உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெகந்நாத் சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகந்நாத் சர்க்கார்
ஜெகந்நாத் சர்க்கார் ஒப்பம்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்தாபாசு மண்டல்
தொகுதிஇராணாகாட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சனவரி 1963 (1963-01-02) (அகவை 61)
பாங்குரா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்2
வாழிடம்நதியா மாவட்டம்-741404
கல்விஇளங்கலை கல்வியியல்
முன்னாள் கல்லூரிகல்யாணிப் பல்கலைக்கழகம்

ஜெகந்நாத் சர்க்கார் (Jagannath Sarkar; பிறப்பு 2 சனவரி,1963) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 முதல் மேற்கு வங்காளம் இராணாகாட் மக்களவை தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சர்க்கார் 2 சனவரி 1963 அன்று மேற்கு வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்தின் தாஷுலி கிராமத்தில் பீம் சந்திர சர்க்கார் மற்றும் நானி பாலா சர்க்கார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இவர் 1984-இல் சாந்திபூர் கல்லூரியில் இளங்கலை கலை பட்டமும், கல்யாணி பல்கலைக்கழகத்தில் <id1 a="" href="./Bachelor_of_Education" rel="mw:WikiLink" இல்="">இளங்கலை கல்வி பட்டமும் பெற்றார்.[2] </id1>இவர் அர்பிதா சர்காரை (பைத்ய) 2 நவம்பர் 1999 அன்று மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சர்க்கார் ஆசிரியர் மற்றும் விவசாயி ஆவார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சர்க்கார் பாரதிய ஜனதா கட்சி நதியா மாவட்ட பிரிவின் பொதுச் செயலாளராக உள்ளார். முகுத் மணி அதிகாரியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2019 ஏப்ரல் 10 அன்று, கட்சி இவரை 2019 இந்திய பொதுத் தேர்தலுக்கு இராணாகாட் தொகுதி மாற்று வேட்பாளராகப் பரிந்துரைத்தது.[3] மே 23 அன்று, இவர் தனது நெருங்கிய போட்டியாளரான திரிணாமுல் காங்கிரசு கட்சியின் ரூபாலி பிசுவாசைத் தோற்கடித்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 26 சூன் 2021 அன்று, "தனது பெயரை அவதூறு செய்ததற்காகவும், தன்னைப் பற்றிய தவறான செய்திகளுக்காகவும்" சமூக ஊடக பயனர் மீது புகார் அளித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 28 January 2021.
  2. "Jagannath Sarkar(Bharatiya Janata Party(BJP)):Constituency- Ranaghat(West Bengal) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 January 2021."Jagannath Sarkar(Bharatiya Janata Party(BJP)):Constituency- Ranaghat(West Bengal) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 28 January 2021.
  3. "মনোনয়নপত্র খারিজ মুকুটমণি অধিকারীর, রানাঘাটে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার" [Nomination paper of Mukotmoni Adhikari has been rejected, BJP's Ranaghat candidate is Jagannath Sarkar] (in Bengali). Sangbad Pratidin. 10 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
  4. "Ranaghat Election Results 2019 Live Updates: Jagannath Sarkar of BJP Wins". News18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகந்நாத்_சர்க்கார்&oldid=4008382" இலிருந்து மீள்விக்கப்பட்டது