ஜூரோங் பறவைகள் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜூரோங் பறவைகள் பூங்கா சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் நகரில் அமைந்துள்ளது.

ஜூரோங் பறவைகள் பூங்கா முகப்புத் தோற்றம்

இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய பூங்காவாக இருக்கிறது. சிங்கப்பூர் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்தப் பறவைகள் பூங்கா, 0.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (49 ஏக்கர்) ஜுரோங் மலையின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. ஜூரோங் பகுதியின் மிக உயரமான பகுதியில் இப்பூங்கா அமைந்துள்ளது.[1][2]

வரலாறு[தொகு]

ஜூரோங் பூங்காவில் கரீபியன் பூநாரை

நிரந்தரமான பறவைகள் காட்சியக யோசனை முதன்முதலாக 1968 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிதி அமைச்சராக இருந்த கோக் கெங் சுய் என்பவரால் முன்வைக்கப்பட்டது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உலக வங்கிக் கூட்டத்தில் கோக் கெங் சுய் கலந்துகொள்ள சென்றபோது அந்நாட்டின் விலங்கியல் பூங்காவிற்கு பயணம் செய்தார். அப்பொழுது தோன்றிய யோசனையின் விளைவாகவே இப்பூங்கா துவங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கப்பூரர்களுக்கு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து தப்பித்து இயற்கையுடன் ஓய்வெடுக்கக்கூடிய இடமாக இப்பூங்கா இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்[3]. 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பறவைகள் பூங்கா அமைப்பதற்கான வேலை தொடங்கியது. ஜூரோங்கில் உள்ள உள்ள புக்கிட் பெரோபோக்கின் மேற்கு சரிவில், இந்த திட்டத்திற்காக 35 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[4] பறவை பூங்கா 1969 ஆம் ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[5]

இருப்பினும் ஜனவரி 3, 1971 இல், 3.5 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட ஜூரோங் பறவைகள் பூங்கா பொது மக்கள் பார்வையிட திறக்கப்பட்டது.[6]

காட்சிகள்[தொகு]

ஆப்பிரிக்க நீர்வீழ்ச்சி நடைபாதை[தொகு]

ஜூரோங் நீர்வீழ்ச்சி நடைபாதை நுழைவாயில்

ஆப்பிரிக்க நீர்வீழ்ச்சி நடைபாதை பறவைக்காட்சியானது 2 ஹெக்டர் (4.9 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நடைபாதை பறவைக்காட்சியாகும். 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்களை சேர்ந்த 600 சுதந்திரமாக பறந்து திரியும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன. 30 மீட்டர் (98 அடி) உயரத்துடன் உலகின் உயரமான மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஜுராங் நீர்வீழ்ச்சி இருக்கிறது.

டைனோசர் வம்சாவளியின பறவைகள் காட்சி[தொகு]

பூங்காவின் ஓரத்தில் டைனோசர்களின் முன்னோடிகளான பறக்க இயலா பறவைகளின் காட்சிக்கூடம் அமைந்துள்ளது. இங்கு தீக்கோழி, ஈமுக்கோழி, நியூ கினியத் தீக்கோழி ஆகிய உள்ளிட்ட பறவைகள் காணப்படுகின்றன.

தென் கிழக்காசிய நாட்டுப் பறவைகளின் நடைபாதை காட்சி[தொகு]

மரமேம்பால நடைபாதை

இதில் தென் கிழக்காசிய நாட்டுப் பறவைகள் மரங்களில் சுதந்திரமாக திரியவிடப்பட்டுள்ளன.

மர மேம்பால நடைபாதை[தொகு]

32,000 சதுர அடியில் பூங்காவை மேலிருந்து பார்க்கக்கூடிய வகையில் மர மேம்பால நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வண்ணக்கிளிகள் மற்றும் குறுங்கிளிகள் காணப்படுகின்றன.

பென்குயின் காட்சியறை[தொகு]

1.600 சதுர மீட்டரில் 69 அடி உயர வெப்பநிலை மாற்றக்கூடிய உள்ளரங்கில் ஐந்து வகையான பென்குயின் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பறவைகளின் பட்டியல்[தொகு]

ஒளிக்கோப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]