ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருகம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் ஒரு பகுதியான விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகும்.

இந்தப் பள்ளி பரந்து விரிந்த விசாலமான இடத்தில், நூற்றுக்கணக்கான மரங்களைக் கொண்டு மிகப் பெரிய விளையாட்டு மைதானம், ஸ்மார்ட் வகுப்பு வசதி ஆகியவற்றுடன் அமைந்துள்ள ஒரு பள்ளியாகும். இந்தப் பள்ளியில் 2017 ஆண்டுவாக்கில் 2,822 பேர் படிக்கின்றனர். 85 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

2016 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 353 மாணவிகள் 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். அவர்களில் 99.3 விழுகாடு மாணவியர் வெற்றி பெற்றனர். 475 மதிப்பெண்களுக்கு மேல் 20 பேரும், 450-க்கு மேல் 37 பேரும் பெற்றனர். அதேபோல் 548 மாணவிகள் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதியதில், 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

விளையாட்டு[தொகு]

2016 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய தடகளப் போட்டியில் இந்தப் பள்ளி மாணவி பி. எம். தபிதா 100 மீட்டர் ஓட்டப் போட்டியிலும், உயரம் தாண்டுதல் போட்டியிலும் தேசிய அளவில் சாதனை படைத்தார். மாநில, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பள்ளியின் மாணவிகள் நூற்றுக்கணக்கான பரிசுகளை பெற்றுள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வி. தேவதாசன் (31 சூலை 2017). "கல்வி, கலை, விளையாட்டு என பசுமைச் சூழலில் பன்முகத் திறன்கள் வளர்ப்பு: சாதனைகளை நிகழ்த்தும் விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2017.