ஜெயந்தி (நடிகை)
ஜெயந்தி | |
---|---|
பிறப்பு | கமலா குமாரி 6 சனவரி 1945 பெல்லாரி, சென்னை மாகாணம், (தற்போதைய கருநாடகம்), இந்தியா |
இறப்பு | 26 சூலை 2021 பனசங்கரி | (அகவை 76)
பணி | நடிகை, தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1960–2021 |
வாழ்க்கைத் துணை | பெக்கெட் சிவராம் |
பிள்ளைகள் | 1 |
கமலா குமாரி (6 சனவரி 1945 - 26 சூலை 2021), ஜெயந்தி (Jayanthi) என்ற தனது மேடைப் பெயரால் அறியப்படும் இவர், கன்னடத் திரைப்படத்துறை மற்றும் தமிழகத் திரைப்படத்துறையில் தனது பணிக்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகையாவார்.[1][2] 1960கள், 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதியில் இருந்து பல்வேறு வகை படங்களில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக குறிப்பிடப்பட்ட இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் மராத்திய மொழிகளில் படங்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏழு கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்,[3] நான்கு முறை சிறந்த நடிகையாகவும், இரண்டு முறை சிறந்த துணை நடிகையாகவும், சிறந்த நடிகைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் மற்றும் சிறந்த நடிகைக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றார். இவர் கன்னடத் திரைய்லகின் "மிகவும் தைரியமான மற்றும் அழகான" நடிகையாக பல்வேறு ஊடகங்கள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளார்.[4] இந்த தலைப்பு இவருக்கு கணிசமான விளம்பரத்தைப் பெற்றுத் தந்தது. கன்னடத் திரையுலகம் அவருக்கு "அபிநய சாரதே" ( நடிப்பில் சாரதா தேவி ) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
தொடக்ககால வாழ்க்கை
[தொகு]ஜெயந்தி 1945 ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிரித்தானிய இந்திய மாகாணமான சென்னை மாகாணத்தின் பெல்லாரியில் பிறந்தார்.[5] இவரது தந்தை பாலசுப்ரமணியம் பெங்களூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவரது தாயார் சந்தானலட்சுமி. ஜெயந்தி மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். இவரது சிறுவயதில் பெற்றோர் பிரிந்து விட்டார்கள். இவரது தாயார் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். ஜெயந்தியின் தாயார் தனது மகளை பாரம்பரிய நடனக் கலைஞராக மாற்றுவதில் ஆர்வமாக இருந்தார். எனவே இவரை நடனப் பள்ளியில் சேர்ந்தார். நடனப் பள்ளியில் பிரபல தமிழ் நடிகை மனோரமா இவரது தோழியாக இருந்தார்.
தொழில் வாழ்கை
[தொகு]தொடக்க காலம்
[தொகு]சிறுவயதில் ஜெயந்தி தனக்கு பிடித்த நடிகரான என். டி. ராமராவை பார்க்க அரங்கத்திற்குச் சென்றார். அப்போது ராமராவ் இவரை தன்னுடன் நாயகியாக நடிக்க கேலியாகக் கேட்டார். பிற்காலத்தில் இந்த இணை ஜகதேக வீருணி கதை, குல கவுரவம், கொண்டவீதி சிம்ஹம் மற்றும் ஜஸ்டிஸ் சௌத்ரி போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்தது. ஜெயந்தி குண்டாக இருந்ததாலும், நன்றாக நடனமாட முடியாததாலும் பெரும்பாலான நேரங்களில் கேலி செய்யப்பட்டார். இளமைப் பருவத்தில், சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒரு சில சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரபல திரைப்பட இயக்குனர் ஒய்.ஆர்.சுவாமி இவருக்கு ஒரு வாய்ப்பளித்தார். அவர் ஜெயந்தியை ஜேனு கூடு என்றா படத்தில் ஜெயந்தி என்ற பாத்திரத்தில் நடிக்க வைத்தார். பின்னர் இதுவே இவரது திரைப்பெயரானது.[1] ஜெயந்தி கன்னடத் திரை நடிகர் ராஜ்குமாருடன் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[6]
கன்னட திரைப்படத் துறையும், பெயர் மாற்றமும்
[தொகு]கன்னட திரைப்படத் துறையில் ஜெயந்தி அன்றைய புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார். கே. எஸ். அஸ்வத், பண்டாரி பாய், ஜெயஸ்ரீ, உதயகுமார், கல்யாண்குமார் போன்றவர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் மிஸ் லீலாவதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த படத்தில் சிறு வயது பெண்ணாக நடித்தார்.இது தேசிய விருது பெற்ற திரைப்படம் ஆகும் .
கவர்ச்சியின் முன்னோடி
[தொகு]மிஸ் லீலாவதியில் கன்னட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஜெயந்தி இரவு நேர உடைகளை அறிமுகப்படுத்தினார். கன்னடத் திரையில் முதன்முதலாக நவீன காலணிகளை மிகவும் அறிமுகப்படுத்தியதற்காக இவர் பாராட்டப்பட்டார். இவர் தான் கன்னடத்தில் முதன் முதலாக நீச்சலுடை அணிந்து நடித்தார். தமிழ் திரைப்படத்தில் பட்டணத்தில் பூதம் என்ற படத்தில் கே. ஆர். விஜயா முதன் முதலில் நீச்சல் உடையில் தோன்றினார்.
தமிழ் சினிமாவில் இவரது பங்கு
[தொகு]இவர் இயக்குனர் கே. பாலசந்தரின் முதன்மை கதாநாயகி ஆனார். எதிர் நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், புன்னகை, வெள்ளிவிழா, கண்ணா நலமா போன்ற படங்களிலும் , ம. கோ. இராமச்சந்திரன் உடன் படகோட்டி (திரைப்படம்) மற்றும் முகராசி யிலும் நடித்தார். ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் ஆகியோருடன் அதிகமான படத்தில் நடித்துள்ளார் .
சொந்த வாழ்க்கை
[தொகு]இவரது முதல் கன்னடப் படம் ஜீனு கூடு. இந்தப் படத்தின் இயக்குனர் பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
விருதுகள்
[தொகு]மிஸ் லீலாவதி என்ற திரைப்படத்திற்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கையால் தேசிய விருதினை பெற்று கொண்டார்.[7]
மறைவு
[தொகு]சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த இவர், பெங்களூரில் உள்ள தனது வீட்டில் 2021 சூலை 26 அன்று காலமானார்.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Fernandes, Ronald Anil (23 December 2003). "Straight from the Heart:As this month's guest at Maneyangaladalli Mathukathe, cine actress Jayanthi held her audience spellbound with her usual charm". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 6 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090306023436/http://www.deccanherald.com/archives/dec23/spt3.asp.
- ↑ Scroll Staff. "'Goddess of acting' Jayanthi dies at 76". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2021.
- ↑ "Kannada actor Abhinaya Sharade Jayanthi passes away at 76". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
- ↑ Ganesh, Deepa (15 April 2011). "Bold and beautiful". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Bold-and-beautiful/article14683278.ece.
- ↑ Bharadwaj, K. v Aditya (26 July 2021). "Veteran multilingual actor Jayanthi passes away at 76" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/veteran-multilingual-actor-jayanthi-passes-away-at-76/article35532812.ece.
- ↑ "Veteran star Jayanthi, who acted in over 500 films, passes away at 76". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/veteran-star-jayanthi-who-acted-in-over-500-films-passes-away-at-76/articleshow/84749948.cms?UTM_Source=Google_Newsstand&UTM_Campaign=RSS_Feed&UTM_Medium=Referral.
- ↑ Bharathi, Veena (13 October 2013). "Celebrating a big screen beauty". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 7 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180307022628/http://www.deccanherald.com/content/362729/celebrating-big-screen-beauty.html.
- ↑ "Veteran Kannada actor Jayanthi no more". Deccan Herald.
- ↑ "Veteran actress Jayanthi no more; dies in her sleep". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Jayanthi
- When two stars TWINKLE, Article about Jayanthi in The Hindu