ஜூமர்
ஜூமெர் அல்லது ஜூமர் (Jhumair) என்பது இந்திய மாநிலங்களான பீகார், சார்க்கண்டு, சத்தீசுகர், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த ஒரு இந்திய நாட்டுப்புற நடனமாகும். [1] [2] இது சோட்டா நாக்பூர் பிராந்தியத்தின் பழங்குடியினர் அல்லாத சதான் இன மக்களின் நாட்டுப்புற நடனமாகும். [3] [4] [5] இது அசாமின் தேயிலைத் தோட்ட சமூகத்தினரிடையே மிகவும் பிரபலமானது. [6]
வரலாறு
[தொகு]ஜுமெர் ஒரு பழங்கால நாட்டுப்புற நடனமாகும். பீம்பேட்கா பாறை வாழிடங்களின் இடைக் கற்கால ஓவியங்களில் இதே போன்ற நடனம் காணப்படுகிறது.
செயல்திறன்
[தொகு]ஜுமெர் என்பது அறுவடை மற்றும் பண்டிகைகளில் நிகழ்த்தப்படும் ஒரு சமூக நடனமாகும். [7] நடனம் பெரும்பாலும் திறந்த வெளிகளில் நிகழ்த்தப்படுகிறது. தோல், மந்தர், பன்சி, நகரா, தாக் மற்றும் செனாய் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.
பாடல் வரிகள்
[தொகு]ஜுமெரின் வரிகள் அன்றாட மொழிகளில் கட்மைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையின் காதல் அல்லது இன்பங்கள் மற்றும் வேதனைகளை சித்தரிக்கின்றன.
வகைகள்
[தொகு]சோட்டா நாக்பூர் பகுதியில் ஜுமரின் பல்வேறு வகைகள் உள்ளன:
- குருமாலி ஜுமர், குட்மி மகாதோ சமூகத்தின் நாட்டுப்புற நடனம்.
- பஞ்ச்பர்கானியா ஜுமெர்
- நாக்புரி ஜூமர்
- கோர்தா ஜுமர்
வெவ்வேறு பிராந்தியத்தைச் சேர்ந்த ஜுமெர் / ஜுமர் ஒன்றுக்கொன்று வேறுவேறு பாணியில் வேறுபடுகிறது. [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jhumari Dance". dance.anantagroup.
- ↑ "Jhumar and other popular folk dances of Jharkhand". mythicalindia.
- ↑ "Encyclopædia Mundarica, Volume 2". books.google.com.
- ↑ "Out of the Dark". democratic world.in.
- ↑ "talk on nagpuri folk music at ignca". https://www.dailypioneer.com/2018/state-editions/talk-on-nagpuri-folk-music-at-ignca.html.
- ↑ "Karam Puja". assaminfo.
- ↑ http://www.dance.anantagroup.com/jhumari-dance/
- ↑ "Out of the Dark". democratic world.in.