ஜெயபுரா
ஜெயபுரா
Jayapura | |
---|---|
City of Jayapura Kota Jayapura | |
![]() | |
ஆள்கூறுகள்: 2°31′58.8″S 140°43′1.2″E / 2.533000°S 140.717000°E | |
நாடு | ![]() |
பகுதி | ![]() |
மாநிலம் | பப்புவா மாநிலம் |
நிறுவல் | 7 மார்ச் 1910 (ஒல்லந்தியா; Hollandia) |
தன்னாட்சி | 2 ஆகத்து1993 |
பகிர்வு | 30 சூன் 2022 |
பரப்பளவு | |
• மொத்தம் | 940.0 km2 (362.9 sq mi) |
உயர் புள்ளி | 287 m (942 ft) |
மக்கள்தொகை (2023)[1] | |
• மொத்தம் | 4,14,862 |
• அடர்த்தி | 440/km2 (1,100/sq mi) |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +9 |
தொலைபேசி | (+62) 967 |
போக்குவரத்து | PA |
காலநிலை | அயனம் |
HDI (2024) | ![]() |
இணையதளம் | jayapurakota |
ஜெயபுரா அல்லது ஒல்லந்தியா (இந்தோனேசியம்: Kota Jayapura; ஆங்கிலம்: City of Jayapura; Hollandia) என்பது இந்தோனேசியா, பப்புவா மாநிலத்தின், தலைநகரம் ஆகும். இந்த நகரம் பப்புவா மாநிலத்தில் மிகப்பெரிய நகரமாகவும்; அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் விளங்குகிறது.
இந்த நகரம் நியூ கினி தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது; மற்றும் 940.0 கிமீ2 (362.9 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.
இந்த நகரத்தின் வடக்கில் பசிபிக் பெருங்கடல்; வடக்கில் யோசு சுதர்சோ விரிகுடா (Yos Sudarso Bay); கிழக்கில் பப்புவா நியூ கினி நாடு; தெற்கில் கீரோம் பிராந்தியம்; மேற்கில் ஜெயபுரா பிராந்தியம் ஆகிய நீர்நிலப் பகுதிகள் எல்லைகளாக உள்ளன.
பொது
[தொகு]2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜெயபுரா மாநகரத்தின் மக்கள்தொகை 398,478;[2] மற்றும் நியூ கினி தீவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. மக்கள் தொகை அடிப்படையில், பப்புவா நியூ கினி நாட்டின் தலைநகரமான மார்சுபி துறைமுகம் நகரத்தின் மக்கள்தொகையையும் மிஞ்சியுள்ளது.
2010-2020-ஆம் ஆண்டுகளில், இந்த நகரம் இந்தோனேசியாவில் துரிதமாக வளர்ந்து வரும் நகரமாகவும் இருந்தது. 2010 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில் ஜெயபுராவின் மக்கள் தொகை 55.23% அதிகரித்தது.[3] 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 414,862-ஆக இருந்தது (220,024 ஆண்கள் மற்றும் 194,838 பெண்கள்).[1]
கிழக்கு இந்தோனேசியாவின் மக்காசார், தென்பசார் மற்றும் மனாடோ நகரங்களுக்கு அடுத்த நிலையில், பொருளாதாரத்தில் ஜெயபுரா நகரம் நான்காவது பெரிய நகரமாக விளங்குகிறது. 2016-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தோனேசிய ரூப்பியா Rp 19.48 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.[4] மிக உயர்ந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் (HDI) 0.801-ஐ கொண்டுள்ளது.[5]
சொல் பிறப்பியல்
[தொகு]ஜெயபுரா என்பது "வெற்றி நகரம்" (जय jaya: "வெற்றி"; पुर pura: "நகரம்") என்பதற்கான சமசுகிருதச் சொல்லாகும். மேலும் சுகார்னோ மயமாக்கலை (de-Sukarnoization) ஒழிப்பதன் ஒரு பகுதியாக சுகார்த்தோவால் ஜெயபுரா என்று பெயரிடப்பட்டது. இருப்பினும் சிறப்பாக பிரதிபலிக்கும் வகையில், நகரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், உள்ளூர்வாசிகள் வலியுறுத்து வருகின்றனர்.[6][7]
இடச்சு குடியேற்றவியக் காலத்தில், ஒல்லாந்து நாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த நகரம் ஒல்லந்தியா என்று அழைக்கப்பட்டது. 1945-ஆம் ஆண்டில், இடச்சுக்காரர்கள் ஜெயபுரா எனும் ஒல்லந்தியாவை அப்போதைய நெதர்லாந்து நியூ கினியாவின் (Netherlands New Guinea) தலைநகராக மாற்றினர்.
1 அக்டோபர் 1962 அன்று, இந்த நகரம் ஒல்லந்தியா/கோத்தா பாரு (Hollandia/Kota Baru) என்று பெயரிடப்பட்டது. 1 மே 1963 அன்று, இந்த நகரத்தை இந்தோனேசியா கைப்பற்றியபோது, அதன் பெயர் கோத்தா பாரு என மாற்றப்பட்டது. 1964-ஆம் ஆண்டில், அப்போதைய இந்தோனேசிய அதிபர் சுகார்னோவின் நினைவாக, இந்த நகரம் சுகார்னோபுரா (Sukarnopura)என பெயர் மாற்றப்பட்டது.[8] 1968-ஆம் ஆண்டில் இந்த நகரம் அதன் தற்போதைய பெயரைப் பெற்றது.
நிலவியல்
[தொகு]பள்ளத்தாக்குகள், மலைகள், பீடபூமிகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் (2,300 அடி) வரை உயர்வு என மாறுபட்ட நிலையில் ஜெயபுராவின் நிலப்பரப்பு வேறுபடுகிறது. ஜெயபுரா நகரம் யோசு சுதர்சோ விரிகுடாவை எதிர்நோக்கியவாறு உள்ளது. ஜெயபுரா நகரம் சுமார் 94,000 எக்டேர் (230,000 ஏக்கர்) பரப்பளவில் உள்ளது.
இந்த நகரம் ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகரத்தின் 30% பகுதியில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மீதமுள்ள பகுதி கரடுமுரடான நிலப்பரப்பு, சதுப்பு நிலங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளைக் கொண்டுள்ளது.
ஜெயபுராவில், ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்யும் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜெயபுரா (2000–2020) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 32.2 (90) |
32.1 (89.8) |
32.1 (89.8) |
32.4 (90.3) |
32.4 (90.3) |
31.9 (89.4) |
31.6 (88.9) |
32.0 (89.6) |
32.2 (90) |
32.8 (91) |
32.6 (90.7) |
32.4 (90.3) |
32.23 (90.01) |
தாழ் சராசரி °C (°F) | 23.9 (75) |
23.8 (74.8) |
24.0 (75.2) |
24.0 (75.2) |
24.0 (75.2) |
23.8 (74.8) |
23.5 (74.3) |
23.5 (74.3) |
23.4 (74.1) |
23.8 (74.8) |
23.9 (75) |
24.1 (75.4) |
23.81 (74.86) |
பொழிவு mm (inches) | 178.5 (7.028) |
224.6 (8.843) |
222.9 (8.776) |
168.5 (6.634) |
188.0 (7.402) |
148.6 (5.85) |
103.2 (4.063) |
129.6 (5.102) |
143.8 (5.661) |
104.7 (4.122) |
144.5 (5.689) |
156.7 (6.169) |
1,913.6 (75.339) |
சராசரி பொழிவு நாட்கள் | 11.9 | 12.3 | 13.0 | 11.9 | 9.3 | 9.6 | 8.8 | 9.4 | 8.7 | 9.4 | 11.1 | 12.3 | 127.7 |
ஆதாரம்: Meteomanz[9] |
நியூ கினி
[தொகு]நியூ கினி என்பது ஒரு தீவு; உலகின் இரண்டாவது பெரிய தீவு.
- நியூ கினி தீவின் மேற்குப் பகுதியில் இந்தோனேசியாவின் 6 மாநிலங்கள் உள்ளன.
- நியூ கினி தீவின் கிழக்குப் பகுதியில் பப்புவா நியூ கினி எனும் தனி ஒரு நாடு உள்ளது. 1975-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்று பப்புவா நியூ கினி என்ற தனி நாடானது.
காட்சியகம்
[தொகு]- ஜெயபுரா காட்சிப் படங்கள்
பொதுவகத்தில் Jayapura தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
இரட்டை நகரங்கள்
[தொகு]புவேர்ட்டோ பிரின்செசா, பிலிப்பீன்சு
குவிசோன் நகரம், பிலிப்பீன்சு
சான் ஒசே (கோஸ்ட்டா ரிக்கா), கோஸ்ட்டா ரிக்கா
சோங்கலா, தாய்லாந்து
வனிமோ, பப்புவா நியூ கினி[10]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Kota Jayapura Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.9171)
- ↑ "Badan Pusat Statistik".
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ Badan Pusat Statistik (2017). Produk Domestik Regional Bruto Kabupaten/Kota di Indonesia 2012-2016. Jakarta: Badan Pusat Statistik.
- ↑ "Badan Pusat Statistik".
- ↑ Jubi.co.id. "Nama Kota Jayapura Diusulkan Diganti Jadi Port Numbay". teras.id (in இந்தோனேஷியன்).
- ↑ "NUMBAY, JAYAPURA, TANAH TABI, NEGERI MATAHARI TERBIT". IMAJI PAPUA (in இந்தோனேஷியன்). 2019-09-18. Retrieved 2022-10-15.
- ↑ Now, West Papua (11 January 2023). "In 1964, the city was renamed to Kota Baru, and then to Sukarnopura. In 1968, it was renamed to Jayapura, and remains so to this day". West Papua Now (in ஆங்கிலம்). Retrieved 23 March 2025.
- ↑ "SYNOP/BUFR observations. Data by months". Meteomanz. Retrieved 21 March 2024.
- ↑ "Two Sepik towns as future cities". thenational.com.pg. The National. 2016-05-06. Retrieved 2021-07-21.
சான்றுகள்
[தொகு]- L, Klemen (2000). "Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942".
- Lumintang, Onnie; Haryono, P. Suryo; Gunawan, Restu; Nurhajarini, Dwi Ratna (1997). Biografi Pahlawan Nasional Marthin Indey dan Silas Papare (PDF). Indonesia: Ministry of Education and Culture.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Jayapura தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- A small tour of Jayapura
- Expat Living in Jayapura, Irian Jaya
- Jayapura City Tourism – Papua Indonesia