ஜெயனி சேனநாயக்க
ஜெயனி சேனநாயக்க ජයනි සේනානායක | |
|---|---|
| பிறப்பு | கபுவெல விதானகே சேனநாயக்க முதியன்சேலாகே ஜயனி சமத்க தர்மதாச சேனநாயக்க பெப்ரவரி 1, 1975 அனுராதபுரம், இலங்கை |
| மற்ற பெயர்கள் | ஜெயனி சேனநாயக்க |
| கல்வி | நிவந்தகச்சேதிய மகா வித்யாலயா , காட்சி மற்றும் நிகழ்த்து கலைகளுக்கான பல்கலைக்கழகம் |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1997 முதல் தற்போது வரை |
| வாழ்க்கைத் துணை | சஞ்சீவ இல்லெபெருமா |
ஜெயனி சேனநாயக்க (Jayani Senanayake)(பெப்ரவரி 1, 1974), இலங்கைத் திரைப்படத்துறையிலும், நாடகங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்த நடிகை ஆவார் .[1] இவர் சூலங் கிரில்லி, வலபதலா, கோல் படங்களில் நடித்ததற்காக மிகவும் பரவலாக அறியப்பட்டவா்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சேனநாயக்க அனுராதபுரம் சிறீ சுமங்கல மகா வித்தியாலயத்தில் கல்வி கற்க ஆரம்பித்தார். பின்னர் கல்குளம தம்தின்ன வித்தியாலயத்திற்குச் சென்று இறுதியாக அனுராதபுரம் நிவந்தகச்சேதிய வித்தியாலயத்தில் கல்வியை முடித்தார்.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]இவர் பள்ளியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவர் வட மத்திய நாடக விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். பின்னர், சேனநாயக்க எம். தர்மசேனாவுடன் இணைந்து அவரது வேரா என்ற நாடகத்தில் நடித்தார். பல்கலைக்கழகக் காலங்களில் வசந்த துக்கன்னராலாவின் மூலம் நாடகத்துறையில் இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.[2]
2001ஆம் ஆண்டில் தர்மசேன பத்திராஜா இயக்கிய மது யாம் தவச திரைப்படத்தின் மூலம் இவரது முதல் திரைப்படத்தை தொடங்கினார்.[3][4]
விருதுகளும் பாராட்டுகளும்
[தொகு]இவர் உள்ளூர் மேடை நாடக விழாக்களிலும் , தொலைக்காட்சி விழாக்களிலும் பல விருதுகளை வென்றுள்ளார்.[5]
புன்கா கலாச்சார விருதுகள்
[தொகு]| ஆண்டு | பரிந்துரை விவரம் | விருது | முடிவு |
|---|---|---|---|
| 2009 | நாடகத்தில் நடிப்பு | கௌரவ விருது | வெற்றி |
சுமதி விருதுகள்
[தொகு]| ஆண்டு | பரிந்துரை விவரம் | விருது | முடிவு |
|---|---|---|---|
| 2013 | மே வசந்த கலையய் | தகுதி விருது | வெற்றி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Actresses in Sri Lankan cinema - Jayani Senanayake". IMDb. Retrieved 18 August 2019.
- 1 2 "I found the love I wanted". Hiru FM. Retrieved 18 August 2019.
- ↑ "Jayani Senanayake filmography". Sinhala Cinema Database. Retrieved 18 August 2019.
- ↑ "Jayani Senanayake films". Rate Your Music. Retrieved 18 August 2019.
- ↑ "Bunka honours on five Lankans". Sunday Times. Retrieved 18 August 2019.