ஜென்மி
ஜென்மி (Jenmi) என்பது கேரளாவின் நிலப்பிரபுத்துவத்தைக் கொண்டிருந்தவர்களைக் குறிக்கப் பயன்படும் ஒரு சொல்லாகும். [1] கடந்த காலத்தில், கேரளாவில் பெரும்பான்மையான நிலங்களை ஜென்மிகள் வைத்திருந்தனர். பெரும்பாலான நில உரிமையாளர்கள் நம்பூதிரி, நாயர் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஒரு பிரபுத்துவ குடும்பம் 20,000 ஏக்கர் (81 கிமீ 2) வரை நிலத்தை வைத்திருப்பது வழக்கத்திற்கு மாறானதல்ல. கொச்சி, திருவிதாங்கூரின் மகாராஜாக்கள், திருவிதாங்கூரில் உள்ள பூஞ்சார் பேரரசு போன்ற பல ராஜாக்கள் நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தனர். [2] திருவிதாங்கூர் மகாராஜாவின் கட்டுப்பாட்டில் இருந்த திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் பத்மநாபசாமி கோயில், தச்சுடைய கைமாள்களின் கட்டுப்பாட்டிலிருந்த கூடல்மாணிக்கம் கோயில், கோழிக்கோடு நாட்டின் ராஜாக்களின் கட்டுப்பாட்டிலிருந்த குருவாயூர் கோயில் போன்ற பல இடங்கள் ஜென்மிகள் தங்கள் சொந்த உரிமையில் வைத்திருந்தனர்.
இன்றும் கூட கேரளாவில் நிலங்கள் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளன. [3] [4] பின்னர், நிலங்களை கையகப்படுத்திய பிறகு நில உரிமையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவ்வப்போது அரசாங்கம் இதை வழங்க மறுத்துவிட்டது. [5]
மலபாரில் 200,000 ஏக்கர் (810 கி.மீ 2) வன நிலங்கள் உட்பட மிகப்பெரிய நிலம் வைத்திருந்த உரிமையாளர்களில் வேங்கயில் நாயனரும் அடங்குவார். சிறக்கல் ராஜா சுமார் 30,000 ஏக்கர் (120 கி.மீ 2) வைத்திருந்தார். காவலப்பாற மூப்பில் நாயர் (155,358 ஏக்கர்), குறுமத்தூர் நம்பூதிரிப்பாடு (5,615 ஏக்கர்), கல்லியத்து நம்பியார் (36,779 ஏக்கர்) வைத்திருந்தனர். [6]
ஜென்மிகளுக்கு எதிராக வன்முறை
[தொகு]நில உரிமையாளர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. கேரளாவில் பொதுவுடமை இருப்பதால் சிலர் பாதிக்கப்பட்டனர்.
கையூர் சம்பவம்
[தொகு]கையூர் என்பது, வடக்கு மலபாரிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். 1940 ஆம் ஆண்டில், இந்தியாவில் விவசாயிகள், நிலபிரபுத்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக அணி திரளத் தொடங்கினர். கையூர் கிராமத்தில் விவசாயிகள் சங்கம் அமைந்தது. பொதுவுடமைவாதிகளின் தலைமையில் அங்குள்ள விவசாயிகள் இரண்டு உள்ளூர் நில உரிமையாளர்களுக்கு எதிராக எழுந்தனர். பலர் கொல்லப்பட்டனர். மேலும், நான்கு பொதுவுடமைத் தலைவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்: சிறுகண்டன், அப்பு, அபுபக்கர், குஞ்ஞம்பு ஆகியோர் 1943 மார்ச் மாதம் 29 அன்று கண்ணணூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சி. கே. நம்பியார் சிறுவனாக இருந்த காரணத்தால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
மட்டனூர் சம்பவம்
[தொகு]1852 ஆம் ஆண்டில் மாப்பிள்ளமார் குத்தகைதாரர்களுக்கும் அவர்களது நாயர் நில உரிமையாளர்களுக்கும் இடையில் ஒரு கலவரத்தை மட்டனூர் கண்டது. 200 மாப்பிளமார்கள் கொண்ட ஒரு ஆயுதக்குழு உள்ளூர் நில உரிமையாளரான களத்தில் கேசவன் தாங்கல் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து 18 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குடும்பத்தை படுகொலை செய்தபோது கலவரம் தொடங்கியது. பின்னர் கலவரக்காரர்கள் மாவட்டத்தின் மிக சக்திவாய்ந்த நில உரிமையாளரான கல்லியத்து ஆனந்தன் நம்பியாரை அகற்ற சதி செய்தனர். அவர்களின் திட்டங்கள் தெரிந்து, நம்பியாரும் அவரது குடும்பத்தினரும் மாவட்டத்தை விட்டு வெளியேறினர். அவரது மருமகன் கல்லியத்து கம்மாரன் நம்பியாரிடம் நிலத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். கம்மாரன் நம்பியார் 300 நாயர் போர்வீரர்களைக் கொண்ட ஒரு போராளியை ஏற்பாடு செய்து கலவரக்காரர்களுக்காக காத்திருந்தார். கலவரக்காரர்கள் கொலை செய்யப்பட்டனர். மேலும் குத்தகைதாரர்கள் தங்கள் பிரச்சாரத்தை கைவிட்டு கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [7]
கோரம் சம்பவம்
[தொகு]1948 ல் மற்றொரு போராட்டம் பையனூரின் கோரம் என்ற கிராமத்தில் ஏற்பட்டது . பையனூர் பகுதி விவசாயிகள் ஆலாக்காடு, மாவிலா குஞ்ஞம்பு நம்பியார் என்ற நில உரிமையாளரின் அரிசி கிடங்குகளைக் கைப்பற்றி விநியோகித்தனர். மலபார் சிறப்புப் படை அவர்களது தலைவர் கே.பி. குஞ்ஞிகன்னன் உட்பட குற்றவாளிகளை கைது செய்யத் தொடங்கியது. இதை எதிர்த்து 1948 ஏப்ரல் 12 அன்று தன்னார்வலர்கள் அவர்கள் அடைத்து வைக்கப்படிருந்த இடத்திற்கு மக்கள் அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் விளைவாக பொக்கன் என்ற இளைஞர் உயிரிழந்தார். 1948 இயக்கத்தின் போது பையனூர் பகுதியின் முதல் தியாகியாக பொக்கன் இருந்தார். [சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ https://indiankanoon.org/search/?formInput=jenmom
- ↑ See Further Notes on Poonjar Cheiftains Article accessed at http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/72849/14/14_appendix%201.pdf
- ↑ Agrarian change and economic consequences: land tenures in Kerala, 1850-1960 By T. C. Varghese
- ↑ India: social structure By Mysore Narasimhachar Srinivas p.15
- ↑ http://timesofindia.indiatimes.com/city/kochi/Kerala-high-court-asks-govt-to-pay-pension-to-jenmis/articleshow/20824047.cms
- ↑ Karat, Prakash (March 1977). "Organised Struggles of Malabar Peasantry 1934-1940". Social Scientist 5 (56). http://dsal.uchicago.edu/books/socialscientist/pager.html?objectid=HN681.S597_56_007.gif.
- ↑ Kerala (India); C. K. Kareem (1976). Kerala District Gazetteers: Palghat. printed by the Superintendent of Govt. Presses.