ஜெசி மெக்கார்ட்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெசி மெக்கார்ட்னி
Jesse McCartney
பின்னணித் தகவல்கள்
பிறப்புஏப்ரல் 9, 1987 (1987-04-09) (அகவை 36)
நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்பாப் இசை
தொழில்(கள்)பாடகர், கவிஞர், நடிகர்
இசைத்துறையில்1998-இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்ஹாலிவுட்
இணையதளம்Jessemac.com

ஜெசி மெக்கார்ட்னி (Jesse McCartney, பிறப்பு: ஏப்ரல் 9, 1987), அமெரிக்காவின் பாடகர்-பாடலாசிரியர் மற்றும் நடிகராக உள்ளார். 2000ம் ஆண்டுகளின் துவக்கத்தில் பாய் பேண்டு டிரீம் ஸ்ட்ரீட் குழுவின் உறுப்பினராக தனது கலைவாழ்வைத் துவக்கினார் ஜெஸ்ஸி மெக்கார்ட்னி. அதன் பின் தனியாக நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். தொலைக்காட்சித் தொடரான சம்மர்லேண்டு மற்றும் ஏபிசி குடும்பத் தொடரான கிரீக் நாடகத்திலும் தொடர்ந்து வரும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜெஸ்ஸி மெக்கார்ட்னி, நியூயார்க்கின் ஆர்ட்ஸ்லி பகுதியில் ஸ்காட் மற்றும் ஜிஞ்சர் மெக்கார்ட்னி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] தனது ஒன்பதாவது வயதில் உள்ளூர் சமூக இசைக்குழுவில் பங்கேற்றார், அதன் பின் பத்தாவது வயதில் தி கிங் அண்டு ஐ மற்றும் ஃபில் ஆஃப் தி பியூச்சர் நட்சத்திரமான ரிக்கி உல்மேன் குழுவுடன் தேசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

நடிப்பு[தொகு]

மெக்கார்ட்னி, மேடிசன் சதுக்க கார்டனில் தி ஹூ குழுவின் ரோஜர் டால்ட்ரே உடன் இணைந்து கிறிஸ்துமஸ் கேரோல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 1998 முதல் 2001ம் ஆண்டு வரை, ஆடம் சாண்ட்லர், ஜூனியர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஏபிசி தயாரித்த தொடரான ஆல் மை சில்ட்ரன் தொடரில் நடித்தார் மெக்கார்ட்னி. இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன் பின் சம்மர்லேண்டு என்ற குறுந்தொடரில் நடித்தார், இரண்டு பகுதிகளைக் கொண்ட இத்தொடர் தற்போது இயக்கத்தில் இல்லாத டபிள்யூபி நெட்வொர்க்கில் வெளியிடப்பட்டது.

2005ம் ஆண்டு டிஸ்னி தொலைக்காட்சியில், தி சூட் லைஃப் ஆப் ஜேக் &கோடி என்ற நிகழ்ச்சியில் தனது சொந்த கதாபாத்திரமாகவே தோன்றினார் மெக்கார்ட்னி. 2006ம் ஆண்டு கிங்டம் ஹார்ட்ஸ் II என்ற டிஸ்னி/ஸ்குயர் எனிக்ஸ் வீடியோ விளையாட்டில் ரோக்சாஸ் குரல் வழியாக பங்களித்தார். 2008ம் ஆண்டு, கிங்டம் ஹார்ட்ஸ் 358/2 டேஸ் விளையாட்டின் வாயிலாக கிங்டம் ஹார்ட்ஸ் II ரோக்சஸ் கதாபாத்திரத்துக்கு மீண்டும் குரல் கொடுத்தார். 2007ம் ஆண்டு, மெக்கார்ட்னி தனது சொந்த கதாபாத்திரமாகவே டிஸ்னி தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் ஹன்னா மொன்டோனா நிகழ்ச்சியில் தோன்றினார். 2008ம் ஆண்டு, ஹார்டன் ஹியர்ஸ் ய ஹூ! நிகழ்ச்சியின் ஜோஜோ மெக்டோட் குரல் வழியாக மெக்கார்ட்னிதோன்றினார். இதுமட்டுமின்றி, தியோடருக்கு 2007ம் ஆண்டு வெளியான ஆல்வின் அண்டு தி சிப்மங்க்ஸ் என்ற திரைப்படத்திலும், 2009ம் ஆண்டு வெளியான திரைப்படத்திலும் மெக்கார்ட்னி குரல் கொடுத்துள்ளார். Alvin and the Chipmunks: The Squeakquel அத்துடன், 2008ம் ஆண்டு வெளியான டிங்கர் பெல் என்ற திரைப்படத்திலும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

2008ம் ஆண்டு, நடிகை எலிசபத் ஹர்னாய்ஸ் உடன் இணைந்து இளவயதினருக்கான கீத் என்ற திரைப்படத்தில் மெக்கார்ட்னி நடித்தார். இத்திரைப்படத்தை டோட் ஏ. கெஸ்லர் இயக்கினார். தனது முதல் திரைப்படத்திலேயே மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் மெக்கார்ட்னி. கீத் திரைப்படம் செப்டம்பர் 19, 2008ம் ஆண்டு வெளியானது.

டிசம்பர் 2008ம் ஆண்டு வெளியான என்டர்டெயின்மென்ட் வீக்லி என்ற பத்திரிகையில், எதிர்ப்பு நாட்டின் இளவரசர் ஜூகோ கதாபாத்திரத்தில் இயக்குனர்எம். நைட் ஷியாமளன் இயக்கிய அடாப்டேஷன் ஆஃப்அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் திரைப்படத்தில் நடிக்க மெக்கார்ட்னி மறுத்ததாக, செய்திகள் வெளியாகின.[2] பிப்ரவரி 2009ம் ஆண்டு, மெக்கார்ட்னிக்கு பதிலாக பிரித்தானிய நடிகர் தேவ் படேல் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது தேதிகள் வேறு நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டத்தால் நடிக்க இயலாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.[3] திரைப்படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டிய மெக்கார்ட்னி, திரைப்படப் பள்ளியில் இணைவதற்கும் விருப்பம் தெரிவித்தார்.[4]

2009ம் ஆண்டு, எதைப்பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத விளையாட்டுத்தனம் நிறைந்த கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் ஏபிசி குடும்ப தொலைக்காட்சி தொடரான கிரீக் நாடகத்தில் மெக்கார்ட்னி நடித்தார். 2009ம் ஆண்டில், விரைவில் வெளியாகும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு குரல் கொடுக்கப்போவதாக (அது வென்சஸ் என்பது பின்னர் தெரியவந்தது) தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கின் மூலம் தெரியப்படுத்தினார் Kingdom Hearts: Birth by Sleep [5]

இசை[தொகு]

துவக்கம்[தொகு]

1999ம் ஆண்டு, அமெரிக்காவின் பாப் பாய் பேண்டு டிரீம் ஸ்ட்ரீட் இசைக் குழுவில் இணைந்த மெக்கார்ட்னி, 2002ம் ஆண்டு வரை அதன் உறுப்பினராக இருந்தார். தனியாக தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள, இந்த அனுபவம் தனக்கு "படிக்கல்லாக" இருந்தது என ஜெஸ்ஸி மெக்கார்னி கூறியிருக்கிறார்.[6] இந்தக் குழு தங்களது முதல் சிடி வெளியீட்டின் மூலம் கோல்டு ரெக்கார்டு பெருமையைப் பெற்றனர், இந்த சாதனையை ஆரோன் கார்டருடனான சுற்றுப்பயணத்தின் போது முறியடித்தனர். தனது பதினைந்தாவது வயதில், உள்ளூர் குழுவுடன் இணைந்து தனியாக தனது இசைப்பயணத்தைத் துவக்கினார் மெக்கார்ட்னி. அந்தக் குழுவில் தில்லான் காண்டோர் (கிட்டார்), பீட்டர் செம்மா (பாஸ்), கேட்டீ ஸ்பென்சர் (கீபோர்டு), அலெக்ஸ் ரெஸ்ஸேகு (டிரம்ஸ்), கரினா லாக்ரேவினெஸ் (பின்னணி குரல்), ஷாரிஸ்ஸீ ஃபிரான்சிஸ்கோ (பின்னணி குரல்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவை ஜிஞ்சர் மெக்கார்ட்னி மற்றும் ஷெர்ரி கோஃபின் காண்டோர் ஆகியோர் நிர்வகித்தனர். பியூட்டிபுல் சோல் என்ற மெக்கார்ட்னியின் முதல் ஆல்பத்தின் இணை தயாரிப்பாளர்களாக இவர்கள் இருந்தனர்.

ஜூலை 2004ம் ஆண்டு தனது முதல் ஆல்பத்தை மெக்கார்ட்னி வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் பின்வரும் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன: "பியூட்டிபுல் சோல்", "டோண்ட் யூ" மற்றும் "ஒய் டோண்ட் யூ கிஸ் ஹெர்". 2004ம் ஆண்டு, ஆன்னே ஹேத்தவே உடன் இணைந்து மெக்கார்ட்னி பாடிய டூயட் பாடலான "டோண்ட் கோ பிரேக்கிங் மை ஹார்ட்", எல்லா என்சான்டட் இசைத் தொகுப்பில் வெளியிடப்பட்டது.

பியூட்டிபுல் சோல் மற்றும் ரைட் வேர் யூ வான்ட் மீ (2004–2007)[தொகு]

ஜூன் 24, 2009 அன்று ப்ரியன்ட் பார்க் கலைநிகழ்ச்சியில் மெக்கார்ட்னி

மெக்கார்ட்னியின் முதல் தனி ஆல்பம் பியூட்டிபுல் சோல் , இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம், செப்டம்பர் 28, 2004 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது, ஓராண்டுகள் கழித்து ஐரோப்பாவில் வெளியானது.[7] இந்த ஆல்பத்தை "பாப் ரெக்கார்டு" என்பதுடன் ட்விஸ்ட்ஸ் ஆஃப் அர்பன் என்றும் வகைப்படுத்தியிருந்தார்.[8] இந்த ஆல்பத்தில் இவர் எழுதிய நான்கு பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[9] பியூட்டிபுல் சோல் ஆல்பம், பில்போர்டு 200 பட்டியலில் 15வது இடத்தைப் பிடித்தது.[10] இந்த ஆல்பத்துக்கு அமெரிக்க ரெக்கார்டிங் துறைக்கான கூட்டமைப்பின் பிளாட்டினம் சான்றிதழ் அளிக்கப்பட்டது. அமெரிக்க சில்லறை விற்பனையாளர்களுக்கு பத்து லட்சம் யூனிட்கள் அனுப்பப்பட்டதால், 2009ம் ஆண்டின் துவக்கத்தில் உயர்தர சான்றிதழை இந்த ஆல்பம் பெற்றது.[11] 2006ம் ஆண்டின் மத்தியில், இந்த ஆல்பம் 15 லட்சம் பிரதிகள் விற்பனையாகியது.[9] ஆல்பத்திலுள்ள சிங்கிள் ஆஃப் தி சேம் நேம் என்ற பாடல், பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் 16வது இடத்தைப் பிடித்தது.[12] கடந்த 2005ம் ஆண்டின் டீன் சாய்ஸ் விருதுகள் பிரிவில் அதிக விருதுகள் வாங்கியவர்களில் மெக்கார்ட்னியும் ஒருவர். சாய்ஸ் கிராஸ்ஓவர் ஆர்டிஸ்ட், சாய்ஸ் ஆண் கலைஞர், சாய்ஸ் பிரேக்அவுட் ஆண் போன்ற விருதுகளை வென்றிருக்கிறார்.[13] அதற்கு அடுத்த ஆண்டு, நிக்கெலோதியோன் கிட்ஸ் சாய்ஸ் விருதுகள் பட்டியலில் சிறந்த ஆண் பாடகர் விருதை வென்றுள்ளார்.[9]

பியூட்டிபுல் சோல் எனப் பெயரிடப்பட்ட இவரது முதல் மிகப் பெரிய சுற்றுப் பயணம், 2005ம் ஆண்டு மே 2ம் தேதி கலிபோர்னியாவின் சாக்ரமென்டோ நகரில் உள்ள க்ரெஸ்ட் தியேட்டரில் தொடங்கியது.[8] அமெரிக்கா முழுவதும் 56 இடங்களில் இசை நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்ட இச்சுற்றுப் பயணம், கலிபோர்னியாவின் மதேரா மாவட்டத்தில் 2005ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியுடன் நிறைவுபெற்றது. 2005ம் ஆண்டிலேயே, மெக்கார்ட்னி ஆஸ்த்ரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அத்துடன் 2005ம் ஆண்டின் கோடையில் பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் குழுவுக்காக நிகழ்ச்சி நடத்தினார். ஜூலை 9ம் தேதி கலிபோர்னியாவின் சான்டா கிளாரா பகுதியில் உள்ள கலிபோர்னியாஸ் அமெரிக்கா அரங்கில் அவர் நடத்திய நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு, லைவ்: தி பியூட்டிபுல் சோல் என்ற பெயரில் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆல்பமாக வெளியிடப்பட்டது.[7]

கீத் திரைப்படம் முடிந்ததும், ரைட் வேர் யூ வான்ட் மீ என்ற தனது இரண்டாவது ஆல்பத்தை உருவாக்கத் தொடங்கினார். இந்த ஆல்பத்தின் அனைத்து பாடல்களை எழுதுவதில் முக்கிய பங்கு வகித்தார், அவற்றுள் ஒரு பாடல் தான் வெளியானது.[9][14] ரைட் வேர் யூ வான்ட் மீ ஆல்பமானது, இவரது முதல் ஆல்பத்தை விட நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 15வயதிலிருந்து மெக்கார்ட்னியின் இசை மற்றும் தனிப்பட்ட அறிவு படிப்படியாக வளர்வதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.[7] செப்டம்பர் 19, 2006ம் ஆண்டு ஹாலிவுட் ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியான இந்த ஆல்பம், பில்போர்டு  ௨௦௦ வரிசையில் 14து இடத்தைப் பிடித்தது.[10] ஆல்பத்தில் வரும் தனிப்பாடலான "ரைட் வேர் யூ வான்ட் மீ" என்ற பாடல், ஜூலை 11, 2006முதல் ஒலிபரப்பாகத் தொடங்கியது. தனது ரெக்கார்டிங் நிறுவனத்திடமிருந்து சரியான ஆதரவு கிடைக்காததால், புதிய சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப் போவதில்லை என்று மெக்கார்ட்னியின் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளை மெக்கார்ட்னி நடத்தினார்.

டிபார்ச்சர் (2008–2009)[தொகு]

பிப்ரவரி 15, 2009 அன்று லூசியானாவின் மெட்டாரீ பகுதியில் நடந்த கலைநிகழ்ச்சியில் மெக்கார்ட்னி

மெக்கார்ட்னியின் மூன்றாவது ஆல்பம் டிபார்ச்சர் , மே 20, 2008 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியிடப்பட்டது. இசைக் கோர்ப்பில், இந்த ஆல்பம் அவரது முந்தைய ஆல்பங்களை விட மிக நேர்த்தியாக அமைந்தது.[15] இந்த ஆல்பம், பில்போர்டு  200வரிசையில் 14வது இடத்தைப் பிடித்தது.[10]

இந்த ஆல்பத்தின் முக்கியப் பாடலான லீவிங்", மார்ச் 2008ல் வெளியிடப்பட்டது. பில்போர்டு ஹாட் 100 வரிசையில் (10)வது இடத்தை ஐந்து வாரங்களுக்கு பிடித்திருந்தது. இது மெக்கார்ட்னிக்கு மிகப் பெரிய புகழைத் தேடித் தந்தது.[12] இந்தப் பாடலுக்கு பிளாட்டினம் சான்றிதழை ஆர்ஐஏஏ வழங்கியது. 30லட்சம் பிரதிகள் விற்பனையானதுடன், ஐட்யூன்ஸ் பதிவிறக்கத்தில் 20லட்சத்தைத் தொட்டது. இது தான் 2009ம் ஆண்டில் மெக்கார்ட்னியின் அதிக சான்றிதழ் அளிக்கப்பட்ட பாடல்[11]. அடுத்த பாடலான "இட்ஸ் ஓவர்", ஆகஸ்ட் 26, 2008அன்று வெளியிடப்பட்டது. முந்தைய பாடலின் வெற்றியை ஒப்பிடும் போது, சுமாரான வெற்றியையே இப்பாடல் பெற்றது. ஹாட் 100வரிசையில் 42 வது இடத்தை மட்டுமே பிடித்தது. மெக்கார்ட்னி தனது டிபார்ச்சர் ஆல்பத்தை பிரபலப்படுத்தும் விதமாக, ஜோர்டின் ஸ்பார்க்ஸ் உடன் இணைந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இச்சுற்றுப் பயணம் ஆகஸ்ட் 2008 தொடங்கி, செப்டம்பர் வரை நீடித்தது. ஸ்பார்க்ஸ் உடன் இணைந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், தியேட்டர்களிலும், சிறிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது ஆல்பத்தை பிரபலப்படுத்தினார்.

மெக்கார்ட்னி தனது டிபார்ச்சர் ஆல்பத்தை ஏப்ரல் 7, 2009 அன்று மீண்டும் வெளியிட்டார். மறு வெளியீடு செய்யப்பட்ட டிபார்ச்சர்: ரீசார்ஜ்டு ஆல்பத்தில் "பாடி லேங்குவேஜ்", "ஆக்ஸிஜன்", "கிராஷ் & பர்ன்" மற்றும் "இன் மை வெய்ன்ஸ்" ஆகிய ௪ பாடல்கள் இடம்பெற்றிருந்தன. மீண்டும் வெளியிடப்பட்ட ஆல்பத்தில் "ஹவ் டூ யூ ஸ்லீப்?" பாடலின் ரீமிக்ஸ் பதிப்பும் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை ராப் பாடகர்/நடிகர் லுடாகிரிஸ் உடன் இணைந்து உருவாக்கினார். ஆல்பத்தின் மூன்றாவது தனிப்பாடலானது, மறுவெளியீடு செய்யப்பட்ட ஆல்பத்திலிருந்து எடுத்து வெளியிடப்பட்ட "ஹவ் டூ யூ ஸ்லீப்?" ஆகும். இந்தப் பாடலானது, இரண்டாவது தனிப்பாடலைக் காட்டிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இது ஹாட் 100 வரிசையில் 26வது இடத்தைப் பிடித்தது. ஆல்பத்தின் நான்காவது பாடலும், மறுவெளியீடு செய்யப்பட்ட ஆல்பத்திலிருந்து எடுத்து வெளியிடப்பட்டது. இப்பாடல் "பாடி லேங்குவேஜ்" என்ற டி-பெய்ன் பங்குபெற்ற பாடலின் புதிய வடிவமாகும். இந்தப் பாடல் வெளியிடப்பட்ட 13வது வாரத்தில் பில்போர்டு டான்ஸ்/கிளப் பாடல்கள் வரிசையில் 10வது இடத்தைப் பிடித்து, மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது.[10]

நான்காவது ஸ்டுடியோ ஆல்பம் (2009-இன்று வரை)[தொகு]

தனது நான்காவது ஸ்டுடியோ ஆல்பத்தை நவம்பர் அல்லது டிசம்பர் 2009 துவக்கத்தில் உருவாக்கப்போவதாக, அக்டோபர் 10, 2009 அன்று மெக்கார்ட்னி உறுதியாக தெரிவித்தார் ஆல்பத்தின் உருவாக்கப் பணிகள் முடிந்து, 2010ம் ஆண்டின் ஜூன் -அக்டோபர் மாதங்களுக்கிடையே வெளியிடப்படும் என்றும், ஆல்பத்தின் முதன்மைப் பாடலை வெளியீட்டுத் தேதிக்கு 2 மாதங்களுக்கு முன்பே எதிர்பார்க்கலாம் என்றும் மெக்கார்ட்னி தெரிவித்தார். இதன் மூலம்,முதன்மைப் பாடல் ஏப்ரல் 2010ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆல்பம் தனது டிபார்ச்சர் ஆல்பத்தைப் போலவே இருந்தாலும், R&B மற்றூம் அர்பன் ஆகியவை மேலும் கூடுதலாக இருக்கும் என்று மெக்கார்ட்னி தெரிவித்திருந்தார். ஜனவரி 2010ல், "டுநைட் இஸ் யுவர் நைட்" என்ற பாடல் முதன் முதலாக கசிந்தது.

பாடல் எழுதுதல்[தொகு]

2007ம் ஆண்டின் இறுதியில், பிரபலமான "பிளீடிங் லவ்" என்ற பாடலை ஒன் ரிபப்ளிக்கை சேர்ந்த ரியான்டெட்டர் உடன் இணைந்து மெக்கார்ட்னி எழுதினார், இப்பாடலை ஆங்கிலப் பாடகர் லியோனா லிவிஸ் உருவாக்கிய ஸ்பிரிட் என்ற முதல் ஆல்பத்திற்காக மெக்கார்ட்னியும் டெட்டரும் இணைந்து தயாரித்தனர். இந்தப் பாடல் 2009ம் ஆண்டின் கிராம்மி விருதுகள் பட்டியலில் ரெக்கார்ட் ஆஃப் தி இயர் பிரிவுக்காக பரிந்துரைக்கப்பட்டது.[16] மெக்கார்ட்னி தனது சொந்தப் பதிப்பை தானே பதிவு செய்தார். இவை அவரது டிபார்ச்சர் ஆல்பத்தின் சில பதிப்புகளில் வெளியானது.

இந்தப் பாடலின் உலகளாவிய வெற்றி, ஒரு பாடலாசிரியராக மெக்கார்ட்னிக்கு நல்ல அங்கீகாரத்தை வழங்கியது. இந்த வெற்றியின் மூலம் மெக்கார்ட்னிக்கு பல இசை நிறுவன நிர்வாகிகளிடமிருந்தும், பாடகர்களிடமிருந்தும் அதிக அழைப்புகள் வரத் தொடங்கின. டெட்டருடன் மீண்டும் ஸ்டுடியோவுக்குச் சென்று புகழ் பெற்றவர்களுக்காக பாடல்கள் எழுதுமாறு,எக்ஸ்-ஃபேக்டர் 'ஐ சேர்ந்தசைமன் கோவெல் கேட்டுக்கொண்டார். தனக்காக பாடல்கள் எழுதும்படி, மெக்கார்ட்னியின் 2008 ஆண்டு சுற்றுப்பயண நண்பரான அமெரிக்கன் ஐடல் சீசன் சிக்ஸ் வெற்றியாளர் ஜோர்டின் ஸ்பார்க்ஸ், மெக்கார்ட்னியிடம் கேட்டுக்கொண்டார்.[17] வனேஸா ஹட்க்ஜென்ஸ் 'டோன்ட் லீவ்' பாடலை ஆன்டோனியா அர்மேட்டோ மற்றும் டிம் ஜேம்ஸ் ஆகியோருடன் கூட்டிணைந்து மெக்கார்ட்னி எழுதினார்; தற்போது டோனிபிராக்ஸ்டனின் பல்ஸ் என்ற புதிய ஆல்பத்தில் கூட்டிணைந்து பணியாற்றுகிறார்.

மனிதநேயம்[தொகு]

2005ம் ஆண்டு, "அனைவரும் ஒன்றுகூடுவோம்" என்ற பெயரிலான அறக்கட்டளை வாயிலாக 2004ம் ஆண்டின் ஆசிய சுனாமி மற்றும் 2005ம் ஆண்டு ஏற்பட்ட காத்ரினா சூறாவளி தாக்கியதால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

2005ம் ஆண்டில், அமெரிக்கா முழுவதும் உள்ள பொதுப்பள்ளிகளில் பயிலும் வசதியற்ற மாணவர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் லிட்டில் கிட்ஸ் ராக்[18] என்ற தொண்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக மெக்கார்ட்னி ஒப்பந்தம் மேற்கொண்டார். அந்த தொண்டு நிறுவனத்தின் கவுரவ இயக்குனர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

2005ம் ஆண்டு தான் மேற்கொண்ட பேரிடர் நிவாரண சுற்றுப்பயணத்தின் போது நன்கொடைகளை அளித்தார், "போதை இல்லாத அமெரிக்காவின் குழந்தைகள்" என்ற பிரச்சாரத்துக்காக வானொலி நிகழ்ச்சிகள் வழங்கினார், புனித ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளராக உள்ளார், அத்துடன் தனது தாயாரின் தோழியால் துவக்கப்பட்ட ஸ்பேஸ் என்ற அறக்கட்டளையிலும் அங்கம் வகிக்கிறார். சிட்டி ஆஃப் ஹோப் புற்றுநோய் மையத்தின் நலனுக்காக, 2005ம் ஆண்டில் ஹோப் ராக்ஸ் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.[19] அக்டோபர் 25, 2009 அன்று நடந்த ஹோப் இசை நிகழ்ச்சியில் டிஸ்னி நட்சத்திரங்களான மிலே சைரஸ் மற்றும் டெமி லொவாடோ ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்டார்.[20]

இசைப் பதிவாக்கங்கள்[தொகு]

ஸ்டுடியோ ஆல்பங்கள்
 • 2004: பியூட்டிபுல் சோல்
 • 2006: ரைட் வேர் யூ வான்ட் மீ
 • 2008: டிபார்ச்சர்
டிவிடிக்கள்
 • 2005: அப் க்ளோஸ்
 • 2005: Live: The Beautiful Soul Tour
லைவ் ஆல்பங்கள்
 • 2005: Live: The Beautiful Soul Tour
 • 2009: ஜெஸ்ஸி மெக்கார்ட்னி - ஹவுஸ் ஆஃப் புளூஸ், சன்செட் ஸ்ட்ரிப் பகுதியில் நேரடி நிகழ்ச்சி

மற்ற ஆல்பங்கள்
 • 2003: ஜேமேக்
 • 2005: ஆஃப் தி ரெக்கார்ட்
இசை நிகழ்ச்சிகளுக்கான சுற்றுப் பயணம்
 • 2004/2005: பியூட்டிபுல் சோல் சுற்றுப் பயணம்
 • 2006/2007: ரைட் வேர் யூ வான்ட் மீ சுற்றுப் பயணம்
 • 2008: டிபார்ச்சர் மினி-சுற்றுப் பயணம்
 • 2008: ஜெஸ்ஸி & ஜோர்டின் நேரடி சுற்றுப் பயணம்
 • 2009: ஹெட்லைனிங் சுற்றுப் பயணம்
 • 2009: New Kids on the Block: Live

திரைப்படங்கள்[தொகு]

2008. 2008.
திரைப்படம்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2001 தி பைரேட்ஸ் ஆஃப் சென்ட்ரல் பார்க் சைமன் பேஸ்கின்
2005

பீட்ஸா

ஜஸ்டின் பிரிட்ஜஸ்
2007 ஆல்வின் அண்டு தி சிப்மங்க்ஸ் தியோடர் பின்னணி குரல் கதாபாத்திரம்
2008 ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ! ஜோஜோ பின்னணி குரல் கதாபாத்திரம்
அன்ஸ்டேபிள் ஃபேபிள்ஸ்: 3 பிக்ஸ் அண்டு ய பேபி லக்கி பின்னணி குரல் கதாபாத்திரம்
கீத் கீத்

முக்கியக் கதாபாத்திரம்.

டிங்கர் பெல் டெரென்ஸ் பின்னணி குரல் கதாபாத்திரம்
2007 டிங்கர் பெல் அண்டு தி லாஸ்ட் ட்ரெஷர் பின்னணி குரல் கதாபாத்திரம்
Alvin and the Chipmunks: The Squeakquel தியோடர் பின்னணி குரல் கதாபாத்திரம்
2010 பிவேர் தி கோஞ்சோ ரிலோ முக்கிய கதாபாத்திரம், போஸ்ட்-புரொடக்ஷன்
தொலைக்காட்சி
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
1998-2001 ஆல் மை சில்ரன் ஜேஆர் கேண்ட்லர்

எட்டு அத்தியாயங்கள்
இளைய நடிகராக பகல்பொழுது தொடரில் சிறப்பாக நடித்தமைக்காக, இளைய கலைஞருக்கான விருது
இளைய துணை நடிகராக பகல்பொழுது தொடரில் சிறப்பாக நடித்தமைக்காக, இளைய கலைஞருக்கான விருது
பரிந்துரை — சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான சோப் ஓபரா டைஜஸ்ட் விருது
பரிந்துரை — இளைய நடிகராக தொடர் நாடகத்தில் நடித்தமைக்காக, இளைய கலைஞருக்கான எம்மி விருது (2001, 2002)
பரிந்துரை — இளைய நடிகராக சோப் ஓபராவில் சிறப்பாக நடித்தமைக்காக இளைய கலைஞருக்கான விருது

2000 லா & ஆர்டர் டேன்னி டிரிஸ்கால் "தின் ஐஸ்"
2002 தி ஸ்ட்ரேஞ்ச் லெகசி ஆஃப் கேமரூன் க்ரூஸ் கேமரூன் க்ருஸ்
2004 வாட் ஐ லைக் அபவுட் யூ அவராகவே "தி நாட் சோ சிம்பிள் லைஃப்"
2004-2005 சம்மர்லேண்ட் பிராடின் வெஸ்டர்லி இருபத்தி ஆறு அத்தியாயங்கள், முக்கிய கதாபாத்திரம்
பரிந்துரை — விருப்பமான தொலைக்காட்சி நடிகருக்கான சாய்ஸ் டிவி விருது: நாடகம்
2005

தி சூட் லைப் ஆஃப் ஜேக் & கோடி

அவராகவே "ராக் ஸ்டார் இன் தி ஹவுஸ்"
2005 பங்க்டு அவராகவே பங்க்டு சீசன் 5 அத்தியாயம் 3
2007

ஹன்னா மோண்டனா

அவராகவே "வென் யூ விஷ் யூ வேர் தி ஸ்டார்"
Law & Order: Special Victims Unit மேக்ஸ் மடராஸோ "பேப்ஸ்"
2009

கிரீக்

ஆண்டி ஐந்து அத்தியாயங்கள், தொடர் கதாபாத்திரம்
வீடியோ கேம்கள்
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
2006 கிங்டம் ஹார்ட்ஸ் II ரோக்சாஸ்
The Hardy Boys: The Hidden Theft பிராங்க் ஹார்டி

முக்கியப கதாபாத்திரம்.

2009 கிங்டம் ஹார்ட்ஸ் 358/2 நாட்கள் ரோக்சாஸ்

முக்கிய கதாபாத்திரம்.

2010 Kingdom Hearts: Birth by Sleep வென்டஸ்

முக்கிய கதாபாத்திரம்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

 • 1998: பரிந்துரை : சிறந்த குழந்தைகள் ஆல்பத்துக்கான கிராம்மி விருது (சுகர் பீட்ஸின் ஒரு பகுதியாக ஹவ் ஸ்வீட் இட் இஸ் ஆல்பத்துக்காக)
 • 2001: பரிந்துரை : சோப் ஓபரா டைஜஸ்ட் விருது - சிறந்த குழந்தை நட்சத்திரம்
 • 2001: பரிந்துரை : பகல்பொழுது எம்மி - தொடர்நாடகத்தில் சிறந்த இளைய இயக்குனர்
 • 2002: வெற்றி : இளைய கலைஞர் விருது - பகல்பொழுது தொலைக்காட்சி தொடரில் சிறந்த நடிப்பு - இளைய நடிகர்
 • 2002: பரிந்துரை : Daytime Emmy - Outstanding Younger Actor in a Drama Series
 • 2005: வெற்றி : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் ஆண் நடிகர்[13]
 • 005: வெற்றி : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் பிரேக்-அவுட் நடிகர்-ஆண்[13]
 • 2005: வெற்றி : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் கிராஸோவர் கலைஞர்[13]
 • 2005: பரிந்துரை : MTV வீடியோ மியூசிக் விருதுகள் - "பியூட்டிபுல் சோல்" ஆல்பத்துக்காக சிறந்த பாப் வீடியோ விருது
 • 2005: வெற்றி : ரேடியோ டிஸ்னி மியூசிக் விருதுகள் - தொடச்சியாக கேட்கத்தூண்டும் சிறந்த பாடல்
 • 2005: பரிந்துரை : அமெரிக்க இசை விருதுகள் - சிறந்த புதுமுக கலைஞர்
 • 2005: வெற்றி : ரேடியோ டிஸ்னி மியூசிக் விருதுகள் - சிறந்த கரோகே பாடல்
 • 2005: வெற்றி : ரேடியோ டிஸ்னி மியூசிக் விருதுகள் - சிறந்த ஆண் பாடகர்
 • 2006: வெற்றி : கிட்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விருது - பிடித்த ஆண் பாடகர்[9]
 • 2006: வெற்றி : டிஆர்எல் விருதுகள் இத்தாலி - சிறந்த "கண்ணீர்" விருது
 • 2007: பரிந்துரை : கிட்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விருது இத்தாலி - சிறந்த சர்வதேச கலைஞர்
 • 2007: பரிந்துரை : டிஆர்எல் விருதுகள் இத்தாலி - சிறந்த ஆண் பாடகர்
 • 2007: பரிந்துரை : டிஆர்எல் விருதுகள் இத்தாலி - "ஜஸ்ட் சோ யூ நோ" ஆல்பத்துக்காக சிறந்த வீடியோ விருது
 • 2007: பரிந்துரை : கிட்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விருது - பிடித்தமான ஆண் பாடகர்
 • 2007: வெற்றி : ரேடியோ டிஸ்னி மியூசிக் விருதுகள் - சிறந்த ஆண் பாடகர்
 • 2008: பரிந்துரை : டிஆர்எல் விருதுகள் இத்தாலி - ஆண்டின் சிறந்த ஆண்
 • 2008: பரிந்துரை : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் ஆண் கலைஞர்
 • 2008: பரிந்துரை : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் அதிக ரசிகர்களைக் கொண்டவர்
 • 2008: பரிந்துரை : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் சம்மர் பாடல் (லீவிங்)
 • 2009: வெற்றி : டீன் சாய்ஸ் விருதுகள் - சிறந்த ஆண் பாடகர்
 • 2009: பரிந்துரை : டீன் சாய்ஸ் விருதுகள் - சாய்ஸ் காதல் பாடல் (ஹவ் டூ யூ ஸ்லீப்?)

குறிப்புகள்[தொகு]

 1. . TeenIdols4You. August 2003. http://www.teenidols4you.com/bio/Actors/84/jesse_mccartney.html. பார்த்த நாள்: 2009-11-10. 
 2. Sperling, Nicole (December 17, 2008). "Movies". Entertainment Weekly (1026): 15. 
 3. Fleming, Michael (2009-02-01). "Shyamalan cast floats on Air". Variety. http://www.variety.com/article/VR1117999413.html?categoryid=13&cs=1&nid=2562. பார்த்த நாள்: 2009-02-01. 
 4. Carroll, Larry. "Keith ... Set Visit". MTV. பார்க்கப்பட்ட நாள் 2009-02-04.
 5. http://twitter.com/JesseMcCartney
 6. Popstar (June 2006). "Jesse McCartney: The Pop Prince!". Popstar Special!: 13. 
 7. 7.0 7.1 7.2 Tecson, Brandee (2005-12-06). "Jesse McCartney Wants His Next LP To Take After His New Hair Color". MTV. http://www.mtv.com/news/articles/1517541/20051206/mccartney__jesse.jhtml. பார்த்த நாள்: 2009-02-04. 
 8. 8.0 8.1 Davis, Carolyn (2005-03-22). "Jesse McCartney Plans Tour, Hints At Juicy Summerland Drama". MTV. http://www.mtv.com/news/articles/1498855/20050322/mccartney__jesse.jhtml. பார்த்த நாள்: 2009-02-04. 
 9. 9.0 9.1 9.2 9.3 9.4 Leonard, Shana (2006-07-13). "In September, Get Jesse McCartney Right Where You Want Him". MTV. http://www.mtv.com/news/articles/1536227/20060712/mccartney__jesse.jhtml. பார்த்த நாள்: 2009-02-04. 
 10. 10.0 10.1 10.2 10.3 "Artist Chart History - Jesse McCartney". Billboard. Nielsen Business Media, Inc. Archived from the original on 2009-02-13. பார்க்கப்பட்ட நாள் 2009-02-03.
 11. 11.0 11.1 "Gold and Platinum". Recording Industry Association of America. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2009-02-03.
 12. 12.0 12.1 "Artist Chart History - Jesse McCartney". Billboard. Nielsen Business Media, Inc. Archived from the original on 2008-06-01. பார்க்கப்பட்ட நாள் 2009-02-03.
 13. 13.0 13.1 13.2 13.3 Corey, Moss (2005-08-15). "Napoleon Dynamite, Kelly Clarkson Win Big At Teen Choice Awards". MTV. http://www.mtv.com/news/articles/1507574/20050815/clarkson_kelly.jhtml. பார்த்த நாள்: 2009-02-04. 
 14. Moss, Corey (2006-04-10). "Jesse McCartney Hopes To Blow Your Minds With Next Single". MTV. http://www.mtv.com/news/articles/1528180/20060407/mccartney__jesse.jhtml. பார்த்த நாள்: 2009-02-04. 
 15. Vena, Jocelyn (2008-12-12). "Jesse McCartney Follows Justin Timberlake's Example As His Music Matures". MTV. http://www.mtv.com/news/articles/1601238/20081212/mccartney__jesse.jhtml. பார்த்த நாள்: 2009-02-03. 
 16. Harris, Chris (2008-12-04). "Lil Wayne, Coldplay Lead Grammy Nominations". MTV. http://www.mtv.com/news/articles/1600678/20081204/coldplay.jhtml. பார்த்த நாள்: 2009-02-21. 
 17. Zfat, Natalie (2008-08-20). "Jesse McCartney Plans "Idol" Tunes, Tour, TV Projects". Rolling Stone இம் மூலத்தில் இருந்து 2009-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090131170231/http://www.rollingstone.com/rockdaily/index.php/2008/08/20/jesse-mccartney-plans-idol-tunes-tour-tv-projects. பார்த்த நாள்: 2009-02-04. 
 18. "Little Kids Rock". Hang 10 with Jesse McCartney. Archived from the original on அக்டோபர் 10, 2007. பார்க்கப்பட்ட நாள் December 8, 2007.
 19. Tecson, Brandee (2005-08-18). "Jesse McCartney Seeks Help From Insanely Brilliant Neptunes". MTV. http://www.mtv.com/news/articles/1507779/20050817/mccartney__jesse.jhtml. பார்த்த நாள்: 2009-02-04. 
 20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". City of Hope. 2009-08-18 இம் மூலத்தில் இருந்து 2012-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121029134152/http://www.cityofhope.org/giving/fundraising-support-groups/music/concert-for-hope/Pages/default.aspx. பார்த்த நாள்: 2009-11-10. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசி_மெக்கார்ட்னி&oldid=3925111" இலிருந்து மீள்விக்கப்பட்டது