உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயந்தி தலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயந்தி தலால்
பிறப்புஜெயந்தி கேலாபாய் தலால்
(1909-11-18)18 நவம்பர் 1909
அகமதாபாது
இறப்பு24 ஆகத்து 1970(1970-08-24) (அகவை 60)
உறவினர்கள்கேலாபாய் (தந்தை)
விருதுகள்இரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக்

ஜெயந்தி கேலாபாய் தலால் (Jayanti Ghelabhai Dalal) (18 நவம்பர் 1909 - 24 ஆகஸ்ட் 1970) ஓர் இந்திய எழுத்தாளரும், நூல் வெளியீட்டாளரும், மேடை நடிகரும், இயக்குனரும், அரசியல்வாதியும் ஆவார். நாடக அமைப்பாளரின் குடும்பத்தில் பிறந்து, இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலும் அதற்குப் பின்னரும் அரசியலில் ஈடுபட்ட இவர் சமூகவுடைமையாலும், காந்திய தத்துவத்தாலும் ஈர்க்கப்பட்டார். இவர் தனிநபர் நாடகங்கள், சிறுகதைகள், திருத்தப்பட்ட வெளியீடுகள் ஆகியவற்றை எழுதினார்.

வாழ்க்கை[தொகு]

ஜெயந்தி தலால், 1909 நவம்பர் 18 அன்று அகமதாபாத்தில் பிறந்தார். இவரது தந்தை கேலாபாய் தேசி நாடக சமாஜ் என்ற நாடகக் குழுவின் அமைப்பாளராக இருந்தார்.[1] எனவே இவர் கல்வியை பல்வேறு இடங்களில் பெற்றார். 1925இல் மெட்ரிகுலேசன் முடித்த இவர் மேலதிக படிப்புகளுக்காக குஜராத் கல்லூரியில் சேர்ந்தார். அவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதால் 1930ஆம் ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பின் போது படிப்பை கைவிட்டுவிட்டார்.[2] [3]

இவர் 1939இல் பதிப்பகத்தைத் தொடங்கினார். தான் இறக்கும் வரை வெளியிட்டு வந்தார். 1956ஆம் ஆண்டில் மகாகுஜராத் இயக்கத்தில் ஈடுபட்ட அவர் இந்துலால் யாக்னிக் என்பவருக்கு உதவினார். மேலும், அந்தக் காலகட்டத்தில் தினமும் நவகுஜரத்தை வெளியிட்டார். 1957 இல் பம்பாய் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962இல், மீண்டும் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் தோற்றார். ஆகஸ்ட் 24, 1970 அன்று அகமதாபாத்தில் இறந்தார்.[4] [5]

தனது அரசியல் வாழ்க்கையுடன், இரங்மண்டல் என்ற தொழில்முறை நாடகக் குழுவையும் இயக்கி நடித்து வந்தார்.

விருதுகள்[தொகு]

1959 ஆம் ஆண்டில் இவருக்கு இரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக் விருதும் , இலக்கியத் துறையில் செய்த பங்களிப்பிற்காக நர்மத் சுவர்ண சந்திரக் விருதும் வழங்கப்பட்டது.[4]

மேலும் படிக்க[தொகு]

  • Jayanti Dalāla śatābdī-vandanā (in குஜராத்தி). Sāhitya Akādemī. 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-2820-7.
  • Raghuveer Chaudhari (1981). Jayanti Dalal. Kumakuma Prakāśana.

மேற்கோள்கள்[தொகு]

  1. Baradi, Hasmukh (2004). "Dalal, Jayanti (1909–70): Gujarati playwright, publisher, activist.". In Lal, Ananda (ed.). Oxford Companion to Indian Theatre (in ஆங்கிலம்). Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780195644463.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195644463. (subscription required)
  2. Amaresh Datta (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1803-1.
  3. "જયંતિ ઘેલાભાઈ દલાલ". Gujarati Sahitya Parishad (in குஜராத்தி). 4 September 2014.
  4. 4.0 4.1 "જયંતિ ઘેલાભાઈ દલાલ". Gujarati Sahitya Parishad (in குஜராத்தி). 4 September 2014."જયંતિ ઘેલાભાઈ દલાલ". Gujarati Sahitya Parishad (in Gujarati). 4 September 2014.
  5. The Indian P.E.N., P.E.N. All-India Centre., 1970, p. 299

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்தி_தலால்&oldid=3712830" இலிருந்து மீள்விக்கப்பட்டது