ஜெப் பெசோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெப் பெசோஸ்
2018 சனவரியில் பெசோஸ்
பிறப்புஜெஃப்பெரி ப்ரெஸ்டன் ஜோர்ஜென்சென்
சனவரி 12, 1964 (1964-01-12) (அகவை 59)
ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ), ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்மெதைனா, வாசிங்டன், அமெரிக்கா[1]
கல்விபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்)
பணி
  • தொழில் நுட்பம்
  • தொழிலதிபர்
  • முதலீட்டாளர்
  • கொடையாளர்
அறியப்படுவதுஅமேசான் மற்றும் ப்ளு ஒருஜின் நிறுவனங்களைத் தொடங்கியது
சொத்து மதிப்புUS$137 பில்லியன் (சனவரி 2019)[2]
பட்டம்பங்குதாரர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அமேசான் தலைவர்
வாழ்க்கைத்
துணை
மேக்கென்சி டட்டில் (தி. 1993)
பிள்ளைகள்4

ஜெப் பெசோஸ் (Jeff Bezos 12 சனவரி 1964) என்பவர் அமெரிக்க பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார்.[3] இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.தற்போதைய கணக்குப்படி இவர் தான்உலகிலேயே பெரும்பணக்காரர் ஆவார். இவர் அமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் இந்தக் குழுமத்தில் 71 விழுக்காடு பங்குகளை ஜெப் பெஸோஸ் கொண்டிருக்கிறார்.

அமேசான் டாட் காம்

1994 இல் நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நூல்களை இணைய வழி விற்கும் தொழிலில் இறங்கினார். அமேசான் டாட் காம் என்னும் இவர் தொடங்கிய குழுமம் இணைய அங்காடியாகச் செயல்படுகிறது. மின்னணுப் பொருள்கள் பயன்பாட்டுப் பொருள்கள் அனைத்தையும் சில்லறை வணிக முறையில் இக்குழுமம் விற்கிறது.

மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்கப் பெரும் முதலீட்டாளர் வாரன் பபெட் ஆகிய தொழிலதிபர்களுக்கு அடுத்தபடியாக வைத்து மதிக்கப்படுகிறார்.[3] கொடைகள் வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.

பிற தொழில்கள்

இணைய வழி சில்லறை வணிகம் அல்லாமல் வான்வெளி, செய்தித்தாள் ஆகிய துறைகளிலும் இவர் ஈடுபடுகிறார். வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாள் நிறுவனத்தை 2013 இல் விலைக்கு வாங்கினார். புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். புளூ ஆரிஜின் குழுமம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திலும் சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது.[4]

ஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்திலும் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர். 1998 இல் 250000 அமெரிக்க டாலர்களை முதலீடூ செய்தார். [5]

கொடைகள் அளித்தல்

  • ஜெப் பெஸோஸ் தம் மனைவியுடன் இணைந்து ஒரு பாலினர் திருமணத்தை ஆதரித்து 2.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கினார்.[6]
  • கல்வி வளர்ச்சிக்காகக் குடும்ப அறக்கட்டளை தொடங்கினார். இந்த அறக்கட்டளை பிரெட் ஹட்சின்சன் புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு 2009 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களும், 2010 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டாலர்களும் வழங்கியது.
  • சியாட்டிலில் உள்ள வரலாறு மற்றும் தொழில்கள் அருங்காட்சியகத்திற்கு 10 மில்லியன் டாலர்கள் கொடை அளித்தார்.

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்_பெசோஸ்&oldid=3815405" இருந்து மீள்விக்கப்பட்டது