ஜெம்ஸித் அஸீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி) (பிறப்பு: நவம்பர் 13, 1983) இலங்கை முஸ்லிம் எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். அல்ஹஸனாத் இதழின் ஆசிரியரும் எங்கள் தேசம் பத்திரிகையின் உதவி ஆசிரியருமாவார்[சான்று தேவை].

முல்லைத்தீவில் பிறந்து கொழும்பு, புதுக்கடை, மீரானியா வீதியில் வசித்து வரும் ஜெம்ஸித் அஸீஸ் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனின் பணிப்பாளர் சபை உறுப்பினரும், சமூக ஆர்வலருமாவார். ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் இசுலாமியக் கற்கை நெறியை பூர்த்தி செய்ததுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்ககழகத்தில் ஊடகவியல் துறையில் முதுகலை கற்கை நெறியைத் தொடரும் இவர், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் சமரசம், மலேசியாவிலிருந்து வெளிவரும் நம்பிக்கை போன்ற இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

கம்பளிப்பூச்சியின் ரோமம் உதிர்வது போல் எனது அறியாமை உதிர்ந்தது எனும் பெயரில் டாக்டர் அப்துல்லாஹ் (முன்னாள் பெரியார்தாசன்) பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார். இவரது மனைவி ஹுஸ்னா ஹுசைன் தினக்குரல் பத்திரிகையில் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றி வருகிறார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெம்ஸித்_அஸீஸ்&oldid=3035521" இலிருந்து மீள்விக்கப்பட்டது