ஜெனரல் திஸ்ஸ இந்திரக வீரதுங்க
தோற்றம்
திச இந்திரக வீரதுங்க, (Tissa Weeratunga) VSV (ஆகஸ்ட் 29, 1930 – நவம்பர் 2003) ஓர்இலங்கை இராணுவ கட்டளையாளர் ஆவார். இவர் 1981 முதல் 1985 வரை இலங்கை இராணுவத்தின் தளபதியாகவும், கூட்டு நடவடிக்கைத் தலைமையகத்தின் முதல் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர், 1986 முதல் 1990 வரை கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றினார்.
ஆரம்பகால வாழ்க்கை, கல்வி
[தொகு]இவர் மத்தறையைச் சேர்ந்த தோட்ட உரிமையாளரான ஆர்தர் வீரதுங்க, ஹென்றிட்டா வீரதுங்க ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு கிருஷ்ணஜினா வீரதுங்க என்ற சகோதரி இருந்தார்; இவர் 1978 முதல் 1982 வரை காவல்துறை மா அதிபராகப் பணியாற்றிய அனா செனவிரத்னவை மணந்தார். திஸ்ஸ வீரதுங்க கொழும்பு றோயல்யல் கல்லூரியில் கல்வி பயின்றார்.[1]