உள்ளடக்கத்துக்குச் செல்

ஜுபின் கார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூபீன் கார்க்
2015 இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்க்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1972-11-18)18 நவம்பர் 1972
துரா, India
இறப்பு19 செப்டம்பர் 2025(2025-09-19) (அகவை 52)
சிங்கப்பூர்
இசை வடிவங்கள்
இசைத்துறையில்1992–2025

ஜூபீன் கார்க் (18 நவம்பர் 1972 – 19 செப்டம்பர் 2025) என்பவர் ஒரு இந்திய இசைக் கலைஞராவார். இவர் அசாமி, வங்காளம், இந்தி போன்ற மொழித் திரைப்படங்களிலும் தனியார் இசை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார்.[1] மேலும் பிஷ்ணுப்ரியா மணிப்புரீ, ஆதி, போடோ, திம்மசா, ஆங்கிலம், கோல்பரியா, குஜராத்தி, கன்னடம், கரிபி, மலையாளம், மராத்தி, நேபாளி, போச்புரி, ஒடியா, நாகபுரி, சமசுகிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, திவா, உருது உள்ளிட்ட நாற்பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.[2][3] ஆனந்தலஹரி, தோல், டொதரா, நூதன முரசுகள், கித்தார், சுபிலம், ஆர்மோனியம், மாண்டலின், மின்னணு விசைப்பலகை, கைம்முரசு இணை, மேலும் பல மோதுகைக்கருவிகளையும் வாசித்துள்ளார்.[4] அசாமின் பிரபலமான இசைக்கலைஞராகவும் அதிகம் ஊதியம் பெற்ற பாடகராகவும் இருந்துள்ளார்.[5][6] 33 ஆண்டுக் கால கலைவாழ்வில் 40,000+ பாடல்களைப் பாடியுள்ளார்.[7][8][9][10]

தனி வாழ்க்கை

[தொகு]
கரிமாவுடன் ஜூபீன்

1972 நவம்பர் 18 இல் மேகாலய துரா நகரில் மோகினி மோகன் மற்றும் இலி போர்தகூர் என்கிற அசாமிய பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[11][12][13][14][15][16][17] சூபின் மேத்தா நினைவாக இவருக்கு ஜூபின் போர்தகூர் எனப் பெயரிடப்பட்டது.[18] தனது இரண்டாம் பெயரை கார்க் எனப் பின்னாளில் மாற்றிக் கொண்டார்.[19] ஜூபீனின் பூர்வீகக் குடும்பமானது அசாம் மாநில ஜோர்ஹாட் மாவட்ட ஜஞ்சியைச் சேர்ந்ததாகும்.[20][21] இவரின் தந்தை நீதித் துறை நடுவராகவும் பாடலாசிரியராகவும் இருந்துள்ளார். இவரது தாய் ஒரு பாடகராவார்.[22] ஜோர்ஹாட்டிலுள்ள கார்மேல் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். பிஜ்னி உயர்நிலைப்பள்ளியிலும் தமுல்போர் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். ஜே.பி.பல்கலைக்கழகத்தில் உயர் நிலைக் கல்வியை முடித்தார்.[23][24][25] பி. போராக் கல்லூரியில் பட்டப்படிப்பிற்குச் சேர்ந்தார் ஆனால் 1991 இல் இடைநிற்றல் அடைந்து பாடுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.[26][27] கோலாகாட்டில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த கரிமா சைக்கியாவைச் சந்தித்து 2002 பிப்ரவரி 4 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார்.[28] இவர் தன்னைச் சாதி சமயமற்றவராக அறிவித்துக் கொண்டார்.[29][30]

பொது வாழ்வு

[தொகு]

சமூகம், சமயம், அரசியல்வாதி தொடர்புடைய சம்பவங்களுக்கு அச்சமில்லாத வெளிப்படையான இவரின் பேச்சுக்கள் கவனம் பெற்றன. தனது சிறந்த பாடல்கள் மது குடித்த பின்னர் உருவாக்கியவை என்று மதுப்பழக்கத்தை வெளிப்படையாகப் பேசினார்.[31] அசாமில் நடைபெற்ற இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டார். ஊழல் அரசியல்வாதிகள் குறித்து இவர் பாடிய போலிடிக்ஸ் நகொரிபா பந்து என்ற பாடல் அதிகமாகக் கவனம் பெற்றது.[32][33] 2013 இல் ஒரு சிறுவனைக் கைநீட்டி அடித்ததற்கு 2017 இல் மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.[34][35] 2018 இல் தடகள வீரர் ஹிமா தாசுவிடம் கோழிக்கறி சாப்பிடுவதற்குப் பதில் மாட்டிறைச்சி சாப்பிடச் சொன்னார்.இந்தக் கருத்து அசாம் முழுவதும் சர்ச்சையானது[36][37] பூபேன் அசாரிகாவிற்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை விமர்சித்து இவரின் குறுங்காணொளி 2019 இல் அதிகம் பேசுபொருளானது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சத்யா ரஞன் போராக் ஹொஜாய் மாவட்டக் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.[38] 2019 இல் சில பிராமணர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துப் பின்னர் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.[39][40] கிருட்டிணன் கடவுளல்ல மனிதன் என்று 2024 ஏப்ரலில் நடைபெற்ற ஒரு பிஹு கச்சேரியில் கூறினார்[41] இதன் காரணமாக மாஜுலி மாவட்டத்திற்குள் நுழையத் தடைசெய்யப்பட்டார்.[42] தனது கலகுரு ஆடிஸ்டே அறக்கட்டளை மூலம் பலவேறு தொண்டுப் பணிகளைச் செய்து வந்துள்ளார்.[43] தனது திரைப்படமான கஞ்சன்ஜங்கா மூலம் அசாம் மாநில தேர்வாணையத்தில் நடைபெறும் ஊழலைப் பற்றி பேசியுள்ளார்.[44][45] வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கால்பந்து போட்டியில் விளையாடி நிதி திரட்டியுள்ளார்.[46] 2021 மே காலக்கட்டத்தில் கொரோனாவைரசுத் தொற்றின் போது குவகாத்தியிலுள்ள தனது இரண்டடுக்கு வீட்டை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த அனுமதித்தார்.[47]

இறப்பு

[தொகு]

2025 செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூர் நாட்டின் புனித ஜான் தீவு கடற்கரையில் உயிர்க் கவசமின்றிக் கடலில் நீச்சலடிக்கச் சென்று உயிரிழந்தார்.[48][49][50][51] நீரில் மூழ்கியவுடனே மீளுயிர்ப்புச் சுவாசம் அளிக்கப்பட்டு சிங்கப்பூர் தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு இவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது.[52][53]

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் இவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தனர்.[54][55] அசாமில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.[56][57][58] ஆமிர் கான், கங்கனா ரனாத், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், மூத்த பாடகர் ஹரிஹரன், பாடகர்கள் அலிஷா சினாய், மகாலட்சுமி ஐயர், கல்பனா படோவரி, ஷில்பா ராவ், சுனிதி சௌஹான், சகாரிகா, சிரேயா கோசல், தராலி சர்மா உள்ளிட்ட கலைத்துறையினரும் தங்களது இரங்கலைப் பகிர்ந்தனர்.[59][60][61][62][63]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ganguly, Ruman (26 March 2011). "Zubeen Garg on a different track". Indiatimes இம் மூலத்தில் இருந்து 8 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130308021824/http://articles.timesofindia.indiatimes.com/2011-03-26/news-interviews/29191918_1_zubeen-garg-bengali-films-bengali-version. 
  2. "Happy Birthday to Zubeen Garg, Assam's singing Legend and heartthrob of millions of fans turns 50 today". pragnews.com (in ஆங்கிலம்). Archived from the original on 27 March 2023. Retrieved 12 February 2023.
  3. "Singer Zubeen Garg hospitalised after head injury". The Indian Express. 20 July 2022. https://indianexpress.com/article/entertainment/music/singer-zubeen-garg-hospitalised-in-assam-after-head-injury-8041184/. 
  4. "Profile of Zubeen Garg – Singer, Music composer of Assam". assamspider.com இம் மூலத்தில் இருந்து 4 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170704073945/http://www.assamspider.com/resources/2469-Profile-Zubin-Garg-Singer-Music-composer.aspx. 
  5. "Barred from singing in Hindi, Assam singer leaves Bihu stage". The Indian Express (in ஆங்கிலம்). 16 April 2017. Retrieved 19 December 2020.
  6. "Zubeen Garg, Assamese superstar and voice of a generation, dies in Singapore scuba diving accident". The Indian Express (in ஆங்கிலம்). 19 September 2025. Retrieved 19 September 2025.
  7. "Thousands of fans bid adieu to Zubeen at Guwahati stadium" (in en-IN). தி இந்து. 21 September 2025. https://www.thehindu.com/entertainment/music/singer-zubeen-gargs-body-arrives-at-guwahati-airport-thousands-gather-to-get-last-glimpse/article70076293.ece. 
  8. Deb, Abhijit (19 September 2025). "From 'Anamika' to 'Ya Ali': Zubeen Garg, a man of many emotions, bids farewell" (in en). தி ஸ்டேட்ஸ்மேன். https://www.thestatesman.com/entertainment/from-anamika-to-ya-ali-zubeen-garg-a-man-of-many-emotions-bids-farewell-1503488612.html. 
  9. He is a young man who has preserved 35,000 songs of Zubeen Garg from 'Anamika' to 'Maya' (in ஆங்கிலம்), 18 November 2022, retrieved 20 November 2022
  10. 'After singing 35,000 songs, I don't need to take the Best Singer award' (in ஆங்கிலம்), 13 March 2023, retrieved 13 March 2023
  11. Borkotoky, Tonmoy (18 November 2019). "Zubeen Garg turns 48; fans shower him with birthday wishes". News Live TV. https://www.newslivetv.com/assam/zubeen-garg-turns-48-fans-shower-him-with-birthday-wishes/. 
  12. "Rockstar with a humane heart – Zubeen Garg turns 48 today – Sentinelassam" (in en). The Sentinel. 18 November 2020. https://www.sentinelassam.com/north-east-india-news/assam-news/rockstar-with-a-humane-heart-zubeen-garg-turns-48-today-512140. 
  13. Parashar, Utpal (29 July 2019). "'These Brahmins should be killed,' says Assam singer Zubeen Garg; cases filed". Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/these-brahmins-should-be-killed-says-assam-singer-zubeen-garg-cases-filed/story-QgaKOmiMcqiCEhzOc8K29O.html. 
  14. Sharma, Dristi (19 September 2025). "How Singer Zubeen Garg Got His Name". என்டிடிவி. https://www.ndtv.com/entertainment/how-singer-zubeen-garg-got-his-name-9307155. 
  15. "'Ya Ali' singer Zubeen Garg provided security after ULFA threat" (in en). இந்தியன் எக்சுபிரசு. 22 April 2013. https://indianexpress.com/article/entertainment/entertainment-others/ya-ali-singer-zubeen-garg-provided-security-after-ulfa-threat/. 
  16. "Zubeen Garg Biography, Zubeen Garg Profile - entertainment.oneindia.in". ஒன்இந்தியா (in ஆங்கிலம்). Archived from the original on 12 August 2013. Retrieved 25 September 2025.
  17. "Why Jibon Borthakur Chose to Become Zubeen Garg" (in en). Pratidin Time. 20 September 2025. https://www.pratidintime.com/latest-assam-news-breaking-news-assam/why-zubeen-borthakur-chose-to-become-zubeen-garg-10481588. 
  18. "Zubeen Garg, Popular Assamese Singer Zubeen Garg". www.indiaonline.in. Retrieved 20 August 2022.
  19. "Why Jibon Borthakur Chose to Become Zubeen Garg". Pratidin Time (in ஆங்கிலம்). Retrieved 26 September 2025.
  20. "Northeast's Sensation Zubeen Garg: Early Life, Career, Awards & Controversies". The Sentinel. 6 March 2021. https://www.sentinelassam.com/more-news/entertainment/wikipedia-of-northeasts-singing-sensation-zubeen-garg-527402. 
  21. "Asom Sahitya Sabha, Jorhat residents demand Zubeen Garg's last rites be held in hometown". The Assam Tribune (in ஆங்கிலம்). 20 September 2025. Retrieved 21 September 2025.
  22. Barman, Rini (14 May 2017). "The Language of Music". The Indian Express இம் மூலத்தில் இருந்து 15 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170515190432/https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/the-language-of-music-4654378/. 
  23. Saikia, Montu (2009). Zubeen Garg: Jibanar Para Ganaloi (in Assamese). Guwahati: Chandra Prakash. p. 114.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  24. "Expression of profound grief and mourning on the demise of Zubeen Garg". Jagannath Barooah University. 19 September 2025. Retrieved 22 September 2025.
  25. "From Jorhat's Roots to Assam's Soul: Remembering Zubeen Garg's Formative Years". Pratidin Time (in அமெரிக்க ஆங்கிலம்). 20 September 2025. Retrieved 21 September 2025.
  26. "USTM confers Hon. D.Litt. degree to Zubeen Garg at 10th convocation". USTM. Retrieved 16 September 2025.
  27. Rajkumar, Ankan (10 October 2019). "Zubeen's 'Kanchanjangha': A rebel without a cause". NORTHEAST NOW (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 20 August 2022.
  28. "Assam: Zubeen Garg to celebrate his birthday by releasing music album of 'Mission China'!". The North East Today. 18 November 2016. Archived from the original on 23 May 2017. Retrieved 8 September 2017.
  29. "I Don't Have Any Caste, Religion Or God: Zubeen Garg". Guwahati Plus. 29 July 2019. https://m.guwahatiplus.com/article/i-don-t-have-any-caste-religion-or-god-zubeen-garg/5862/amp#amp_tf=From%20%251%24s&aoh=17141538671889&referrer=https%3A%2F%2Fwww.google.com. 
  30. Phukan, Sandeep; Karmakar, Rahul (29 September 2025). "Zubeen Garg: The atheist who became god". The Hindu. https://www.thehindu.com/news/national/assam/zubeen-garg-the-atheist-who-became-god/article70105627.ece. 
  31. "Zubeen Garg once said 'most of my biggest songs were made when I was drunk called himself the George Best of music". ABP Live. 21 September 2025. https://news.abplive.com/entertainment/celebrities/zubeen-garg-once-said-most-of-my-biggest-songs-were-made-when-i-was-drunk-called-himself-the-george-best-of-music-1801266. 
  32. Sengupta, Aditi (26 December 2019). "'Don't mess with Assam': Zubeen Garg" (in en). @businessline இம் மூலத்தில் இருந்து 17 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200417192412/https://www.thehindubusinessline.com/blink/cover/dont-mess-with-assam-zubeen-garg/article30404699.ece. 
  33. "CAA 'not forgotten': Zubeen Garg". www.telegraphindia.com. Retrieved 24 October 2022.
  34. Free Press Journal. "Singer Zubeen Garg sentenced to three months jail, Rs 5,000 fine". https://www.freepressjournal.in/cmcm/singer-zubeen-garg-sentenced-to-three-months-jail-rs-5000-fine-for-this-reason. 
  35. "Zubeen convicted, gets bail". Telegraph India. 7 October 2017. Retrieved 4 October 2025.
  36. "'Zubeen was for all': Singer's death unites India's religiously torn Assam".
  37. "Assam: Zubeen tells Hima Das to consume beef for 'real strength'!". 15 July 2018.
  38. "FIR registered against Zubeen Garg for alleged 'unconstitutional' remark on Bharat Ratna". The Indian Express. 26 January 2019. https://indianexpress.com/article/north-east-india/assam/fir-registered-against-zubeen-garg-for-alleged-unconstitutional-remark-on-bharat-ratna-5556293/. 
  39. "Assam singer Zubeen Garg says,'These Brahmins should be killed'; case registered". 30 July 2019.
  40. Zubeen-Brahmin controversy: Zubeen Garg seeks apology for the brahmin controversy.
  41. Walker, Mark; Suhasini Raj (22 September 2025). "Zubeen Garg, Singer Who Charmed India With a Bollywood Hit, Dies at 52". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2025/09/22/world/asia/zubeen-garg-dead.html. 
  42. "Assam: Zubeen Garg Faces Ban From Majuli District Satra Mahasabha". Sentinel Assam. 26 April 2024. https://www.sentinelassam.com/north-east-india-news/assam-news/assam-zubeen-garg-faces-ban-from-majuli-district-satra-mahasabha. 
  43. "Beyond Bollywood" (in en). India Today. 5 November 2018 இம் மூலத்தில் இருந்து 2 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190102154758/https://www.indiatoday.in/magazine/nation/story/20181105-beyond-bollywood-1374988-2018-10-27. 
  44. "Zubeen's next film 'Kanchenjunga' to be based on APSC scam". G Plus (in ஆங்கிலம்). Archived from the original on 9 February 2019. Retrieved 18 September 2019.
  45. "Singing sensation Zubeen Garg and Team visits Dhemaji for Kanchanjangha Promotion". The Sentinel (in அமெரிக்க ஆங்கிலம்). 29 October 2018. Archived from the original on 31 August 2019. Retrieved 18 September 2019.
  46. "Soccer for charity in Assam". The Hans India. 5 October 2015. Archived from the original on 14 May 2019. Retrieved 14 May 2019.
  47. "Zubeen Garg offers his house to convert as Covid care centre". The Assam Tribune (in ஆங்கிலம்). 6 May 2021. Retrieved 19 June 2024.
  48. "Not scuba diving, singer Zubeen Garg was swimming without life jacket: Assam CM". The Indian Express (in ஆங்கிலம்). 20 September 2025. Retrieved 21 September 2025.
  49. "Zubeen Garg Death in Singapore: What We Know So Far". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 21 September 2025.
  50. "Zubeen Garg's cause of death revealed: Death certificate states singer died due to 'drowning'". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/zubeen-gargs-cause-of-death-revealed-death-certificate-states-singer-died-due-to-drowning/articleshow/124030064.cms. 
  51. "A beloved Indian singer drowned in Singapore. Now fans want answers". BBC. 9 October 2025. https://www.bbc.com/news/articles/cewn9gdjwdgo. 
  52. "Assamese cultural icon Zubeen Garg passes away" (in en-IN). தி இந்து. 19 September 2025. https://www.thehindu.com/entertainment/music/assams-popular-singer-zubeen-garg-dies-while-scuba-diving-in-singapore/article70069446.ece. 
  53. Sengupta, Bhaswati (19 September 2025). "Zubeen Garg Passes Away: Remembering Singer's Timeless Bollywood Hits" (in en). சிஎன்என்-ஐபிஎன். https://www.news18.com/photogallery/movies/bollywood/zubeen-garg-passes-away-remembering-singers-timeless-bollywood-hits-ws-l-9583825.html. 
  54. "Condolences pour in over death of singer Zubeen Garg" (in en-IN). தி இந்து. 19 September 2025. https://www.thehindu.com/entertainment/music/condolences-pour-in-over-death-of-singer-zubeen-garg/article70069962.ece. 
  55. "Singer Zubeen Garg passes away at 52: PM Modi expresses grief; Rahul Gandhi, Kharge pay tribute". The Times of India. 19 September 2025. https://timesofindia.indiatimes.com/india/assam-cm-himanta-biswa-sarma-mourns-zubeen-gargs-death-calls-him-assams-favourite-rockstar/articleshow/123996813.cms. 
  56. "Zubeen Garg cremation: Mourning period extended by one day". The Telegraph. 22 September 2025. https://www.telegraphindia.com/entertainment/zubeen-garg-to-be-cremated-with-full-state-honours-near-guwahati-on-september-23/cid/2124279. 
  57. "Assam declares three-day State mourning over singer Zubeen Garg's death" (in en-IN). தி இந்து. 20 September 2025. https://www.thehindu.com/news/national/assam/zubeen-garg-death-singapore-assam-state-mourning-three-days/article70073216.ece. 
  58. "Bengal CM Mamata Banerjee mourns singer Zubeen Garg's death". ThePrint. PTI. 19 September 2025. https://theprint.in/india/bengal-cm-mamata-banerjee-mourns-singer-zubeen-gargs-death/2747044/. 
  59. Sehgal, Chirag (26 September 2025). "Aamir Khan Pays Emotional Tribute To Zubeen Garg: 'We Are Deeply Saddened'" (in en). சிஎன்என்-ஐபிஎன். https://www.news18.com/movies/bollywood/aamir-khan-pays-emotional-tribute-to-zubeen-garg-we-are-deeply-saddened-ws-l-9597147.html. 
  60. P, Devadasan K. (21 September 2025). "Zubeen Garg's final journey: India bids tearful goodbye" (in en). கல்ப் நியூஸ். https://gulfnews.com/entertainment/zubeen-gargs-final-journey-india-bids-tearful-goodbye-1.500277469. 
  61. Khan, Lubna (22 September 2025). "Hariharan Pays Tribute After 'True Soul' Zubeen Garg's Death: 'He Belonged To People'" (in en). சிஎன்என்-ஐபிஎன். https://www.news18.com/movies/regional-cinema/hariharan-pays-tribute-after-true-soul-zubeen-gargs-death-he-belonged-to-people-aa-9588636.html. 
  62. Bhattacharya, Tanisha (19 September 2025). "Zubeen Garg Death: Tributes From Shaan, Papon And Others - "Devastated And Shocked"". என்டிடிவி. https://www.ndtv.com/entertainment/zubeen-garg-death-tributes-from-pritam-armaan-malik-and-others-devastated-and-shocked-9307008. 
  63. "'ভাইকে হারালাম', জুবিনের মৃত্যুতে বাকরুদ্ধ পাপন, শোকপ্রকাশ প্রীতম ও দেবের" (in bn). Sangbad Pratidin. 19 September 2025. https://www.sangbadpratidin.in/entertainment/cinema/zubeen-garg-death-pritam-papon-dev-jeet-ganguly-are-devastated-by-news/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுபின்_கார்க்&oldid=4444442" இலிருந்து மீள்விக்கப்பட்டது