ஜெயபாலன் தம்பியப்பா
ஜெயபாலன் தம்பியப்பா Jayabalan Thambyappa | |
|---|---|
| பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் பத்து ஊபான் சட்டமன்றத் தொகுதி | |
| பதவியில் 5 மே 2013 – 9 மே 2018 | |
| முன்னையவர் | ரவீந்திரன் சுப்பிரமணியம் (பாரா–பிகேஆர்) |
| பின்னவர் | குமரேசன் ஆறுமுகம் (பாக்காத்தான்–பிகேஆர்) |
| பெரும்பான்மை | 9,857 (2013) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Jayabalan A/L A. Thambyappa 17 ஏப்ரல் 1945[1] பினாங்கு, மலாயாவில் சப்பானியர் காலம் |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | மக்கள் நீதிக் கட்சி (PKR) |
| பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் ராக்யாட் (PR) (2008–2015) பாக்காத்தான் அரப்பான் (PH) (2015–தற்போது) |
| வாழிடம் | பத்து ஊபான், பினாங்கு |
| முன்னாள் மாணவர் | பினாங்கு ஜோர்ஜ்டவுன் உயர்நிலைப்பள்ளி; சென்னைப் பல்கலைக்கழகம்[2] |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | மருத்துவர் |
ஜெயபாலன் தம்பியப்பா (ஆங்கிலம்; மலாய்: Jayabalan Thambyappa) (பிறப்பு: 17 ஏப்ரல் 1945) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மே 2013 முதல் மே 2018 வரை பினாங்கு, பத்து ஊபான் சட்டமன்றத் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றியுள்ளார்.
பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணி; மற்றும் முன்னாள் கூட்டணியான பாக்காத்தான் ராக்யாட் கூட்டணி (PR) ஆகிய கூட்டணிகளின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினராக உள்ளார்.[3]
பின்னணி
[தொகு]ஜெயபாலன் தம்பியப்பா, மருத்துவத்தில் இளங்கலைப் பட்டமும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டமும் (MBBS) பெற்றுள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]பத்து ஊபான் சட்டமன்றத் தொகுதியில் பதவியில் இருந்த ரவீந்திரன் சுப்பிரமணியம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அவருக்குப் பதிலாக 2013 பினாங்கு மாநிலத் தேர்தலில் மக்கள் நீதிக் கட்சி, டாக்டர் ஜெயபாலன் தம்பியப்பாவை வேட்பாளராக நியமித்தது. 17,017 வாக்காளர்களைக் கொண்ட அந்தத் தொகுதியில் 9,857 வாக்குகளைப் பெற்று ஜெயபாலன் தம்பியப்பா வெற்றி பெற்றார். பாரிசான் நேசனல் வேட்பாளர் மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்களை அந்தத் தேர்தலில் தோற்கடித்தார்.
இருப்பினும், 14-ஆவது பொதுத் தேர்தலில் (2018 பினாங்கு மாநிலத் தேர்தல்) கட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிகேஆர் வேட்பாளர்களில் ஜெயபாலன் தம்பியப்பாவும் ஒருவர் ஆவார். அவருக்குப் பதிலாக குமரேசன் ஆறுமுகம் நியமிக்கப்பட்டார். பிகேஆர் கட்சிக்குச் சொந்தமான பத்து ஊபான் சட்டமன்றத் தொகுதியை குமரேசன் ஆறுமுகம் தக்க வைத்துக் கொண்டார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
% | எதிரணி | வாக்குகள் | % | பதிவான வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2013 | N35 பத்து ஊபான் | ஜெயபாலன் தம்பியப்பா (பிகேஆர்) |
17,017 | 69.70% | கோ கெங் சினியா (கெராக்கான்) | 7,160 | 29.30% | 24,750 | 9,857 | 86.40% | ||
| முகமது நூர் முகமது அப்துல் கதீர் (சுயேச்சை) | 186 | 0.76% | ||||||||||
| பரதராஜன் நாராயணசாமி பிள்ளை (சுயேச்சை) | 40 | 0.16% | ||||||||||
| இராஜேந்திர அம்மாசி (சுயேச்சை) | 26 | 0.08% | ||||||||||
விருதுகள்
[தொகு]
பினாங்கு
- Order of the Defender of State (DSPN) – டத்தோ (2019)[5][6]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SENARAI PENERIMA DARJAH-DARJAH KEBESARAN, BINTANG DAN PINGAT-PINGAT KEHORMATAN NEGERI PULAU PINANG 2019" (PDF) (in மலாய்). Warta Kerajaan Negeri Pulau Pinang.
- ↑ "Dr. Jayabalan Thambyappa attended Georgetown's Sek Men and Technical Institute before continuing his studies in India in the field of medicine". Pusat Khidmat Masyarakat ADUN Batu Uban N35 - Dr. Jayabalan. Retrieved 22 January 2026.
- ↑ "Calon PRU Jayabalan A/L A. Thambyappa". pru.sinarharian.com.my.
- ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 election.
- ↑ "Semakan Penerima Darjah Kebesaran Bintang dan Pingat". www.istiadat.gov.my.
- ↑ "Mantan ADUN Batu Uban terima darjah kebesaran TYT". www.buletinmutiara.com.