உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெம்பரானா பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெம்பரானா பிராந்தியம்
Jembrana Regency
Kabupaten Karangasem
ᬓᬩᬸᬧᬢᬾᬦ᭄ᬚᬾᬫ᭄ᬭᬦ
மெகெபுங் போட்டி
கிலிமனுக் துறைமுகம்
ஜெகநாத் இயற்கை பூங்கா
சுப்பெல் கடற்கரை
நெகாரா நகரச் சின்னம்
அலுவல் சின்னம் ஜெம்பரானா பிராந்தியம்
சின்னம்
பாலியில் ஜெம்பரானா
பாலியில் ஜெம்பரானா
ஜெம்பரானா பிராந்தியம் is located in இந்தோனேசியா
ஜெம்பரானா பிராந்தியம்
      ஜெம்பரானா

ஆள்கூறுகள்: 8°18′S 114°40′E / 8.300°S 114.667°E / -8.300; 114.667
நாடு இந்தோனேசியா
மாநிலம் பாலி
தலைநகரம்நெகாரா
பரப்பளவு
  மொத்தம்841.80 km2 (325.02 sq mi)
மக்கள்தொகை
 (2024)[1]
  மொத்தம்3,29,353
  அடர்த்தி390/km2 (1,000/sq mi)
வழிபாடு
  சமயம்
  HDI (2023)Increase 75,32 (2024)
உயர்வு[3]
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +8
அஞ்சல் குறியீடு
+62 822
தொலைபேசி(+62) 365
வாகனப் பதிவெண்கள்DK
இணையதளம்jembranakab.go.id

ஜெம்பரானா பிராந்தியம் (ஆங்கிலம்: Jembrana Regency; பாலினியம்: kabupatenjemrana; இந்தோனேசியம்: Kabupaten Jembrana) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் நெகாரா.

இந்த பிராந்தியத்திற்கு வடக்கே புலெலெங் பிராந்தியம்; மேற்கே தபனான் பிராந்தியம் ஆகிய இரு பிராந்தியங்கள் உள்ளன; மற்றும் மேற்கில் பாலி நீரிணையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. பாலி தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெம்பரானா பிராந்தியம் 841 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது; மற்றும் 2024-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 329,353 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.

ஜெம்பரானா பிராந்தியம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: வடக்கில் ஒரு பெரிய மலைப்பகுதி; இது மேற்கு பாலி தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும்; மற்றும் தெற்கில் கடலோரப் பகுதி; கடற்கரையில் உள்ள மணல் பெரும்பாலும் எரிமலை மணல்களால் ஆனது. ஆனாலும் மெடேவி கடற்கரை நகரில் பல அழகான வெள்ளை பவளக் கடற்கரைகளும் உள்ளன. தெற்கு ஜெம்பரானாவில் மிக அழகான நெல் வயல்களுக்கான படிமுறை உள்ளன.[4]

பேரன்சக் கோயில்

[தொகு]

பெரஞ்சாக் கோயில் (Gede Perancak Temple) ஒரு சிறிய இந்து கடல் கோயில் ஆகும். 15-ஆம் நூற்றாண்டில் ஜாவாவில் இருந்து பாலிக்கு வந்த தங் அயாங் நிரர்த்தா துறவி தரையிறங்கிய இடத்தைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயில் கட்டப்பட்டது. சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட பாலி கோயில்களில் புகழ்பெற்ற கடல் கோயிலாக இந்தக் கோயில் விளங்குகிறது.[4]

மக்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற பிரார்த்தனை செய்ய இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். கோயிலைச் சுற்றி காளை மாட்டுப் பந்தயங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன; அருகில் உள்ள தாமான் விசாத்தா பெரஞ்சாக் பூங்காவில் (Taman Wisata Perancak Park) நடைபெறுகின்றன.[4]

மேற்கு பாலி தேசிய பூங்கா

[தொகு]

பாரம்பரியமாக, ஜெம்பரானாவின் பொருளாதாரம் ,வேளாண் துறையை அடிப்படையாகக் கொண்டது. நெல் சாகுபடி முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். இருப்பினும், பாலியில் உள்ள பல பகுதிகளைப் போலவே, சுற்றுலாத் துறையும் உள்ளூர் பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாக மாறியுள்ளது.[5]

நெல் உற்பத்தியைத் தவிர, சோளம், வேர்க்கடலை மற்றும் கிராம்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கும் ஜெம்பரானா பெயர் பெற்றது.[5]

ஜெம்பரானா பிராந்தியம், மேற்கு பாலி தேசிய பூங்காவின் தாயகமாகும். இந்தத் தேசிய பூங்கா, அதன் மாறுபட்ட வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகிற்காக அறியப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்தப் பூங்கா சுமார் 190 சதுர கிலோமீட்டர்கள் (73 sq mi) பரப்பளவைக் கொண்டது. பூங்காவின் அமைவுப் பகுதியில் 82% நிலத்திலும் மீதமுள்ளவை கடலிலும் உள்ளன.[6][7]

நிர்வாக மாவட்டங்கள்

[தொகு]

ஜெம்பரானா பிராந்தியம் 5 மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக
குறியீடு
மாவட்டம்
(Kecamatan)
பரப்பு
கிமீ 2
மக்கள்
தொகை
2010
மக்கள்
தொகை
2020
மக்கள்
தொகை
2022
கிராமம்அஞ்சல்
குறியீடு
51.01.04மெலாயா (a)197.1950,38161,49463,6701082252
51.01.01நெகாரா126.5077,81295,53999,2901282218 (d)
51.01.05ஜெம்பரானா (மாவட்டம்)93.9751,63461,81263,7601082218
51.01.02மென்டோயோ294.4956,22267,53669,7101182261
51.01.03பெக்குத்தான்129.6525,58330,48331,420882262
மொத்தம்841.80261,638317,0643,27,85051

காலநிலை

[தொகு]

காராங்கசெம் பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஆண்டு முழுவதும் மிதமான மழைப்பொழிவு முதல் கனமழை வரை இருக்கும்.

காட்சியகம்

[தொகு]
  • ஜெம்பரானா பிராந்திய காட்சிப் படங்கள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Badan Pusat Statistik, Jakarta, 2023, Kabupaten Karangasem Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.5107)
  2. "Visualisasi Data Kependudukan Kementerian Dalam Negeri - Dukcapil 2024". gis.dukcapil.kemendagri.go.id. Archived from the original (Visual) on 5 ஜூலை 2022. Retrieved 22 August 2024. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Indeks Pembangunan Manusia (Umur Harapan Hidup Hasil Long Form SP2020), 2023-2024". www.bps.go.id. Badan Pusat Statistik. Retrieved 17 November 2024.
  4. 1 2 3 "It comprises of two main regions: a large mountainous area in the north, which is part of The West Bali National Park and the coastal area in the south". www.thinkbali.com. Retrieved 11 March 2025.
  5. 1 2 properties, balicasa. "Jembrana's economy was primarily agrarian, with rice cultivation being one of the main activities. However, like many other areas in Bali, tourism has also become an essential part of the local economy". Balicasa Properties (in english). Retrieved 11 March 2025.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "West Bali National Park. Sanctuary of the Exotic White Bali Starling". indonesia.travel. Retrieved 2024-05-24.
  7. "West Bali National Park". westbali.net. Retrieved 2024-05-24.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெம்பரானா_பிராந்தியம்&oldid=4591345" இலிருந்து மீள்விக்கப்பட்டது