ஜூனிபர் நெட்வொர்க்ஸ்
Appearance
ஜூனிபர் நெட்வொர்க்ஸ் (Juniper Networks) என்பது 1996 இல் நிறுவப்பட்ட கணினி வலையமைப்பு உபகரணங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும்.
இது சன்னிவேல், கலிபோர்னியா, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு கணினி வலையமைப்பு மின்னணு பொருட்கள் வடிவமைப்பு மற்றும் அதிக செயல்திறன் கொண்ட இணைய நெறிமுறை பிணைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்கிறது.
ஜூனிபரின் முக்கிய கணினி வலையமைப்பு பொருட்கள் ஜூனிபர் திசைவிகள், ஜூனிபர் ஈதர்நெட் சுவிட்சுகள் மற்றும் வலையமைப்பு பாதுகாப்பு (Network Security Products) ஆகும்.
ஜூனோஸ் (Junos) என்பது ஜூனிபர் தயாரித்த சொந்த கணினி வலையமைப்பு இயக்கு தளம், அவை அவர்களின் அணைத்து சொந்த தயாரிப்புகளிலும் இடம் பெறுகின்றன.
வர்த்தகரீதியில் சிஸ்கோ சிஸ்டம்ஸ் இதன் மிக பெரிய போட்டி நிறுவனமாகும்.