ஜெமினி நட்சத்திரக் கூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெமினி நட்சத்திரக் கூட்டம்

விண்வெளியின் வடக்குப்பகுதியில் காணப்படும் நட்சத்திரக் கூட்டம் ஒன்றின் பெயர் ஜெமினி நட்சத்திரக் கூட்டம் ஆகும். விண்வெளியில் உள்ள ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் குறித்து இரண்டாம் நூற்றாண்டில் விண்வெளி ஆய்வாளர் டாலமி ஆய்வு செய்து அறிவித்தார். அவர் 48 நட்சத்திர மண்டலங்கள் குறித்த தகவல்களை கண்டுபிடித்து வெளியிட்டார். அதில் குறிப்பிடத்தக்கது தான் ஜெமினி நட்சத்திரக் கூட்டம். இதில் 85 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் அதிக பிரகாசம் கொண்டது போலக்ஸ் நட்சத்திரம், அதற்கு அடுத்த பிரகாசம் கொண்டது காஸ்டர் நட்சத்திரம் ஆகும். இரவு நேரத்தில் வானத்தில் இந்த நட்சத்திரக்கூட்டத்தை தொலைநோக்கியின்றி சாதாரணமாக காணலாம்.[1]

மேற்காேள்கள்[தொகு]

  1. தினத்தந்தி செய்தித்தாள் 12.05.2017