ஜெனிபர் டவுன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெனிபர் டவுன்னா
Professor Jennifer Doudna ForMemRS.jpg
ஜெனிபர் அன்னே டவுன்னா, இலண்டன் அரச கழகத்தில் இணைந்தபொழுது, 2016
பிறப்புஜெனிபர் அன்னே டவுன்னா
பெப்ரவரி 19, 1964 (1964-02-19) (அகவை 55)
தேசியம்அமெரிக்க ஐக்கிய நாடு
துறைஉயிர்வேதியியல்[1]
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
யேல் பல்கலைக்கழகம்
கிளாட்ஸ்டன் பல்கலைக் கழகம்
கலிபோர்னியாப் பல்கலைக் கழகம், சான்பிரான்சிஸ்கோ
கல்வி கற்ற இடங்கள்
  • பொமோனா கல்லூரி (இளங்கலை)
  • ஆர்வர்டு பல்கலைக்கழகம் (பிஎச்டி)
  • கொலராடோ பல்கலைக்கழகம் (முதுகலை)
ஆய்வேடு (1989)
ஆய்வு நெறியாளர்ஜாக் சோஸ்டாக்
Other academic advisorsதாமஸ் செச்
அறியப்படுவது
பின்பற்றுவோர்ரச்சேல் ஹாரிட்ஸ்
விருதுகள்
  • ஆலன் டி. வாட்ட்டர்மேன் பரிசு (2000)
  • ஜாக்கோப் ஹெஸ்கல் கப்பே விருது (2014)
  • வாழ்க்கை அறிவியலுக்கான பிரேக்த்ரூ விருது (2015)
  • ஜப்பான் பரிசு (2017)
  • நானோ அறிவியலுக்கான காவ்லி விருது (2018)
துணைவர்ஜமி கேட்
இணையதளம்

ஜெனிபர் அன்னே டவுன்னா (Jennifer Anne Doudna, பிறப்பு; பிப்ரவரி 19, 1964)[2] ஓர் அமெரிக்க உயிர்வேதியியலளாளர் ஆவார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் வேதியல் துறை, மூலக்கூறு மற்றும் உயிரணு உயிரியல் துறை பேராசிரியராகவும் உள்ளார்.[3] டவுன்னா, 1997 வரை ஹோவர்ட் ஹக்ஸ் மருத்துவ நிறுவனத்தின் விசாரணை அதிகாரியாக இருந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே கிளாட்ஸ்டோன் நிறுவனத்தில் முதுநிலை விசாரணை அதிகாரியாகவும் தொடர்ந்து பணிபுரிந்துகொண்டிருக்கிறார்.[4][5][6][1][7]

டவுன்னா, மரபணு தொகுப்பாக்கத்தில் நுண்ணியிரிகள் பற்றிய இவருடைய அடிப்படை பணிகளுக்காகவும், தலைமைத்துவத்திற்காகவும் கிறிஸ்பர் (Crispr)-புரட்சியின் முன்னோடியாக அறியப்படுகிறார்.[8] 2012 ஆம் ஆண்டில் டவுன்னா மற்றும் இம்மானுவெல் சார்ப்பெண்டியர் ஆகிய இருவரும், கிறிஸ்பர் |காஸ்9 பாக்டீரியாவின் நொதிகள் நுண்ணுயிரிகளின் நோயெதிர்ப்புத் திறனை கட்டுப்படுத்தும் எனவும் அதனைப் பல்வேறு வகைகளில் திட்டமிடப்பட்ட மரபணு தொகுப்பாக்கத்திற்குப் பயன்படுத்தலாம் என்றும் முன்மொழிந்தனர்.[8][9] இது உயிரியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது[10]

டவுன்னா, உயிர் வேதியல் துறையிலும், மரபணு துறையிலும் குறிப்பிடத்தகக் அடிப்படைப் பங்காற்றியமைக்காக பல்வேறு மதிப்பு மிக்க விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார். எக்சு-கதிர் படிகவியலால் தீர்மானிக்கபப்ட்ட ஒரு ரைபோசைமின் கட்டமைப்பு குறித்த ஆய்வுக்காக இவருக்கு 2000 ஆம் ஆண்டில் ஆலன் டி. வாட்டர்மேன் விருது வழங்கப்பட்டது.[11] சார்ப்பெண்டியருடன் இணைந்து ஐவர் செய்த கிறிஸ்பர்/காஸ்9 மரபணு தொகுப்பு நுட்ப ஆய்வுக்காக 2015 ஆம் ஆண்டு வாழ்க்கை அறிவியலுக்கான பிரேக்த்ரூ பரிசு வழங்கப்பட்டது.[12] மேலும் 2015 ஆம் ஆண்டு மரபணுவியலுக்கான குரூபர் பரிசு பெற்றார்.[13] 2016 ஆம் ஆண்டில் கனடாவின் கெய்டுனர் தேசியப் பரிசும்.[14] 2017 ஆம் ஆண்டில் ஜப்பான் பரிசும் பெற்றார்.[15] அறிவியல் சமூகத்திற்கு அப்பாற்பட்டு 2015 இன் மிகவும் புகழ்பெற்ற நூறு மனிதர்களுள் ஒருவராக (சார்பெண்டியருடன்) அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழில் இடம்பெற்றுள்ளார்[16] அதே இதழின் 2016 ஆண்டின்; டைம் பர்சன் ஆஃப் தி இயர் நபர்களுள் ‘ரன்னர் அப்’ என பிற கிறிஸ்பர் ஆய்வாளர்களுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.[17]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://scholar.google.com/citations?user=YO5XSXwAAAAJ
  2. "Jennifer Doudna – American biochemist". பார்த்த நாள் 13 November 2015.
  3. "Curriculum Vitae (Jennifer A. Doudna)". Lawrence Berkeley National Laboratory. பார்த்த நாள் 24 October 2017.
  4. "Jennifer Doudna Opens Laboratory at the Gladstone Institutes" (en) (5 September 2018).
  5. "Interview with Jennifer Doudna (recorded in 2004)". National Academy of Sciences. பார்த்த நாள் 8 November 2017.
  6. Marino, M. (2004). "Biography of Jennifer A. Doudna". Proceedings of the National Academy of Sciences 101 (49): 16987. doi:10.1073/pnas.0408147101. Bibcode: 2004PNAS..10116987M. 
  7. ஜெனிபர் டவுன்னா's publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
  8. 8.0 8.1 Jennifer A. Doudna and Samuel H. Sternberg.  A Crack in Creation: Gene Editing and the Unthinkable Power to Control Evolution. Houghton Mifflin Harcourt, 2017.
  9. "Cracking the Code: Jennifer Doudna and Her Amazing Molecular Scissors". Cal Alumni Association. பார்த்த நாள் 10 November 2017.
  10. Pollack, Andrew (May 11, 2015). "Jennifer Doudna, a Pioneer Who Helped Simplify Genome Editing". New York Times. https://www.nytimes.com/2015/05/12/science/jennifer-doudna-crispr-cas9-genetic-engineering.html. பார்த்த நாள்: May 12, 2015. 
  11. "Alan T. Waterman Award Recipients, 1976 – present". National Science Foundation. பார்த்த நாள் 31 October 2017.
  12. "Laureates: Jennifer A. Doudna". பார்த்த நாள் 31 October 2017.
  13. "2015 Genetics Prize: Jennifer Doudna". The Gruber Foundation. பார்த்த நாள் 24 October 2017.
  14. "Jennifer Doudna". Canada Gairdner Foundation. பார்த்த நாள் 2 November 2017.
  15. "Laureates of the Japan Prize: Jennifer A. Doudna, Ph.D.". The Japan Prize Foundation. பார்த்த நாள் 1 November 2017.
  16. King, Mary-Claire. "Time 100 Most Influential People: Emmanuelle Charpentier & Jennifer Doudna". Time. April 16. 2015. Web. 25 Dec. 2016.
  17. Park, Alice. "The CRISPR Pioneers: Their Breakthrough Work Could Change the World." Time. N.d. 2016. Web. 25 Dec. 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_டவுன்னா&oldid=2701896" இருந்து மீள்விக்கப்பட்டது