ஜூலூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜூலூக்கள் என்ற பழங்குடியினர், நெட்டால் என்ற ஆப்பிரிக்கப் பகுதியில் கி.பி. 1400 ஆண்டு முதல் 1800 ஆண்டு வரை வாழ்ந்துவந்த நிகோனி பழங்குடிகளுள் ஒருவகையினர் ஆவர். 1840 ஆம் ஆண்டில் ஜுலு நாட்டின் பெரும் பகுதி போயர் ஆதிக்கத்தின்கீழ் வந்து சேர்ந்தது. ஆனால் 1887 ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் அவர்களுடைய அரசன் சொல்லைக் கேளாமல் இந்நாட்டைத் தங்களுடையதாக்கிக் கொண்டனர். இப்போது மக்கள் ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தார் அரசனை அங்கீகரிக்கிறார்கள். இவர்களில் பலர் இப்போது கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சுரங்கங்களிலும் பண்ணைகளிலும் வேலை செய்து பிழைக்கிறார்கள். ஜூலுரலாந்து 1897-ல் நெட்டாலுடன் இணைக்கப்பட்டது. இது தென் ஆப்பிரிக்காவில் கிழக்குக் கடற்கரை ஒரத்தில் சுவாஸிலாந்துக்கும் டுகேலா நதிக்கும் இடையில் இருக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலூக்கள்&oldid=3539797" இலிருந்து மீள்விக்கப்பட்டது