ஜெயத்மா விக்கிரமநாயக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயத்மா விக்கிரமநாயக்கா 1990 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 22 ஆம் நாள் பிறந்தார். தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையின் இளைஞர்களுக்கான தூதரக பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். அந்தோனியோ குத்தேரசு மூலம் இவர் ஐக்கிய நாடுகள் அவையின் இளைஞர்களுக்கான தூதரக பொதுச்செயலாளராக 2017 ஆம் ஆண்டு சூன் திங்கள் நியமிக்கப்பட்டார். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றிய ஜோர்டான் நாடாடை சேர்ந்த முதல் ஐக்கிய நாடுகள் அவையின் இளைஞர்களுக்கான தூதரக பொதுச்செயலாளராக பணியாற்றிய அஹமது அல்கின்டேவ்வை வெற்றி பெற்றார்.[1][2]

ஜெயத்மா விக்கிரமநாயக்கா
ஐக்கிய நாடுகள் அவை இளைஞர்களுக்கான தூதரக பொதுச்செயலாளர்
ஐக்கிய நாடுகள் அவை இளைஞர்களுக்கான தூதரக பொதுச்செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 சூலை 2017
நியமிப்புஅந்தோனியோ குத்தேரசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 நவம்பர் 1990 (1990-11-22) (அகவை 33)
பெந்தோட்டை, இலங்கை

முன்னதாக தன் பணியில் சேர்ந்த உடன் விக்ரமநாயக்கா சர்வதேச மற்றும் தன் தாய் நாடான இலங்கையின் இளைஞர்களின் வளர்ச்சிக்கு முயற்சித்தார்.[3] இது சம்பந்தமாக அவர் இளைஞர் அமைப்பான ஹேஸ்டேக் தலைமுறையை உருவாக்கி இளைஞர்களின் குறிப்பாக இலங்கை பெண்களை சமூக அக்கறை மற்றும் அரசியலில் உரிமையை உயர்த்தினார். அரசியலில் உரிமையை உயர்த்தினார். ஜெயத்மா விக்கிரமநாயக்கா உலக இளைஞர்களின் நலனுக்காக ஈடுபாடுடன் செயல்படும் ஓர் இலங்கை பெண்மணி ஆவார்.[4][5]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஜெயத்மா விக்கிரமநாயக்கா 1990 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 22 ஆம் நாள் இலங்கையில் உள்ள தென்மேற்கு கடற்கரை நகரான பெந்தோட்டையில் பிறந்தார். ஜெயத்மா விக்கிரமநாயக்கா அறிவியலில் இளங்கலை பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகம் மூலம் பெற்றோர்.[3] பல்கலைக்கழகத்தில் இருந்தபோது விக்ரமநாயக்கா நாட்டில் வளர்ந்து வரும் இளம் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இலங்கை இளைஞர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்த முதல் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றார்.

செயல்பாடுகள்[தொகு]

2012 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் இளைஞர்களின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவைன் 67 ஆவது பொது சபையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] தனது இளைஞர்களுக்கான பிரதிநிதி பணியை 2013 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். 2014 ஆம் ஆண்டு இலங்கையால் நடத்தப்பட்ட உலக இளைஞர்கள் மாநாட்டின் உரிப்பினராகவும், அதன் மூலம் நடைபெற்ற சர்வதேச இளைஞர் செயல் திறன் நிகழ்வின் தலைவராகவும் பணியாற்றினார். தன் திறமையால் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், தீர்மானம், சீரமைவு ஆகியவற்றை கவனித்துக்கொண்டார். ஜெயத்மா விக்கிரமநாயக்கா மாநாட்டின் வெற்றி முழுமையடைய காரணமாக இருந்தார். சூலை 15 ஆம் நாள் உலக இளைஞர் திறன் தினம் கொண்டாட இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் அவைன் 69 ஆவது பொது சபையில் கோரிக்கை விடுக்க ஜெயத்மா விக்கிரமநாயக்கா முக்கிய பணியாற்றினார்.[7] பின்னர் விக்ரமநாயக்கா 2013 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இலங்கையின் இளைஞர் நாடாளுமன்ற செனட்டரானார். பின்னர் ஒரு உரை முன்முயற்சி திட்டத்தின் அலுவலராக ஆனார். இதன் மூலம் போருக்கு பிந்தைய ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் உரிமையை உருவாக்க ஒருமுகப்படுத்தினார்.[3][8] 2016 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இலங்கை நாடாளுமன்றத்தில் செயலாளரில் இருந்து பொதுச்செயலாளர் பதவி வரை பதவிவைத்தார். ஐக்கிய நாடுகள் அவையின் இளைஞர்களுக்கான தூதரக பொதுச்செயலாளராக ஆகுவதற்கு முன் இலங்கையின் நிர்வாக சேவையின் அலுவலராக பணியாற்றினார்.தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையின் இளைஞர்களுக்கான தூதரக பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். அந்தோனியோ குத்தேரசு மூலம் இவர் ஐக்கிய நாடுகள் அவையின் இளைஞர்களுக்கான தூதரக பொதுச்செயலாளராக 2017 ஆம் ஆண்டு சூன் திங்கள் நியமிக்கப்பட்டார்.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Envoy on Youth - Office of the Secretary-General's Envoy on Youth". www.un.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  2. "Alhendawi Announces Departure From His Position, Set to Join the World Organization of the Scout Movement as Secretary-General". www.un.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  3. 3.0 3.1 3.2 "Ms. Jayathma Wickramanayake of Sri Lanka - Envoy on Youth | United Nations Secretary-General". www.un.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  4. Section, United Nations News Service (11 August 2017). "UN News - INTERVIEW: Meet the new UN Youth Envoy, Jayathma Wickramanayake". UN News Service Section (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  5. JAYALATH, NAVODDYA (1 July 2017). "Jayathma: THE GLOBAL FACE of Lanka’s youth » Nation" (in en-US). Nation இம் மூலத்தில் இருந்து 14 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171214014819/http://nation.lk/online/2017/07/01/the-global-face-of-lankas-youth.html. 
  6. "Braving the hurricanes of diplomacy and weather at the UN | The Sundaytimes Sri Lanka". www.sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  7. "World Youth Skills Day, July 15". www.un.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  8. Onetext. "About OTI «  One-Text Initiative". www.onetext.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  9. "Hashtag Generation". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-04.
  10. "Two Sri Lankans receive Queen’s Young Leader Award - Sri Lanka News" (in en-US). Sri Lanka News - Newsfirst | Breaking News and Latest News provider | Political | Sports | International | Business. 2017-06-30 இம் மூலத்தில் இருந்து 2017-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171213010340/http://newsfirst.lk/english/2017/06/two-sri-lankans-recognised-queens-young-leader-award/169687.