ஜூலியனின் கோல்டன் கார்ப்
Jump to navigation
Jump to search
ஜூலியனின் கோல்டன் கார்ப் Jullien's golden carp | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை |
வரிசை: | Cypriniformes |
குடும்பம்: | Cyprinidae |
பேரினம்: | Probarbus |
இனம்: | P. jullieni |
இருசொற் பெயரீடு | |
Probarbus jullieni Sauvage, 1880 |
ஜூலியனின் கோல்டன் கார்ப் (Jullien's golden carp, Probarbus jullieni) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆறுகளின் படுகையில் காணப்படுகிற ஒரு நன்னீர்மீன் ஆகும். இது சைபிரினிட் குடும்பத்தைச் சார்ந்தது. இது அழிந்துவரும் இனத்தைச் சார்ந்தது. இதனுடைய எண்ணிக்கை பெருமளவிலான வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்திற்கான அணைகள் கட்டும் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளால் அழிந்து வருகிறது. ஜூலியனின் கோல்டன் கார்ப் என்ற பெயரை பிரெஞ்சு பாலேண்டலாஜிஸ்ட் மற்றும் ஹென்றி எமெய்ல் சாவேஜ் என்பவர்கள் வைத்தனர். இந்த மீனின் வேறு பெயர்கள் கார்பிலா, கோடிட்ட பார்ட் என்பதாகும்.
குணாதிசயங்கள்[தொகு]
- இவை நன்னீரில் மட்டுமே காணப்படும்
- இவை ரே பின்ட் மீன்
- இவை சைபிரினிடே குடும்ப வகையைச் சார்ந்தது.
- இவை 165 செ.மீ நீளம் வளரக்கூடியது. சுமார் 70 கிலோ எடை வரை இருக்கும்.
- இவை 50 ஆண்டு காலம் வரை வாழக்கூடியவை.