ஜெமினி (மொழி மாதிரி)
ஜெமினி (Gemini) என்பது கூகிள் டீப் மைண்ட் உருவாக்கிய பன்முக பெரிய மொழி மாதிரிகளின் குடும்பமாகும், இது லாஎம்டிஏ மற்றும் பிஏஎல்எம் 2 இன் தொடர்ச்சியாகச் செயல்படுகிறது. ஜெமினி அல்ட்ரா, ஜெமினி புரோ, ஜெமினிப் ஃப்ளாஷ், ஜெமினி நானோ ஆகியவற்றைக் கொண்ட இது, ஓபின்ஏஐ ஜிபிடி-4 க்கு போட்டியாளராக நிலைநிறுத்தப்பட்டு, திசம்பர் 6,2023- இல் அறிவிக்கப்பட்டது. அதே பெயரில் சாட்பாட்டினை இயக்குகிறது.
வரலாறு
[தொகு]வளர்ச்சி
[தொகு]மே 10, 2023 அன்று கூகுள் ஐ/ஓ மேம்பாட்டாளர் மாநாட்டின் முக்கிய உரையின் போது துணை நிறுவனமான கூகுள் டீப் மைண்டால் உருவாக்கப்பட்ட ஜெமினி என்ற பெரிய மொழி மாதிரியை (LLM) கூகுள் அறிவித்தது. இது PalM 2 இன் வெற்றிகரமான தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஜெமினி இன்னும் அதன் ஆரம்ப வளர்ச்சி நிலையில் இருப்பதாகக் கூறினார்.[1][2] மற்ற எல்எல்எம்களைப் போலல்லாமல், ஜெமினி தனித்தன்மை வாய்ந்ததாகக் கூறப்பட்டது, அது ஒரு உரைத் தரவகமாக மட்டும் பயிற்சியளிக்கப்படாது பல காரணிக் கற்றலாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது உரை, படங்கள், ஒலி, நிகழ்படம் மற்றும் கணினிக் குறியீடு உட்பட பல வகையான தரவுகளை ஒரே நேரத்தில் செயலாக்க முடியும்.[3] இது டீப்மைண்ட் மற்றும் கூகுள்பிரைன் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பாக உருவாக்கப்பட்டது.
வெளியீடு
[தொகு]திசம்பர் 6,2023-இல், பிச்சை மற்றும் ஹசபீஸ் ஒரு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் "ஜெமினி 1" ஐ அறிவித்தனர்.[4][5] இது மூன்று மாதிரிகளைக் கொண்டிருந்தது. ஜெமினி அல்ட்ரா, "மிகவும் சிக்கலான பணிகளுக்காக" வடிவமைக்கப்பட்டுள்ளது, ஜெமினி புரோ, "பரந்த அளவிலான பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது", ஜெமினி நானோ, "ஆன்-டிவைஸ் பணிகளுக்காக" வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிமுகத்தின் போது, ஜெமினி ப்ரோ மற்றும் நானோ முறையே பார்ட் மற்றும் பிக்சல் 8 ப்ரோ திறன்பேசிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.கூகுள் தேடல், கூகுள் விளம்பரங்கள், குரோம், கூகுள் ஒர்க் ஸ்பேஸ், ஆல்பா கோட் 2 ஆகிய பிற கூகுள் திட்டத்துடன் ஒருங்கிணைத்தது.[6][5] இது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்தது.[5][7] கூகிளின் "மிகப்பெரிய மற்றும் மிகவும் திறமையான AI மாதிரி" என்று அழைக்கப்படும் மற்றும் மனித நடத்தையைப் பின்பற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.[8][5] கூகுள் நிறுவனம் "விரிவான பாதுகாப்பு சோதனை" தேவைப்படுவதால் அடுத்த ஆண்டு வரை ஜெமினி பரவலாக கிடைக்காது என்று கூறியது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Grant, Nico (May 10, 2023). "Google Builds on Tech's Latest Craze With Its Own A.I. Products". The New York Times இம் மூலத்தில் இருந்து May 10, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230510180605/https://www.nytimes.com/2023/05/10/technology/google-ai-products.html.
- ↑ Ortiz, Sabrina (May 10, 2023). "Every major AI feature announced at Google I/O 2023". ZDNet. Archived from the original on May 10, 2023. Retrieved August 21, 2023.
- ↑ Milmo, Dan (December 6, 2023). "Google says new AI model Gemini outperforms ChatGPT in most tests". The Guardian இம் மூலத்தில் இருந்து December 6, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231206162533/https://www.theguardian.com/technology/2023/dec/06/google-new-ai-model-gemini-bard-upgrade.
- ↑ 4.0 4.1 Kruppa, Miles (December 6, 2023). "Google Announces AI System Gemini After Turmoil at Rival OpenAI". The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து December 6, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231206152820/https://www.wsj.com/tech/ai/google-announces-ai-system-gemini-after-turmoil-at-rival-openai-10835335.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Liedtike, Michael; O'Brien, Matt (December 6, 2023). "Google launches Gemini, upping the stakes in the global AI race". Associated Press இம் மூலத்தில் இருந்து December 6, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231206181414/https://apnews.com/article/google-gemini-artificial-intelligence-launch-95d05d02051e75e20b574614ae720b8b.
- ↑ Edwards, Benj (December 6, 2023). "Google launches Gemini—a powerful AI model it says can surpass GPT-4". Ars Technica. Archived from the original on December 6, 2023. Retrieved December 6, 2023.
- ↑ Pierce, David (December 6, 2023). "Google launches Gemini, the AI model it hopes will take down GPT-4". The Verge. Archived from the original on December 6, 2023. Retrieved December 6, 2023.
- ↑ Fung, Brian; Thorbecke, Catherine (December 6, 2023). "Google launches Gemini, its most-advanced AI model yet, as it races to compete with ChatGPT". CNN Business. Archived from the original on December 6, 2023. Retrieved December 6, 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Press release via The Keyword
- White paper for 1.0 and 1.5