ஜெசிக்கா காக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெசிக்கா காக்ஸ்
ஜெசிக்கா காக்ஸ்
ஜெசிக்கா காக்ஸ்
பிறப்புஜெசிக்கா காக்ஸ்
பெப்ரவரி 2, 1983 (1983-02-02) (அகவை 39)[1]
ஐக்கிய அமெரிக்கா சியர்ரா விஸ்டா, அரிசோனா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்[1]
இருப்பிடம்துஸ்கான், அரிசோனா
மற்ற பெயர்கள்கானா தோதோவில், கானா: அயெர்கீ தீதி
இனம்பிலிபினோ அமெரிக்கர்[1]
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க நாடுகள்
படித்த கல்வி நிறுவனங்கள்அரிசோனா பல்கலைக்கழகம்[1]
பணிஉணர்ச்சிமயமான பேச்சாளர்
செயற்பாட்டுக்
காலம்
நவம்பர் 2005 முதல்
பணியகம்ஜெஸ்ஸிகா மோட்டிவேசனல் சர்வீசசு (Jessica Cox Motivational Services)
அறியப்படுவதுகைகளற்ற நபர் நீரில் மூழ்குதல், விமானம் ஓட்டுதல், வாகனம் ஓட்டுதல் போன்றவற்றிற்காக[1]
சமயம்ரோமன் கத்தோலிக்கர்[1]
விருதுகள்கின்னஸ் உலக சாதனை: கால்களால் விமானம் ஓட்டிய ஒரே நபர்[1]
வலைத்தளம்
www.rightfooted.com

ஜெசிக்கா காக்ஸ் (Jessica Cox, பிறப்பு: அரிசோனாவில் 1983-ம் ஆண்டு) உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர், கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர்.[2][3][4] இவர் பிறக்கும் போது இரு கைகளும் இன்றி பிறந்தார். இது பிறவிக் குறைபாடு ஆகும்.[5] மூன்று ஆண்டுகள் கடின பயிற்சிக்குப் பிறகு தன்னுடைய விமான ஓட்டுநர் உரிமத்தை அக்டோபர் 10, 2008 அன்று பெற்றார்.

இவர் இலகுரக விமானம் (10,000 அடி வரையிலும்) ஓட்டுவதில் பயிற்சியும், ஆபிள் ப்ளைட் நிறுவனத்தின் உதவித்தொகையையும் பெற்றார்.[2][5][6] தன்னுடைய பதினான்காவது அகவை வரையிலும் தன்னுடைய செயற்கைக் கையை உபயோகப்படுத்தவில்லை.[6]. தன்னுடைய கைகளுக்குப் பதிலாக, கால்களையே பெரும்பாலும் உபயோகப்படுத்தும் இவர் கார் ஓட்டுநர் உரிமமும் வைத்துள்ளார் (தடையற்ற கார் ஓட்டுநர் உரிமம்). இவருடைய கார்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் உபயோகப்படுத்தி வருகிறார். இவர் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்வதிலும் தேர்வு பெற்றுள்ளார். தன்னுடைய காஸ் இணைப்பது, மூக்குக் கண்ணாடியில் உள்ள குவியங்களை மாற்றுவது உள்ளிட்டவைகளைப் பிறருடைய உதவிகளை நாடாமல் தானே செய்கிறார்.[7][8] இவர் ஒரு பயிற்சிபெற்ற சுகூபா என்னும் ஒரு வகையான நீர் மூழ்குதல் வீராங்கனை ஆவார்.[7] காக்ஸ், அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது உணர்ச்சிமயமான பேச்சாளராக இருந்து வருகிறார்..[5][7]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 About Jessica. rightfooted.com. Retrieved on 2011-12-08.
  2. 2.0 2.1 Jessica Cox has One Pilot's License, Two Black Belts, and Zero Arms. பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம். DisaboomLive. Retrieved on 2011-04-09.
  3. About Jessica. Right Footed. Retrieved on 2011-04-09.
  4. Meet world's first armless pilot Jessica Cox | thetelegraph.com.au. Dailytelegraph.com.au (2008-12-09). Retrieved on 2011-04-09.
  5. 5.0 5.1 5.2 Woman born with no arms becomes first pilot to fly plane using only feet. Telegraph (2008-12-08). Retrieved on 2011-04-09.
  6. 6.0 6.1 New feat with her feet: Tucsonan, born minus arms, earns pilot’s license – Tucson Citizen Morgue (1992–2009). Tucsoncitizen.com (2008-12-02). Retrieved on 2011-04-09.
  7. 7.0 7.1 7.2 Messina | Messina. Tucson Weekly. Retrieved on 2011-04-09.
  8. Learning to Scuba Dive Regardless of Disability Status | Inclusive Fitness Coalition பரணிடப்பட்டது 2017-09-25 at the வந்தவழி இயந்திரம். Incfit.org (2010-02-03). Retrieved on 2011-04-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசிக்கா_காக்ஸ்&oldid=3214041" இருந்து மீள்விக்கப்பட்டது