ஜெனிபெர் வைசுமன்

ஜெனிபெர் ஜே. வைசுமன் (Jennifer J. Wiseman) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் இயற்பியல் இளவல் பட்டத்தை மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். இவர் தன்முனைவர் பட்டத்தை வானியலில் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து 1995 இல் பெற்றார். இவர் 1987 இல் பட்டப்படிப்பு படிக்கும்போதே114P/வைசுமந் சுகிப் எனும் அலைதகவு வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார். இவர் இப்போது நாசாவின் கோடார்டுவிண்வெளி பரப்பு மைய முதுநிலை வானியற்பியலாளராக உள்ளார். இங்கே இவர் முன்பு புறைக்கோள், உடுக்கண வானியற்பியல் ஆய்வகத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
இவர் அமெரிக்க அரிவியல் இணைவின் ஆய்வுறுப்பினரான கிறித்தவர் ஆவார்.[1] இவர் 2010 ஜூன் 16 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் அறிவியல், அறவியல், சமய உரையாடல் பிரிவுக்குப் புதிய இயக்குநராக அறிமுகப்படுத்தப்பட்டார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jennifer J. Wiseman, "How You Can Help Young Christians in Science," Perspectives on Science and Christian Faith 51.1 2 - 5 (3/1999)
- ↑ AAAS, "Re-Envisioning the Science and Religion Dialogue"