ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முனைவர். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கோவை பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது செறிவான ஊக்கமூட்டும் மேடை உரைகளுக்காக மாணவர்கள், கல்வி நிலையங்கள், இலக்கிய வட்டங்கள், தொலைகாட்சி நிகழ்வுகள் இடையே பரவலாக அறியப்படுபவர். தனது மனித வளங்கள் சார்ந்த கருத்துகளுக்காக கல்வியாளர்களிடையே பெரிதும் நாடப்படுபவர்.

வாழ்க்கை[தொகு]

ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் இருமொழி இலக்கியங்களில் முனைவர் பட்டம் பெற்றவர். 1998ல் புதுச்சேரியின் புதுவைப் பல்கலைகழகத்தில் ஆங்கிலத்திலும், 2009ல் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் தமிழிலும் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலையின் ஒரு முதுகலை பட்டமும் கொண்டவர். இவரது ஆங்கில முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடு குறுந்தொகையின் ஆங்கில மொழியாக்கங்கள் குறித்தது. தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் குறுநாவல்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார்[1].

தானே எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பெண்ணிய சிந்தனைகள் [2] குறித்து தொடர்ந்து உரையாற்றுபவர் என்று பலதளங்களில் இயங்கி வருபவர்[3]. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்வுகளில் பேசிவரும் இவர், "மனதில் உறுதி வேண்டும்" என்று வெளியாகும் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசுகிறார்[4].

மனித வளங்கள், உணர்வுகள், வெளிப்பாடு ஆகியவற்றில் பயிற்சியாளராகவும் மாணவ ஆலோசகராகவும் தனது பங்கை நிறுவியுள்ளார். UGCயின் கல்வி வளங்களை கொண்ட மனிதராக தனது பங்களிப்பை பல இந்திய பல்கலைகழகங்களுக்கு வழங்கியுள்ளார். இன்னும் கல்வி சார்ந்த பல்வேறு பங்களிப்புகளை இந்திய பல்கலைகழகங்களுக்கு அளித்துள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட குறுந்தொகை மொழிபெயர்ப்பு பதிப்பின் ஆசிரியர் குழுவில் பங்காற்றியுள்ளார். திசைகள் எனும் தமிழ் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இளம் வயதில் ஆனந்த விகடனின் போட்டியில் சிறந்த சிறுகதை ஆசிரியர் விருதை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து பெற்றார். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

இவருடைய அனுபவக் குறிப்புகள் மற்றும் சிறுகதைகள் அடங்கிய நூலான மழைவில் மனிதர்கள் மற்றும் கட்டுரைத் தொகுப்பாகிய மௌன இரைச்சல் ஆகியவை வெளியாகியுள்ளது. மொழிபெயர்ப்பாளராக கவிஞர் சிற்பியின் பூஜ்யங்களின் சங்கிலி நூலை the chain of absolutes என்று ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்[5]. பாரதி, கவிஞர் கல்யாண்ஜி ஆகியோரின் கவிதைகள் சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்[6].

உசாத்துணைகள்[தொகு]

பிற இணைப்புகள்[தொகு]