ஜூலீ காய்னேசு உலுட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜூலீ காய்னேசு உலுட்சு (Julie Haynes Lutz) ஓர் அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் கோள் வளிம ஒண்முகில்களையும் ஒன்றிய இரும விண்மீன்களையும் ஆய்வு செய்கிறார்.[1] இவர் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் போயிங் தகைமை கணிதவியல், அறிவியல் கல்வி பேராசிரியரும் வானியல் திட்ட இயக்குநரும் ஆவார்.[2] இவர் 2000 இல்லிவர் வாசிங்டன் பல்கலைக்கழ்கத்துக்குச் சென்று அங்கு உயர்தகமைப் பேராசிரிராகப் பணியாற்றுகிறார்.[1]

இவர் இளவல் பட்டப் படிப்பைச் சாந்தியாகோ அரசு பல்கலைக்கழகத்தில் படித்தார்; முனைவர் பட்டத்தைஅர்பானா சாம்பைனில் உள்ள இல்லினாயிசு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[2] இவர் அங்கு மாணவராக இருந்தபோது உடன் படித்த வானியல் மாணவராகிய தாமசு ஈ. உலுட்சைச் சந்தித்து திருமணம் செய்துகொண்டுளார்.[3]

இவர் 1971 இல் வாழ்சிங்டன் அர்சு பல்கலைக்கழகத்தில் புல உறுப்பினராக்ச் சேர்ந்தார். இங்கு இவர் 1992 முதல் 1996 வரை தனி, பயன்முறைக் கணிதவியல் துறையின் தலைமையேற்றுள்ளார். மேலும் இவர் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி அறிவியல் கல்வி மேம்பாட்டிலும் ஈடுபட்டார்.[2] இவர்1991 முதல் 1993 வரை பசிபிக் வனியல் கழகத்தின் தலைவரக இருந்துள்ளார்.[2][4]

இவர் அரசு வானியல் கழகத்திலும்[5] அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்திலும் ஆய்வுறுப்பினரக இருந்துள்ளார்.[2]

ஒன்றிய நீக்ரோ கல்லூரி நிதி 2004 இல் இவருக்கும் இவரது கணவருக்கும் வானியலாளர் ஜார்ஜ் வாலர்சுட்டீனூக்கும் நிறுவன வளர்ச்சிக்காக நெடுங்காலமாக நிதி திரட்டியமைக்காக குடியரசுத் தலைவர் விருதை அளித்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lutz, Julie, University of Washington Department of Astronomy, 2018-02-18 அன்று பார்க்கப்பட்டது
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Julie Lutz Named Boeing Distinguished Professor", WSU News, Washington State University, May 5, 1997, 2018-02-18 அன்று பார்க்கப்பட்டது
  3. R. B., Hanson; C. A., Murray, "Obituary: Thomas Edward Lutz, 1940–1995", Bulletin of the American Astronomical Society, 27 (4): 1479–1480, Bibcode:1995BAAS...27.1479H
  4. Fraknoi, Andrew; Flynn, Jack; Stern, Al, Past ASP Board Presidents and Executive Directors, Astronomical Society of the Pacific
  5. Sleeman, Elizabeth (2001), "LUTZ, Julie Haynes", The International Who's Who of Women 2002, Psychology Press, pp. 342–343, ISBN 9781857431223
  6. Chan, Sharon Pian (March 4, 2004), "Black-college fund richer thanks to UW scholar", The Seattle Times