உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயா அருணாச்சலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயா அருணாச்சலம்
பிறப்பு8 பெப்ரவரி 1935 (1935-02-08) (அகவை 89)
தமிழ் நாடு, இந்தியா
இறப்பு29 சூன் 2019
சென்னை
பணிசமூக சேவகர்
மகளிர் நல செயற்பாட்டாளர்
விருதுகள்பத்மசிறீ
விட்டல் வாய்சஸ் குளோபல் லீடர்சிப் விருது
சர்வதேச செயற்பாட்டாளர் விருது
ராஷ்ட்ரீய ஏக்தா விருது
ஜம்னாலால் பஜாஜ் விருது
வலைத்தளம்
WWF website

ஜெயா அருணாச்சலம் (Jaya Arunachalam) ஒரு இந்திய சமூக சேவகியும் உழைக்கும் மகளிர் அமைப்பு என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். இந்நிறுவனம் இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்து விளிம்பு நிலை மகளிரின் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வரும் நிறுவனம் ஆகும்.[1] 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் மூலமாக தனது செயல்பாட்டை ஏழை உழைக்கும் பெண்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு நுண் கடன்களை வங்கிகள் மூலமாகப் பெற்றுத் தந்து, சிறிய அளவிலான சுய தொழில் தொடங்க உதவிகள் செய்தார்.[1]

இவர் 1935 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் நாள் தமிழ்நாட்டில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[2] பொருளியல் மற்றும் புவியியல் பாடங்களில் தனது முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.[3] இவர் உரோமில் செயல்பட்டு வரும் சர்வதேச மேம்பாட்டிற்கான சபையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்தப் பதவியில் இருந்த முதல் தெற்காசியப் பெண்மணி இவரேயாவார்.[4]

விருதுகள்

[தொகு]

விட்டல் வாய்சஸ் என்ற அமைப்பிடமிருந்து பொருளாதார மேம்பாட்டிற்கான உலக தலைமைத்துவ விருதினைப் பெற்றார். கலிபார்னியாவின் கிளைய்ஸ்ட்மென் அறக்கட்டளையிடமிருந்து சர்வதேச செயற்பாட்டாளர் விருதினை 2003 ஆம் ஆண்டில் பெற்றார். மேலும், இந்திய தேசிய விழிப்புணர்வு அமைப்பினரால் வழங்கப்படும் ராஷ்ட்ரிய ஏக்தா விருதினையும் பெற்றார்.[4] இந்திய அரசானது இவருக்கு 1987 ஆம் ஆண்டில், நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதினை வழங்கியது.[5] 2009 ஆம ஆண்டில் ஜம்னாலால் பஜாஜ் விருதினைப் பெற்றார்.[2] 2010 ஆம் ஆண்டில் காட்பிரே தேசிய துணிவாளர் விருதுகள் அமைப்பு இவரை சமூக சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்ந்தெடுத்தது. இந்த விருதானது சமூக மேம்பாட்டிற்காக தனது வாழ்வை சுயநலமின்றி செலவழித்த தனிநபர்களை அங்கீகாரம் செய்யும் விதமாக வழங்கப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Empowering the women of Madras". BBC News. 23 August 2002. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
  2. 2.0 2.1 "Jamnalal Bajaj Award". Jamnalal Bajaj Foundation. 2015. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "A Lifelong Champion Of India's Poorest Women". Washington Post. 6 May 2005. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015.
  4. 4.0 4.1 "Fight against poverty". The Hindu. 5 June 2005. Archived from the original on 2 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  6. "Lifetime achievement award for Jaya Arunachalam" (in en-IN). The Hindu. 2010-11-05. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Lifetime-achievement-award-for-Jaya-Arunachalam/article15675668.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_அருணாச்சலம்&oldid=3930461" இலிருந்து மீள்விக்கப்பட்டது