உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூடி கிரேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூடி கிரேர்
பிறப்புஜூடித் தெரேஸ் எவன்ஸ்
சூலை 20, 1975 (1975-07-20) (அகவை 49)
டிட்ராயிட், டிட்ராயிட், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை, நகைச்சுவையாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
டீன் ஈ. ஜான்சன் (தி. 2011)

ஜூடித் தெரேஸ் எவன்ஸ் (ஆங்கில மொழி: Judith Therese Evans) (பிறப்பு:சூலை 20, 1975) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை, நகைச்சுவையாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் பெரும்பாலும் ஒரு குணச்சித்திர நடிகை என்று அழைக்கப்படுகிறார்[1] மற்றும் வாட் வுமேன் வாண்ட் (2000), 13 கோயிங் ஒன் 30 (2004), 27 ட்ரெஸ்ஸஸ் (2008), லவ் & அதர் ட்ரக்ஸ் (2010), டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ் (2014),[2][3] ஜுராசிக் வேர்ல்ட் (2015)[4] போன்ற பல வகையான படங்களில் தோன்றியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற திரைப்படங்களில் 'மேகி லாங்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[5]

கிரேர் தொலைக்காட்சியில் 'ஆர்ச்சர்' (2009-தற்போது வரை) என்ற நகைச்சுவை இயங்குபடத் தொடரில் செரில் டன்ட் என்ற குரல் பாத்திரத்தில் மிகவும் பிரபலமானவர். அதை தொடர்ந்து அர்ரெஸ்ட்ஸ் டெவெலப்மென்ட் (2003–2018),[6] டூ அண்டு எ ஹாஃப் மென் (2007–2015), மெரிட் (2014–2015), மற்றும் கிடிங் (2018–2020) ஆகிய நகைச்சுவைத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bramesco, Charles (March 28, 2017). "Fact: Judy Greer Is The Best Person In Hollywood". Nylon. பார்க்கப்பட்ட நாள் September 19, 2018.
  2. "Exclusive: Judy Greer Joins Planet of the Apes -- Vulture". Vulture. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
  3. Kit, Borys (October 20, 2015). "Judy Greer Returning to "Planet of the Apes" (Exclusive)". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் October 21, 2015.
  4. "Judy Greer Joins 'Jurassic World'". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 2014-04-03.
  5. D'Alessandro, Anthony (October 21, 2018). "'Halloween' Box Office Second-Best Ever In October With $77.5 Million Opening". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் July 14, 2020.
  6. Goldman, Eric (August 14, 2009). "Judy Greer Gets Animated with Glenn Martin, DDS and Archer". IGN. பார்க்கப்பட்ட நாள் July 30, 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூடி_கிரேர்&oldid=3118882" இலிருந்து மீள்விக்கப்பட்டது