ஜென் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜென் குப்தா
Jen Gupta
பிறப்புஜெனிபெர் ஆன் குப்தா
படித்த கல்வி நிறுவனங்கள்மான்செசுட்டர் பல்கலைக்கழகம்
அமைப்பு(கள்)போர்ட்சுமவுத் பல்கலைக்கழகம்
அறியப்படுவது
 • விண்வெளித் தொடர்பியல்
 • முனைவுறு பால்வெளிக் கரு
வலைத்தளம்
jengupta.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

ஜென் எனப்பட்ட ஜெனிபெர் ஆன் குப்தா (Jennifer Ann Gupta) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் போர்ட்சுமவுத் பல்கலைக்கழக அறிவியல் பரப்புரையாளரும் ஆவார். இவர் நாளைய உலகம் எனும் பிரித்தானிய ஒலிபரப்பு நிகழ்ச்சியில் தோன்றி உரை ஆற்றியுள்ளார்.

கல்வி[தொகு]

குப்தா வின்செசுட்டரில் பிறந்து வளர்ந்தார். இவர் தன் முதனிலைக் கல்வியை பீட்டர்சு சைமாண்டு ஆறாம் படிவக் கல்லூரியில் முடித்தார்.[1] இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் முதுவர் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழக்த்தின் ஜோடுரெல் பாங்க் வானியற்பியல் நோக்கீட்டகத்தில் முனைவர் பட்டம் 2012 இல் பெற்றுள்ளார் Jodrell Bank Centre for Astrophysics]].[2] இவரது முனைவர் பட்ட ஆய்வுரை "பெர்மி காலகட்ட செறிகதிர் முனைவுறு பால்வெளிக் கரு சார்ந்த பல் அளைநீள ஆய்வு (Multiwavelength Studies of Radio-loud Active Galactic Nuclei in the Fermi Era)" என்பதாகும்.[3]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் தன் முனைவர் பட்ட ஆய்வின்போதே அறிவியலில் பரப்புரைப் பணியைத் தொடங்கிவிட்டார். இவர் நகைச்சுவை சார்ந்த இணைய ஒலிபரப்பில் பெரும்பணி ஆற்றியுள்ளார்.[4] இவர் மான்செசுட்டர் பிரைட் குழுவரங்கில் வானியல் சார்ந்த ஊக்கமூட்டும் பல் நகைச்சுவைக் காட்சிகளை நடித்துக் காட்டியுள்ளார்.[5] இதேபோல இலண்டன் புளூம்சுபரி அரங்கிலும் நகைச்சுவைக் காட்சிகளை நடித்துக் காட்டியுள்ளார்.[6] அந்த ஆண்டே இவர் ஒரே நாளில் ஏழு மெர்லின் தொலைநோக்கிகளைக் காண சாலைப்பயணம் மேற்கொண்டு முடித்துள்ளார்.[7] இவர் பிரித்தானிய இயற்பியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்துள்ளார்.[8][9] இவர் பிரித்தானிய ஒலிபரப்புக் குழுமத்தின் நாளைய உலகம் நிகழ்ச்சியின் பலபகுதிகளுக்கு இணைவிருந்தோம்புநராக இருந்துள்ளார்.[10][11]

இவர் 2016 இல் அரசு வானியல் கழகத்தின் வானியலில் மகளிர் விழா ஓவியத் தொடர்களில் தோன்றியுள்ளார்.[12] அதே ஆண்டில் இவர் அழைப்பின்பேரில் அரசு நிறுவனத்தில் " கண்ணுக்குப் புலப்படாத இரவு வானம் (The invisible night sky)" எனும் தலைப்பில் அரியதொரு உரையாற்றியுள்ளார்.[13] இவர் தென்கிழக்கு இங்கிலாந்தில் வானியல் கழகங்களின் சார்பில் பல உரைகள் ஆற்றியுள்ளார்.[14][15][16] இவர் 2015 இல் வரலாற்றுப் புகழ்வாய்ந்த போர்ட்சுமவுத் துறைமுகத்தில் நேரடி விண்மீன்காணல் திட்டத்துக்கு ஏற்பாடு செய்து ஓம்புநராக இருந்தார்.[17]

இவர் பொதுமக்களுக்கான வானியல் உரைகள் மட்டுமன்றி, அறிவியல் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.[18] அதே ஆண்டில் இவர் துல்லியமற்ற அறிவியல் கோட்பாடுகளால் முறையாக விவாதம் நடத்திய பாஃபெசுட்டு விழாவையும் விருந்தோம்பினார்.[19][20] இவர் செல்டம் சீரியுசு ( Seldom Sirius) எனும் வானியல் இணைய ஒலிபரப்பு நிகழ்ச்சியின் நிறுவனரும் இணையோம்புநரும் ஆவார்.[21]

இவர் 2011 இல் நான் ஓர் அறிவியலாளர் ஆவேன். இங்கிருந்து எனை வெளியேற்றுங்கள்! என்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்றார்.[22] இவர் 2012 இல் போர்ட்சுமவுத் பல்கலைக்கழகத்தின் அண்டவியல், ஈர்ப்பு நிறுவனத்தில் சேர்ந்தார். இங்கு பரப்புரைக்கும் மக்கள் தொடர்புக்கும் மதிப்பீட்டுக்கும் இவர் பொறுப்பாளர் ஆவார்.[23] இவர் ஒவ்வோராண்டும் 10,000 பள்ளி மாணவர்களுடனும் பொது உறுப்பினர்களுடன் பணிசெய்கிறார்.[24]

மேற்கோள்கள்[தொகு]

 1. "About Me" (in en-US). Dr Jen Gupta. 2014-08-29. https://jengupta.com/about-me/. 
 2. "Outreach Officers - SEPnet" (in en-GB). SEPnet. http://www.sepnet.ac.uk/about-sepnet/outreach-officers/. 
 3. Ann, Gupta, Jennifer (2012-09-17). "Multiwavelength Studies of Radio-loud Active Galactic Nuclei in the Fermi Era" (in en). https://www.escholar.manchester.ac.uk/jrul/item/?pid=uk-ac-man-scw:170139. 
 4. "Jodcast archive" (in en-GB). http://www.jodcast.net/archive/. 
 5. "Bright Club Manchester 4 - Family" (in en-GB). https://www.manchesterbeacon.org/events/view/171/Bright-Club-Manchester-4---Family. 
 6. Jennifer Gupta (2011-11-22), Bright Club Stars: Jen Gupta, retrieved 2018-02-13
 7. jodcast (2011-11-10), The e-MERLIN Roadtrip, retrieved 2018-02-13
 8. "Physics in Action - The Training Partnership" (in en-US). The Training Partnership. http://www.thetrainingpartnership.org.uk/study-day/physics-in-action-16/. 
 9. "Ogden Science Officers" (in en). http://www.ogdentrust.com/university-outreach/science-officers/994-dr-jen-gupta. 
 10. "Tomorrow's World: Me and My Robot" (in en-GB). https://www.bbc.co.uk/events/e54wxj/live/cghp5v. 
 11. "Tomorrow's World Live - Move to Mars" (in en-GB). http://www.bbc.co.uk/programmes/p05dmgmj. 
 12. "Portsmouth astrophysicist features in leading women portraits | UoP News" (in en-US). http://uopnews.port.ac.uk/2016/02/02/portsmouth-astrophysicist-features-in-leading-women-portraits/. 
 13. "The invisible night sky" (in en) இம் மூலத்தில் இருந்து 2019-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190414000600/https://www.rigb.org/whats-on/events-2016/april/public-the-invisible-night-sky. 
 14. "Andover Astronomical Society". http://www.andoverastronomy.org.uk/. 
 15. "Events" (in en-US). Dr Jen Gupta. 2014-10-02. https://jengupta.com/public-talks-and-events/events/. 
 16. "Dr Jennifer Gupta: Radio Astronomy, Quasars and Black Holes" (in en-US). Isle of Wight Cafe Scientifique. 2015-09-24. https://cafescientifique.onthewight.com/dr-jennifer-gupta-radio-astronomy-quasars-and-black-holes/. 
 17. "Stargazing Live 2015 at Portsmouth Historic Dockyard" (in en-GB). https://www.eventbrite.co.uk/e/stargazing-live-2015-at-portsmouth-historic-dockyard-tickets-15895293250?aff=jg#. 
 18. "An Evening Of Unnecessary Detail at Backyard Comedy Club" (in en). https://www.tickettext.co.uk/aeoud/an-evening-of-unnecessary-detail-29032016/. 
 19. "BAHFest London" (in en-GB). https://www.eventbrite.co.uk/e/bahfest-london-tickets-20068251681#. 
 20. BAHFest (2016-05-17), BAHFest London - Big Science - Jen Gupta: Fixing the World, retrieved 2018-02-13
 21. "Seldom Sirius Podcast". http://seldomsirius.net/. 
 22. "What Jennifer Gupta did with her prize money… - About I'm a Scientist, Get me out of here" (in en-US). About I'm a Scientist, Get me out of here. 2017-01-25. https://about.imascientist.org.uk/2017/what-jennifer-gupta-did-with-her-prize-money/. 
 23. "Jen Gupta" (in en-US). http://www.icg.port.ac.uk/author/guptaj/. 
 24. "Introducing Jen Gupta" (in en-US). astrotweeps. 2016-07-04. https://astrotweeps.wordpress.com/2016/07/04/introducing-jen-gupta/. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜென் குப்தா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்_குப்தா&oldid=3676322" இருந்து மீள்விக்கப்பட்டது