உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெகந்நாத் பகாடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகந்நாத் பகாடியா
அரியானா ஆளுநர்
பதவியில்
27 சூலை 2009 – 26 சூலை 2014
முன்னையவர்ஏ. ஆர். கிட்வாய்
பின்னவர்காப்தன் சிங் சோலங்கி
பீகார் ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
3 மார்ச்சு 1989 – 2 பிப்ரவரி 1990
முன்னையவர்ஆர். டி. பிரதான்
பின்னவர்முகமது யூனுஸ் சலீம்
9வது இராஜஸ்தான் முதலமைச்சர்
பதவியில்
6 சூன் 1980 – 13 சூலை 1981
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்சிவ சரண் மாத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-01-15)15 சனவரி 1932
பரத்பூர் மாவட்டம், பரத்பூர் சமஸ்தானம், இந்தியா
இறப்பு19 மே 2021(2021-05-19) (அகவை 89)
குருகிராம், அரியானா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாந்தி பகாடியா
மூலம்: [1]

ஜெகந்நாத் பகாடியா (15 சனவரி 1932-19 மே 2021) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இராசத்தானின் முன்னாள் முதலமைச்சராகவும், அரியானாவின் ஆளுநராகவும், பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் 19 மே 2021 அன்று கோவிட்-19 பெருந்தொற்றால் இறந்தார்.[1][2]

இளமையும் கல்வியும்

[தொகு]

பகாடியா இராசத்தான் மாநிலத்தின் இன்றைய பரத்பூர் மாவட்டத்தின் புசாவர் நகரில் ஒரு தலித் குடும்பத்தில் 1932 சனவரி 15 அன்று நதீலால் பகாடியா மற்றும் சந்தா தேவிக்கு மகனாகப் பிறந்தார்.[3][4] முதுகலை மற்றும் இளநிலைச் சட்டப் படிப்பினை முறையே எம். எஸ். ஜே. கல்லூரி, பரத்பூர், மகாராஜா கல்லூரி, ஜெய்ப்பூர் மற்றும் இராசத்தான் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரிகளில் முடித்துள்ளார்.[5] இவர் அம்பேத்காரைப் பின்பற்றுபவர் ஆவார்.[6]

அரசியல்

[தொகு]

இராசத்தான் முதல்வராக

[தொகு]

1980 சூன் 6 முதல் 1981 சூலை 14 வரை இராசத்தான் மாநில முதலமைச்சராக இருந்தார். இராசத்தான் மாநில முதல்வராகப் பதவி வகித்த முதல் தலித் ஆவார்.[4][1] பகாடியா 1998 முதல் 2008 வரை மற்றும் 1980 முதல் 1990 வரை இராசத்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[7]

மக்களவை உறுப்பினராக

[தொகு]

பகாடியா 2ஆவது மக்களவையில் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி மற்றும் 4ஆவது, 5ஆவது மற்றும் 7ஆவது மக்களவைகளில் இராசத்தானின் பயானா மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[8] இவரது மனைவி சாந்தி பகாடியா மக்களவை உறுப்பினராக இருந்தார்.

ஆளுநராக

[தொகு]

பகாடியா 3 மார்ச் 1989 முதல் 2 பிப்ரவரி 1990 வரை பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.[9] பின்னர், இவர் சூலை 27,2009 முதல் சூலை 26,2014 வரை அரியானா ஆளுநராகப் பணியாற்றினார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Jagannath Pahadia, first Dalit CM of Rajasthan, dies of Covid". The Times of India. 20 May 2021. Retrieved 20 May 2021.
  2. "Former Rajasthan CM Jagannath Pahadia dies of COVID-19". The Hindu. 19 May 2021. Retrieved 19 May 2021.
  3. "Status quo for Dalits: caste shame for Rajasthan". Hindustan Times (in ஆங்கிலம்). 2013-11-20. Retrieved 2020-09-16.
  4. 4.0 4.1 "जगन्नाथ पहाड़िया: राजस्थान के पहले दलित मुख्यमंत्री जो बस 13 महीने सीएम रह सके". LallanTop - News with most viral and Social Sharing Indian content on the web in Hindi (in இந்தி). Retrieved 2020-09-16.
  5. Bohra, Sanjay (2020-01-24). "Rajasthan Congress govt lets Vasundhara Raje keep bungalow but moves to evict its own ex-CM". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-09-16.
  6. "बाबा साहब भीमराव अम्बेडकर के संदेश को आत्मसात करें: पहाड़िया". Dainik Jagran (in இந்தி). Retrieved 2021-05-22.
  7. Iqbal, Mohammed (19 May 2021). "Former Rajasthan CM Jagannath Pahadia dies of COVID-19 - The Hindu". The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/former-rajasthan-cm-jagannath-pahadia-dies-of-covid-19/article34601213.ece. 
  8. "The Tribune, Chandigarh, India - Haryana". www.tribuneindia.com. Retrieved 2020-09-16.
  9. "राजस्थान का रण: 'लोग इस जहर को पीकर मर रहे थे, इसलिए मैंने राजस्थान में शराब पर रोक लगवाई'". Patrika News (in hindi). 8 October 2018. Retrieved 2020-09-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "Pahadia to be sworn in as Haryana governor on Monday". Hindustan Times (in ஆங்கிலம்). 2009-07-26. Retrieved 2020-09-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகந்நாத்_பகாடியா&oldid=4083557" இலிருந்து மீள்விக்கப்பட்டது