ஜென் தத்துவக் கதைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜென் தத்துவக் கதைகள்
நூல் பெயர்:ஜென் தத்துவக் கதைகள்
ஆசிரியர்(கள்):குருஜி வாசுதேவ்
வகை:தத்துவ இலக்கியம்
துறை:தத்துவம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:208
பதிப்பகர்:சிக்ஸ்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
10/2(8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை,
சென்னை 600 017
பதிப்பு:2003-2011
ஆக்க அனுமதி:குருஜி வாசுதேவ்,
சென்னை

ஜென் தத்துவக் கதைகள்உலகின் தத்துவ ஆராய்ச்சியாளர்கள், ஆன்மிகவியலாளர்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஓர் அற்புதமான, ஒரு மகத்தான பிரிவு. கிறித்தவம், இசுலாமியம், சீக்கியம், பௌத்தம், இந்து மதம் என்பதைப் போன்று ஒரு தனி மதப் பிரிவு அல்ல ஜென். எந்த விதமான சடங்குகளையோ, மந்திரங்களையோ கூறுவதுமல்ல. இது தான் கடவுள் என்றோ, கடவுளை இப்படித்தான் வணங்கவேண்டும் என்றோ, இவ்விதமான நடைமுறைகளைப் பின்பற்றி அதன்படிதான் கடவுளை அடையவேண்டும் என்றோ குறிப்பிடுவதுமல்ல. [1]

ஜென் தத்துவம்[தொகு]

சப்பானிலும், சீனாவிலும் ஜென் துறவிகள் அதிகம் இருந்திருக்கிறார்கள். இந்நாடுகளில் பௌத்தம், தாவோயிசம், கன்பூசியசிசம் என மூன்று மதங்கள் இருக்கின்றன. ஒருவன் தன்னைத்தானே கண்காணிப்பதும், தவறுகளிலிருந்து திருத்திக்கொள்வதும் சுலபமான காரியமல்ல. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என வலியுறுத்துவது தான் ஜென் தத்துவம்[2] ஜென் தத்துவங்களை சின்னச் சின்ன கதைகளாக புதிய சாதனையாளருக்கு ( ஞானப் பயிற்சியிலிருப்பவருக்கு) ஜென் தத்துவக் கதைகள் ஒரு நல்ல வழிகாட்டி. இந்த புத்தகத்தில் 77 தலைப்புகளில் தத்துவங்கள் கதைவடிவில் சொல்லப்பட்டிருக்கிறது.

உள்ளடக்கத் தலைப்புகள்[தொகு]

 1. சொர்க்கம்-நரகம்
 2. தூய்மையான தங்கக் காற்று
 3. காலம் ஒடும்
 4. அநித்தியம்
 5. எதுவும் சமமே
 6. அவா அறுத்தல்
 7. ஒலியற்ற ஓசை
 8. மானுட நேயம்
 9. எதை விடுவது
 10. இயல்பாக இரு
 11. தேடுதல்
 12. இரவல் அறிவு
 13. மறைபொருளின் தத்துவம்
 14. நாளை என்பது
 15. இன்றும் இன்னே செய்க
 16. குழப்பம்
 17. அதிர்ச்சி
 18. பணிதல்
 19. விலகி நில்
 20. சகிப்பு
 21. அதுவா? இதுவா?
 22. தடை
 23. கீழே போடு
 24. அவரவர்க்கு அவரவரே!
 25. நீயும் அதுவே
 26. சமநிலை
 27. எது உண்மை
 28. பெருமை
 29. வெறுமனே
 30. சிறைச்சாலை
 31. எது முக்கியம்?
 32. ஜென் தத்துவம்
 33. உடன் பிறப்புணர்ச்சி
 34. அவசியம் இல்லை
 35. சொல்லாதே
 36. சபலம்
 37. நெருப்பு
 38. நடுவில்
 39. விழித்திரு
 40. வைர சூத்திரம்
 41. பலி
 42. பேராசை
 43. அது
 44. உலகே மாயம்
 45. சூனியம்
 46. எனது
 47. பிக்ஷூணி
 48. அவமானம்
 49. உண்மை
 50. புத்தகம்
 51. அன்பு
 52. நோயாளி
 53. வாழ்வின் உண்மை
 54. சிக்கல்
 55. ஒளி
 56. பிறந்த நாள்
 57. குரு
 58. செய்கை
 59. பிறன் பொருள்
 60. என்னுடையது
 61. காணிக்கை
 62. நடுநிலை நெறி
 63. பதில்
 64. பாதை
 65. அச்சம்
 66. ஞான ஒளி
 67. எதையும் தேடாதே
 68. சீடன்
 69. ஜென் கவிதை
 70. நீதிக் கதை
 71. உன்னை அறிவாய்
 72. மரணம்
 73. எது சொர்க்கம்
 74. காலம்
 75. சிறைச்சாலை
 76. பாதையற்ற பாதையில்
 77. வெற்றிடம்

சான்றாவணம்[தொகு]

 1. ஜென் தத்துவக் கதைகள்- குருஜி வாசுதேவ்- சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்-சென்னை-முதற்பதிப்பு-2003-புதிய பதிப்பு-2011
 2. ஜென் தத்துவக் கதைகள்- குருஜி வாசுதேவ்- சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்-சென்னை-முதற்பதிப்பு-2003-புதிய பதிப்பு-2011