ஜூலி 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூலி 2
இயக்கம்தீபக் சிவதாசனி
தயாரிப்புவிஜய் நாயர்
தீபக் சிவதாசனி
பலாஜ் நிகாலனி
கதைபாகீம் சௌத்ரி
(உரையாடல்)
திரைக்கதைதீபக் சிவதாசனி
இசைவிஜூ ஷா
ரூஃப் பேண்ட்
அத்திஃப் அலி
ஜாவேத்-மொஹ்சின்
நடிப்புராய் லட்சுமி
ஒளிப்பதிவுசமீர் ரெட்டி
படத்தொகுப்புஆசிப் அலி ஷேக் தான்
கலையகம்ட்ரையம்ப் டாக்கீஸ்
விநியோகம்பஹ்லாஜ் நிஹலனி
வெளியீடுவார்ப்புரு:Filmdate
ஓட்டம்159 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

ஜுலி 2 (Julie 2) என்பது ஒரு இந்தி திரில்லர் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி, இணைந்து தயாரித்தவர் தீபக் சிவதாசனி ஆவார். இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் நாயர்.[1] இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் ராய் லட்சுமி நடித்து இந்தி படவுலகில் அறிமுகமாகியுள்ளார்.[2][3] இது சிவதாசனின் முந்தைய படமான ஜூலி (2004) படத்தின் தொடர்ச்சியாகும்.

இப்படத்திற்கு விஜய் ஷா பின்னணி இசையை வழங்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை சமீர் ரெட்டி கையாண்டு இருக்கிறார். படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு 2015 ஆண்டு துவங்கியது. படமானது மும்பை, ஐதராபாத்து , துபாய். ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் சுவரோட்டியானது 2016 பெப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது.

படமானது 2017 நவம்பர் 24 அன்று வெளியிடப்பட்டது.[4]

கதை[தொகு]

பெண் உச்சநட்சத்திரமாக இருக்கும் ஜூலி, தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் சமயம். நண்பர்கள் மத்தியில், தனது வாழ்க்கை ரகசியங்கள் பலவற்றைப் பகிரங்கமாகச் சொல்ல அது ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக மாறுகிறது.

இதற்கு அடுத்த நாள் தன் பெண் மேலாளருடன் ஒரு நகைக் கடைக்குச் செல்கிறார் ஜூலி. அங்கே வரும் சில முகமூடி மனிதர்கள், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு பொதுமக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அப்படியே ஜூலியையும் சுட்டுவிட்டுச் செல்கின்றனர். துப்பாக்கி குண்டு காயத்தால் ஜுலி கோமா நிலையில் மருத்தவமனையில் இருக்கிறார்.

இந்த வழக்கை விசாரிக்க காவல் துறையால் நியமிக்கப்படும் ஸ்ரீவத்சவா இதில் தொடர்புடைய நான்கு திருடர்களைப் பிடித்து விசாரிக்கிறார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களின் முதன்மை நோக்கம் ஜுலியைக் கொல்வதே என்றும், ஆனால் அதை மறைக்க கொள்ளையடிக்க வந்ததுபோல் வந்ததாக தெரிகிறது.

இதன்பிறகு ஜூலியின் பெண் உதவியாளராக இருந்த ரத்தியிடம் ஜூலி பற்றி விசாரிக்கிறார். ரத்தி ஜுலியின் கடந்த கால வாழ்வைத் தெரிவிக்கிறார். ஜூலி தான் ஒரு சினிமா நடிகையாக வேண்டும் என்கிற ஆசையுடன் வாய்ப்புத் தேடி அலைகிறார். இச்சூழலில் ஜூலியின் வளர்ப்புத் தந்தையால் திரைத் துறையில் இருக்கும் ஒரு நபருடன் இணக்கமாக இருக்கம்படி ஜூலி வற்புறுத்தப்படுகிறார். இதை ஏற்க மறுத்த ஜுலி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, தனது குடும்பத் தோழியான ரத்தியிடம் வந்து சேர்கிறார்.

ரத்தியின் உதவியால் ஒரு படத்தில் நடிக்க ஜூலிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்திற்கு நிதி உதவி செய்திருக்கும் நபரின் பார்வை ஜூலிமீது விழுந்து தன் ஆசையைத் தீர்த்துக்கொள்ள அழைக்கிறார். இதனால் படத்தின் இயக்குநருக்கும் நிதியாளருக்கும் ஏற்படும் சண்டையில் படம் எடுப்பது கைவிடப்படுகிறது. இதனால் மன மாற்றத்துக்கு உள்ளாகும் ஜுலி வேறு வழியின்றி ஒரு தயாரிப்பாளரைத் தேடிச் சென்று வாய்ப்புக்காக அவருடன் உறவு கொள்கிறார், அபபொழுது அந்த தயாரிப்பாளர் ஜூலியை தனது மேலாடையை அவிழ்து மார்பகத்தை காண்பிக்குமாரு கூறுகிறார், அதற்கு ஜூலியும் சிரித்துக்கொண்டே மேலாடையை அவிழ்து மார்பகத்தை காண்பிக்கிறார். இதையடுத்து ஜூலிக்கு கிடைத்த பட வாய்ப்புகளால் அவர் பிரபலமாகிறார்.

பின்னர் பெரிய நட்சத்திரமான ரவிக்குமாருடன் நடிக்க ஒப்பந்தமாகும் ஜூலி ரவிக்குமாரைக் காதலிக்கிறார். ஆனால் ரவியோ தன் ஆசைகளைத் தீர்த்துக்கொண்டு விலகி விட ஜூலியின் முதல் காதல் தோல்வியில் முடிகிறது. ஜூலிக்கு ஒரு துடுப்பாட்ட வீரருடன் மீண்டும் ஒரு காதல் பிறக்கிறது. இந்தக் காதலும் வழக்கம்போல தோல்வியில் முடிவடைகிறது.

இந்த நேரத்தில் இராசத்தானின் அரசகுடும்பத்தைச் சேர்ந்த சிவகாமியின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஜூலிக்கு வாய்ப்பு கிடைத்து, அவர் அதில் நடித்து வந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. ஜூலியை திட்டம் போட்டு கொல்ல முயன்றது யார், ஜூலி உயிர் பிழைத்தாரா, என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

2015 சூலையில், ராய் லட்சுமி ஜூலி (2004) தொடர் படத்தில் நடிக்க தீபக் சிவாதாசானியிடன் கையெழுத்திட்டார்.[5] இது இவரது 50வது படம், மற்றும் முதல் இந்தி திரைப்படமாகும்.[6]

படத்தின் முதல் சுவரொட்டி 2016 பெப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.[7] 2016 அக்டோபர் இடையில் ஒரு செவ்வியில் ராய் லட்சுமி கூறுகையில், இந்தப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாவதாக கூறினார் .[8][9]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலி_2&oldid=2789107" இருந்து மீள்விக்கப்பட்டது