார்த்திபனுக்கு, மஇகா தலைமையகத்தில் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றிய பார்த்திபன் எனும் கணவரும்; இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.[4]
பொது
[தொகு]மஇகாவின் மகளிர் பிரிவுக்கு புதிய வழிகாட்டலையும், எழுச்சியையும் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவரான ஜெயா பார்த்திபன்; மஇகாவின் மகளிர் பிரிவு ஆலோசகராகவும் சேவையாற்றி வந்துள்ளார். மலேசிய வானொலியின் செய்திப் பிரிவில் பணியாற்றிய பார்த்திபனை மணம் புரிந்த ஜெயா பார்த்திபன், கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.[5]
தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் திறமை கொண்டவரான ஜெயா பார்த்திபன், 1986-ஆம் ஆண்டு சலங்கை ஒலி எனும் தமிழ் மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்து, அந்த மகளிர் இதழைச் சிறப்பாக வழிநடத்தி வந்தார். சில நினைவுகள், சில கனவுகள் எனும் நூல் உட்பட சில நூல்களையும் ஜெயா பார்த்திபன் எழுதியுள்ளார்.[5]
இறப்பு
[தொகு]ஜெயா பார்த்திபன் சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 21 சூலை 2023 நள்ளிரவு 12.30 மணியளவில், கோலாலம்பூர் பந்தாய் மருத்துவமனையில் காலமானார்.[5][6][7]
அவரின் நல்லடக்க இறுதிச்சடங்கு சூலை 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் எண். 5, 14/37 C சாலை, பெட்டாலிங் ஜெயா என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது. பின்னர் அவரின் உடல் கம்போங் துங்கு மின் சுடலையில் தகனம் செய்யப்பட்டது.[5][8]
விருதுகள்
[தொகு]
மலேசியா
சிலாங்கூர்
(DPMS) - டத்தோ (2004)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.thestar.com.my/news/nation/2023/07/21/former-wanita-mic-chief-jaya-parthiban-passes-away
- ↑ 2.0 2.1 "Chairperson of the Women's Wing of the MLC from 2000 to 2005". makkalosai. Retrieved 3 February 2026.
- ↑ 3.0 3.1 "டத்தின் படுகா ஜெயா பார்த்திபன் காலமானார் | Selliyal - செல்லியல்". selliyal.com. 21 July 2023. Retrieved 3 February 2026.
- ↑ "டத்தின் படுகா ஜெயா பார்த்திபன் காலமானார்". BERNAMA (in ஆங்கிலம்). 21 July 2023. Retrieved 3 February 2026.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "மஇகா முன்னாள் மகளிர் தலைவி ஜெயா பார்த்திபன் காலமானார்". Thisaigal News. 21 July 2023. Retrieved 3 February 2026.
- ↑ "Former Wanita MIC chief Jaya Parthiban passes away". The Star (in ஆங்கிலம்). 21 July 2023. Retrieved 3 February 2026.
- ↑ "Death of Jaya Parthiban, the legendary actor". TikTok. Retrieved 3 February 2026.
- ↑ "Great sadness that we learned of the death of YBhg. Datin Paduka Jaya Partiban – Malaysian Indian Congress". MIC Malaysia. Retrieved 3 February 2026.