ஜெயம்மா பண்டாரி
ஜெயம்மா பண்டாரி | |
---|---|
பிறப்பு | சுமார் 1978 நல்கொண்டா |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | ஐதராபாத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கு உதவுதல் |
வாழ்க்கைத் துணை | இருக்கிறார் |
பிள்ளைகள் | ஒரு மகள் |
ஜெயம்மா பண்டாரி (பிறப்பு: 1978) இந்தியாவைச் சேர்ந்த இவர் முன்னர் பாலியல் தொழிலாளியாக இருந்து சமூக சேவையாளராக மாறினார். 2018 ஆம் ஆண்டில் இவருக்கு" நாரி சக்தி புரஸ்கார்" என்ற கௌரவம் வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இவர் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை ஆதரிக்கும் ஒரு அமைப்பை நிறுவினார்.
வாழ்க்கை
[தொகு]பண்டாரி சுமார் 1978 இல் ஆந்திராவின் நல்கொண்டாவில் பிறந்தார். இவர் தனது மூன்று வயதிலேயே தனது பெற்றோரை இழந்து அனாதையாகிவிட்டார். [1] இவரது மாமா இவருக்கு பாதுகாவலரானார். இவருக்கு பதினான்கு வயதில் இருந்தபோது ஏற்கனவே திருமணமான இவருடைய மாமா இவரைத் திருமணம் செய்து கொள்ள முயன்றார். .
மதுபானத்தில் நாட்டமுள்ள இவரது கணவர் இவரை பாலியல் தொழிலாளியாகுமாறு இவரை வற்புறுத்தினார். [2]
அமைப்பு
[தொகு]இவர், ஜெயா சிங் தாமஸ் என்பவரின் உதவியுடன் 2001 ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் "சைதன்யா மகிலா மண்டலி" என்ற அமைப்பை நிறுவினார். [3] தங்கள் தொழிலில் இருந்து தப்பிக்க விரும்பும் பாலியல் தொழிலாளர்களுக்கு இந்த அமைப்பு ஆதரவை வழங்குகிறது. அவர்களுக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களது பெண்குழந்தைகள் அவர்களது பெற்றோரை பின்தொடர்வதிலிருந்தைத் தவிர்க்கும் வகையில் இந்த அமைப்பு அக்கறையும் செலுத்துகிறது. [4] இதுபோல சுமார் 3,500 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரம் பெண்கள் புதிய வேலையைக் கண்டறிந்துள்ளனர். இவரது அமைப்பால் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்ட பிறகு தொடர்ந்து பின்பற்றப்படுகிறார்கள். [1]
விருதுகள்
[தொகு]பெங்களூரைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் அரசுசாரா மனித உரிமை நிறுவனமான "விஜில் இந்தியா இயக்கம்" இவருக்கு 2014இல் எம்.ஏ. தாமஸ் தேசிய மனித உரிமைகள் விருதை வழங்கியது. [4] இந்திய தொழில்துறை கூட்டமைப்பு 2017 ஆம் ஆண்டில் மூன்று பெண்கள் முன்மாதிரி விருதுகளில் ஒன்றை இவருக்கு வழங்கியது. மற்ற விருதுகள் தொழிலதிபர் கமல் கும்பர் மற்றும் மேற்கு வங்கத்தின் மோனிகா மஜும்தார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர்கள் நௌசாத் ஃபோர்ப்ஸ் மற்றும் ஷோபனா காமினேனி ஆகியோருடன் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வழங்கினார். [1] 2018 மார்ச் 8 ஆம் தேதி (அனைத்துலக பெண்கள் நாள்) இவருக்கு "நாரி சக்தி புரஸ்கார்" கௌரவம் வழங்கப்பட்டது. [5] புதுடில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லம் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார். அந்த ஆண்டில் முப்பத்தொன்பது பேர் அல்லது அமைப்புகள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டன. அவர்கள் விருதுடன் சேர்த்து இந்திய ரூபாய் 100,000 பரிசு பெற்றனர். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Somasekhar, M. "An award for a woman extraordinaire". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
- ↑ Gupta, Poorvi (2017-08-21). "This woman works to better lives of sex workers in prostitution". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
- ↑ "Jayamma Bandari - a warrior of dignity". World Pulse (in ஆங்கிலம்). 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
- ↑ 4.0 4.1 vigilindia. "Smt. Bandari Jayamma received M A Thomas National Human Rights Award 2014". Vigil India Movement. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
- ↑ "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
- ↑ "International Women's Day: President Kovind honours 39 achievers with 'Nari Shakti Puraskar'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.